கே.ஆர்.சீனிவாசன் (KRS
(Candidate for the position of SFBATM Vice President-Cultural)
(Candidate for the position of SFBATM Vice President-Cultural)
வணக்கம்!
தமிழால் இணைவோம்
தரணியில் உயர்வோம்.
நான் KR சீனிவாசன்(KRS), 2017 முதல் நமது தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவுள்ளேன். #TeamJulitல் 2024 ஆம் ஆண்டின் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத் துணைத்தலைவர் கலாச்சாரம் (VP - Cultural ) பொறுப்பிற்கு என்னை போட்டியின்றி தேர்வு செய்ததற்கு நன்றி.
About me :
நான் பல்வேறு தமிழ் மன்ற நிகழ்ச்சிகளில் தன்னார்வலனாக புகைப்படம், வீடியோ எடுத்தல் மற்றும் தொழில்நுட்ப அமர்வுகளில் (Tech meetups) தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். கலாச்சார துணைத் தலைவராக (VP Caltural) நமது தமிழ் பாரம்பரியத்தை வளர்க்கவும் பாதுகாப்பதற்கும், மன்ற உறுப்பினர்களின் துணையோடு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உறுதியாக உள்ளேன்.
தொலைநோக்கு(Vision) அறிக்கை:
இறைமாட்சி:
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். (குறள் - 386)
காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்
கலாச்சார துணைத் தலைவர் என்ற முறையில், நமது மன்றத்தில் துடிப்பான தமிழ் கலாச்சாரத்தை பின்வரும் மூன்று தூண்களின்(pillars) கொள்கையாக கொண்டு அடையும் குறிக்கோளுடன் உள்ளேன்
1. பாதுகாப்பு (Preservation): நம் மொழி, கலைகள், மரபுகளை போற்றும் வகையில் பல கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவது. நமது பாரம்பரியத்தை அவனப்படுத்தி அதை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச்செல்வது.
2. உள்ளடக்கம் (Inclusivity): ஒவ்வொரு உறுப்பினரின், பின்னணி, வயது, ஜாதி, மத, அரசியல் சார்பு பாகுபாட்டை பொருட்படுத்தாமல், மதிப்புமிக்கதாக உணரும் சூழலை நான் வளர்ப்பேன். நமது சமூகத்தின் செழுமையான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும், அனைவரையும் பங்கேற்க அழைக்கும்.
3. இணைந்து செயலாற்றுவது (Collaboration): மற்ற தமிழ் கலாச்சார அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து நமது ஒற்றுமையை மேலும் பலப்படுத்தும்.
நம் வளைகுடா பகுதி கலாச்சார துணைத் தலைவராக தொண்டாற்ற நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் ஒன்றாக இணைத்துக்கொண்டு நமது பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்துவோம்.
பேரன்புடன்,
கே.ஆர்.சீனிவாசன் (KRS), #TeamJulit
Youtube Link