With the help of Friends Material and things, we handed over a check for Rs.1000 and groceries for about Rs.300 on the 14th of May to 37 disabled women who were earning their livelihood by doing small jobs such as box shop, sewing, and flour milling in Coimbatore. The Coimbatore Muthu Emperor Foundation assisted us in this work. Mrs. Sindhuja Anandan, Trustee of the Foundation, provided assistance directly to the disabled.
On the second day of June (2/6/2020) another 37 self-employed disabled women belonging to the Coimbatore Disabled Women's Association, donated Rs.1000 to their bank accounts through the Muthu Emperor Foundation to help them make a living.
On the 4th of September, we distributed groceries worth Rs.1000 to 23 disabled people belonging to the National Federation of the Blind (NFB) which is operating in Coimbatore, led by its Director Mr. Sadasivam. Coimbatore Muthu Empowerment Foundation Rector Mrs. Sindhuja Anandan organized the event. The Nandre Sei Team provided assistance.
நண்பர்கள் பொருள் உதவியுடன் கோவையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பெண்கள் சங்கத்தைச் சேர்ந்த பெட்டிக்கடை, தையல், மாவு அரைத்து விற்பது போன்ற சிறு சிறு வேலைகள் செய்து வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த 37 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மே மாதம் 14ஆம் நாள் ரூ.1000க்கான காசோலையும், சுமார் 300 ரூபாய்க்கு மளிகைப் பொருட்களும் வழங்கினோம். இந்தப் பணியில் நம்முடன் இணைந்து கோவை முத்து எம்பவர் அறக்கட்டளை உதவிகளை வழங்கியது. அறக்கட்டளையின் தாளாளர் திருமதி.சிந்துஜா ஆனந்தன் அவர்கள் உதவிகளை நேரடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.
ஜுன் மாதம் இரண்டாம் நாள் (2/6/2020) கோவை மாற்றுத்திறனாளிகள் பெண்கள் சங்கத்தைச் சேர்ந்த மேலும் 37 சுயதொழில் செய்து வரும் மாற்றுத்திறாளிப் பெண்களுக்கு , முத்து எம்பவர் அறக்கட்டளை மூலமாக அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1000 செலுத்தி அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவியது நன்றே செய் இயக்கம்.
ஜூலை மாதம் ஐந்தாம் நாள் (5/7/2020) கோவையில் இயங்கி வரும் பார்வைக் குறைபாடு உடையோருக்கான உரிமைக் கழகத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமையில் 37 பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 மதிப்பிலான மளிகைப் பொருட்களை எடுத்துச் சென்று அவர்களின் வீடுகளிலேயே அவர்களுக்குக் கொடுத்து உதவினோம்.
செப்டம்பர் மாதம் 4ஆம் நாள் கோவையில் இயங்கி வரும் NFB என்னும் தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பைச் சேர்ந்த 23 மாற்றுத்திறனாளிகளுக்கு அதன் தலைவர் சதாசிவம் அவர்கள் தலைமையில் ரூ.1000/ மதிப்புள்ள மளிகைப் பெருட்களை வழங்கினோம். கோவை முத்து எம்பவர்மெண்ட் அறக்கட்டளைத் தாளாளர் திருமதி. சிந்துஜா ஆனந்தன் அவர்கள் நிகழ்வை ஏற்பாடு செய்தார்கள். நன்றே செய் அணி உதவிகளை வழங்கியது.