Thulam Rasi Guru Peyarchi 2020 to 2021 in tamil

துலாம் ராசி அன்பர்களுக்கு, உங்கள் ராசிக்கு 4 ஆம் வீட்டில் படும் 6 ஆம் வீட்டில் அமர்கின்ற குரு பகவானின் பார்வையானது 10 ஆம், 12 ஆம், 2 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 10 ஆம் வீடு என்பது வேலை, தொழில், செயல்கள், பூஜை, கௌரவம், சமுதாய நிலை, சாதனைகள், வெற்றிகள் ஆகியவற்றையும், 12 ஆம் வீடு மோட்சம், நஷ்டம், செலவுகள், ரகசியங்கள், வெளிநாடுகளில் குடியேறுதல், முதலீடு, தான தர்மம் ஆகியவற்றையும், 2 ஆம் வீடு என்பது செல்வம், குடும்பம், பேச்சு மற்றும் குரல், எண்ணங்கள், ஆரம்பக் கல்வி, உலக உடமைகள், சொத்து, ஆடைகள், கோபம், வாத விவாதங்கள் ஆகியவற்றையும் குறிக்கிறது.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு முற்றிலும் சாதகமானது அல்ல. வேலை, தொழில், சொத்து, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் போன்ற அனுகூலங்களைப் பெறலாம். பணியிடத்தில் சில தடங்கல்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் சமார்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு இல்லையென்றாலும் உங்களது திறமையைக் கொண்டு முன்னேற்றம் காண்பீர்கள். நிலையான, கணிசமான வருமானம் கிடைக்கும்.

திடீர் லாபம், குடும்பச் சொத்து அல்லது பரம்பரை சொத்து வந்து சேரும் அனுகூலங்களும் கிட்டும் காலமிது. பெரிய சொத்துக்களுக்கு சட்டரீதியான வாரிசாகும் யோகம் உண்டு. உங்கள் பொருளாதார நிலை எப்படியாயினும் நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் காண்பீர்கள். சிலருக்கு வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். சுப நிகழ்வு செலவுகள் இருக்கும். மன அமைதியால் நல்ல உறக்கம் கிட்டும். உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படுவீர்கள். பிரியமானவர்களின் நம்பிக்கையும், ஆதரவையும் பெறுவீர்கள். தாயின் உடல் நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். உங்களது ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. சில தேவையற்ற போட்டி, பொறாமைகளால் மன அமைதியை இழக்கலாம்.

வேலை, தொழில்

உங்கள் முயற்சிகளுக்கு அலுவலகத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். கடின உழைப்பினால் வெற்றி கிட்டும். வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாகலாம். அல்லது வெளிநாட்டு தொடர்பு ஏற்படலாம். சிலருக்கு வெளிநாட்டில் குடியேறும் வாய்ப்பு கிடைக்கலாம். தொழில் சுமாராக நடைபெறும். தொழிலில் போட்டி, பொறாமைகளும் இருக்கும். புதியதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் நன்றாக யோசித்து செயலாற்றுவது சிறப்பு. கடினமான சூழல்களை கையாள வேண்டியிருக்கும்.

நிதி

வருமானம் கணிசமாக இருக்கும். அதே நேரத்தில் செலவுகளும் இருக்கும். வீடு, வண்டி, வாகனம் போன்றவற்றில் செலவுகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகளுக்கும் வாய்ப்புள்ளது. உங்களது சேமிப்பின் மூலமாக இந்த செலவுகளை கையாள வேண்டியிருக்கும். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரித்துக் கொள்ள முயல வேண்டும்.

குடும்பம்

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் காரணமான ஒற்றுமையின்மை ஏற்படலாம். விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்தால் நிலைமையை சமாளிக்கலாம். மூத்தவர்களுடன் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அவர்களை மதித்து நடந்தால் சுமூகமான உறவை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

கல்வி

மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. அதிகமான தன்னம்பிக்கை முயற்சியை பாதிக்கும். இதனால் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளை அடைய முடியாமல் போகலாம். விடா முயற்சி ஒன்றே சிறந்தது. மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படித்தால் சிறப்பான தேர்ச்சியை பெறுவீர்கள்.

காதலும், திருமண வாழ்க்கையும்

தம்பதியரிடையே நல்லிணக்கம் ஏற்பட ஏதுவான தருணம் இல்லை என்பதால் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பொறுமையை கடைப்பிடிக்கவும். அன்பும், அரவணைப்பும் கருத்து வேறுபாடுகளை காணாமல் போகச் செய்துவிடும். திருமணத்திற்காக காத்திருப்போர் தக்க வரன்களை நம்பிக்கையோடு தேடி அமைத்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம் சுமாராக இருக்கும். தொற்றிலிருந்து உங்களை காத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உடலின் மேற்பகுதிகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. நோய் சிறியதாக இருக்கும் போதே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. சாதாரணமான உபாதைகள் ஏற்பட்டால் அலட்சியமாக இருக்க வேண்டாம். எச்சரிக்கையோடு இருங்கள்.

எளிய பரிகாரங்கள்

  • ஓம் ப்ரஹம் ப்ருஹஸ்பதயே நமஹ என்ற குரு மந்திரத்தை, வியாழக்கிழமைகளில் 108 முறை ஜெபம் செய்யுங்கள்.

  • குரு காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள்.

  • சிவ வழிபாடு செய்யவும்.

  • ருத்ராபிஷேகம் செய்யலாம்.

  • முடிந்தால் 5 முக ருத்ராட்சம் அணியலாம்.

  • வியாழக்கிழமைகளில் எளிய உணவு வகைகளை உட்கொள்ளலாம்.

  • வியாழக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது.

Read more : https://www.astroved.com/articles/thulam-rasi-guru-peyarchi-palangal-tamil-2020-to-2021