12- MARAINTHA KOONDIL

மறைந்த கூண்டில் இருந்து

விடுதலை அடைந்த பறவை விரைந்தோடுதே !

நிறைந்த வெளி நீல வானிலே ,

தன்னை மறந்து இறைவன் அருள் பாடுதே!

-- மடை திறந்த வெள்ளம் போல் என்னுள்ளம்

கண்ணனின் பரந்த கருனைக்கடல் நாடுதே!

பிறந்த பயன் இன்றடைந்த மீரா,

பிறந்த பயன் இன்றடைந்த மீராவின் உயிர்

உவந்து ஆனந்தக்ககடலாடுதே !