சென்னையைச் சேர்ந்த பார்வைக் குறைபாடு உடைய இசைக் கலைஞர்களால் நடத்தப்படும் இராகப்பிரியா இசைக்குழுவைச் சேர்ந்த திரு.ஜான்சன் செரி கோமகன், கோவிட் பெருந்தொற்றால் வாழ்வாதாரங்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி கோரியிருந்தார். திரு.அகத்தியன் ஜான் பெனடிக்ட் அவர்கள் மூலமாக இந்தக் கோரிக்கையை நன்றே செய் குழுவுக்கு இந்த கோரிக்கை கிடைக்கப் பெற்றது. ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலில் இணைந்து நடித்த இந்த இராகப்பிரியா கலைக்குழுவைச் சேர்ந்த பார்வைக்குறைபாடு உடைய 23 மாற்றுத்திறனாளிகளுக்கு செப்டம்பர் 6 ஆம் நாள் (6/9/2020) அன்று நன்றே செய் திட்டத்தின் கீழ் ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. ஓசூசைச் சேர்ந்த நீயூ லைஃப் சர்வீஸ் சென்டரின் திரு.ஜான்சன் அவர்களின் உதவியுடன் பொருட்கள் வழங்கப்பட்டன.
Mr. Johnson Seri Komagan of the Rakapriya Band, a group of visually impaired musicians from Chennai, sought help for the disabled who lost their livelihoods due to the Covid epidemic. This request was made available to the Nandre Sei Committee by Mr. Agathiyan John Benedict. On September 6 (6/9/2020), 23 visually impaired members of the Rakapriya Art Group, who co-starred in the song "Ovvoru Pullalumey", were given the relief items worth Rs.1000. The items were delivered with the help of Mr. Johnson of the New Life Service Center in Hosur.