Sinthuja Sivalogeswaran
(Candidate for the position of SFBATM Convener)
(Candidate for the position of SFBATM Convener)
வணக்கம்.
தமிழால் இணைவோம்
தரணியில் உயர்வோம்.
இலங்கை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிந்துஜா சிவலோகேஸ்வரன் ஆகிய நான், 2019 ஆம் ஆண்டு முதல் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் வாழ்நாள் உறுப்பினராக உள்ளேன். #TeamJulitஇல் 2024 ஆம் ஆண்டின் வளைகுடாப் பகுதித்
தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளராக ( Convenor) தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
About Me
எனக்கு தமிழின் மேல் உள்ள ஆர்வத்தால் கடல் கடந்து இருந்தாலும் தாய் மொழியான தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதற்காக எமது மன்ற உறுப்பினர்களின் உதவியோடும், துணைக்கலாச்சாரத் தலைவருடனும் சேர்ந்தும் பல்வேறு தமிழ் கலை கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த உறுதி செய்துள்ளேன்
வளைகுடாப் பகுதியில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.
தமிழ் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழ் விழாக்களில் பல விழாக்களில் இடம்
பெற்றுள்ளேன்.
தொலைநோக்கு அறிக்கை
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் 2024 ஆம் ஆண்டு மாபெரும் தமிழ் கலை கலாச்சார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பேன், சித்த மருத்துவ பயிற்சி பட்டறைகளை ஒழுங்கு செய்வேன். சிறுவர்களின் தமிழ் ஆர்வத்தை வளர்ப்பதற்கும் எதிர்கால சந்ததியினருக்கு தமிழில் தொன்மையையும் பெருமையை எடுத்துச் செல்வதற்கும் திருக்குறள் பயிற்சி பட்டறைகளை வாரம் தோறும் நடத்துவதற்கு ஒழுங்கு செய்வேன். எனது பிள்ளைகளின் தமிழ் ஆர்வத்தை மேலும் வளர்ப்பதற்காக வளைகுடா பகுதித் தமிழ் மன்றத்தின் வாழ்நாள் உறுப்பினராகசேர்ந்த நான் இப்பொழுது சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி மக்களின் தமிழ் ஆர்வத்தை வளர்க்க ஒருங்கிணைப்பாளராக தொண்டாற்றுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்
நன்றி !!
என்றும் அன்புடன்,
சிந்துஜா சிவலோகேஸ்வரன், #TeamJulit
Youtube Link