Gayatri Mantra

உலகத்திலுள்ள வேதங்களில்

உலகத்திலுள்ள வேதங்களில் ரிக்வேதம், யசுர்வேதம் ,சாமவேதம், அதர்வணவேதம், ஆகிய நான்கு வேதங்களில் சாமவேதம் பிரஜாபதி ஆகிய கடவுளை குறித்து வெளிப்படுத்துகின்றது. சாமவேதத்தின் முதலாம் அதிகாரம் ஏழாவது சுலோகத்தில் பிரஜாபதி தன்னை ஜோதி (ஒளி), பிரணவம் (ஒலி) மற்றும் யக்ஜம் (பலி) என்றும் வெளிப்படுத்துகிறார். இந்த மூன்று நிலைகளையும் வெளிப்படுத்திய ஒரே ஒருவர் இயேசு கிறிஸ்துவே.

(1) இயேசு உலகின் ஒளியாக வந்தார். (யோவான் 1:9) (ஜோதி).

(2) இயேசு வார்த்தையாகிய ஒலியானார். (யோவான் 1:1,14) (பிரணவம்)

(3) இயேசு பலியுமானார். (1 யோவான் 2:2) (யஞ்சம்)

வேறு எவரிலும் நிறைவேறாத இவ்விசேடகள் இயேசுவை மெய்யான தேவ அவதாரமென்று பலமாய் நிரூபிக்கின்றது. உலகத்திலுள்ள வேதங்களில் ரிக்வேதம், யசுர்வேதம் ,சாமவேதம், அதர்வணவேதம், ஆகிய நான்கு வேதங்களில் சாமவேதம் பிரஜாபதி ஆகிய கடவுளை குறித்து வெளிப்படுத்துகின்றது. சாமவேதத்தின் முதலாம் அதிகாரம் ஏழாவது சுலோகத்தில் பிரஜாபதி தன்னை ஜோதி (ஒளி), பிரணவம் (ஒலி) மற்றும் யக்ஜம் (பலி) என்றும் வெளிப்படுத்துகிறார். இந்த மூன்று நிலைகளையும் வெளிப்படுத்திய ஒரே ஒருவர் இயேசு கிறிஸ்துவே.

Gayatri Mantra is interpreted as follows by some Christian scholars which is given below:

ஓம் ஸ்ரீ தரித்திர நாராய நமஹ

( ஏழைக் கோலத்தில் மனிதனாய் உலகத்தில் வெளிப்பட்ட் தேவனே உம்மை போற்றுகிறேன் (லூக்கா (2:7)

2) ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ

(கன்னியின் வயிற்றில் பிறந்தவரே உம்மை போற்றுகிறேன் (ஏசாயா 7:14, மத் 1:18,19,23 )

3) ஓம் ஸ்ரீ பிரம்ம புத்ராய நமஹ

( பிதாவின் குமாரனாகிய இயேசுவே உம்மை நமஸ்கரிக்கிறேன் (யோ 3:16 )

4) ஓம் ஸ்ரீ உமார்த்தாயாய நமஹ

(பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் (மத் 1:8 )

5) ஓம் ஸ்ரீ விதீர்ஷ்பாய நமஹ

(விருத்தசேதனம் செய்துகொண்டவரே உம்மை துதிக்கிறோம்) லூக்கா. 2:21)

6) ஓம் ஸ்ரீ விருச்சசூல அருந்தாய நமஹ

(சூலம் போன்ற மரத்தில் பலியானவரே உம்மை ஆராதிக்கிறேன்)(லூக்கா23:33)

7) ஓம் ஸ்ரீ பஞ்ச காயாய நமஹ

(உடம்பில் ஐந்து காயங்களை பெற்றவரே உம்மை வாழ்த்து கிறேன்) (ஏசா 53:5, சங் 22:16 )

8) ஓம் ஸ்ரீ ப்ரீம் பருங்காய நமஹ

(மரணத்தை ஜெயித்தவரே உம்மை போற்றுகிறேன்) (1பேதுரு 2:24 )

9) ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்தியே நமஹ

(பிதாவின் மடியில் அமர்ந்திருப்பவரே உம்மை வாழ்த்துகிறேன்) (யோ 1:28 )

10) ஒம் ஸ்ரீ தியாகேஷ்வராய நமஹ

(தம் இன்னுயிரை தியாகம் செய்த வள்ளலே உம்மை போற்றுகிறேன்)

11) ஓம் ஸ்ரீ அகிலாண்டேஷ்வராய நமஹ

(அகில உலகையும் படைத்தவரே உம்மை வாழ்த்துகிறேன்)

12) ஓம் ஸ்ரீ பரமேஷ்வராய நமஹ

(பரமண்டலங்களின் தேவனே உம்மை துதிதக்கிறேன்)

13) ஓம் ஸ்ரீ வைத்தீஸ்வராய நமஹ

(எங்கள் நோய்களை சுகப்படுத்தும் பரிகாரியே உமக்கு ஸ்தோத்திரம்)

14) ஓம் ஸ்ரீ பாப நாசகாயாய நமஹ

(எங்களின் பாவங்களைப் போக்குபவரே உமக்கு ஸ்தோத்திரம்)

15) ஓம் ஸ்ரீ நித்திய பிரம்மச்சாரிய நமஹ

(திருமண பந்தம் இல்லாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்)

எந்த மொழியில் மந்திரித்தாலும் இயேசு கிறிஸ்து ஒருவரே தெய்வம்..

நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் (அப் 17: 23 )...

Back to home