ஜெயஜுலிட் அந்தோணிசாமி
(Candidate for the position of SFBATM President)
(Candidate for the position of SFBATM President)
வணக்கம்.
தமிழால் இணைவோம்
தரணியில் உயர்வோம்.
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் முன்னாள் நிர்வாகத்துணைத்தலைவியும், மன்றத்தின் மேனாள் தலைவர் மறைந்த திரு. ஆறுமுகம் பேச்சிமுத்து அவர்களின் மனைவியுமாகிய ஜெயஜூலிட் அந்தோணிசாமி, “Arujulit” எனும் நான், வரும் 2024 ஆம் ஆண்டின் மன்றத் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடுகிறேன்.
என்னைப் பற்றி சில வரிகள்:
- வளைகுடாப் பகுதியில் பள்ளியில்ஆசிரியராகவும் மற்றும்
15 வருடங்களுக்கு மேலாக தமிழ் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிகிறேன்.
- கடந்த 13 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்மன்றத்தில் பல்வேறு நிலைகளில் நான் தொண்டாற்றியுள்ளேன்,
- வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையில் 2015-ஆம் ஆண்டு முதல் தன்னார்வத் தொண்டு செய்து வருகிறேன்.
- 2020 -ஆம் ஆண்டு தமிழ் மன்றத்தில் துணைத்தலைவர்-நிர்வாகம் ஆக பதவி வகித்தேன்.
- நோய்தொற்று காலத்திலும் (Covid-19) புரவலர்களுக்கு பல சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்தி $50,000 நிதி திரட்டி தமிழ் பண்பாட்டு மையத்திற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் Covid -19 நிதி திரட்டல் நிகழ்ச்சி மூலம் $40,000 திரட்டி உதவி தேவைப் படுவோர்களுக்கு உதவினோம்.
- தலைவராக நான்,
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
என்ற குறளுக்கு இணங்க அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பேன்.
எனது முத்தாய்ப்பான மூன்று திட்டங்கள்:
1. மாபெரும் தமிழ் விழா ( TCC fundraising)
2. வேலை வாய்ப்பிற்கு வழிகாட்டுதல்+தொழில்முனைவு
3. வருடத்திற்கு இரு முறை அவைக்கூட்டம் (Town Hall meeting), மாதத்திற்கு ஒருமுறை உறுப்பினர் கூட்டம்
இதர திட்டங்கள்:
24X7 Emergency Service
Blood Drive
Marabu Kalai Kuzhu
Work closely with Government-Official
DOUBLE the Sponsorship
Membership-Drive/Member Benefits
Cricket/Marathon
BATM-Matrimonial
நன்றி!!
என்றும் நட்புடன்,
ஜெயஜுலிட் அந்தோணிசாமி, #TeamJulit
(Arujulit)
Youtube Link