H2 Tamil Language and Literature

Subject Information

9577 H2 Tamil Language & Literature

Subject description

இது ஒரு மானுடவியல் / கலை பாடம் – (It is a Humanity / Arts Subject.) எனவே இப்பாடத்தை ஒரு மாற்றுப்பாடமாக (Contrast Subject) தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். தமிழ்மொழி மற்றும் லக்கியத்தை உள்ளடக்கிய தாய்மொழிக் கல்வி. மாணவர்களிடையே கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய மொழித்திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கும். தாய்மொழிக்கல்வி வாயிலாக, மாணவர்களின் அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற வகையில் பண்பாட்டுக் கூறுகளையும் மரபுவழிப் பண்புகளையும் வலியுறுத்தும் வகையில் பாடத்திட்டம்  அமைந்துள்ளது. இந்நிலையில், கருப்பொருள் அடிப்படையிலும் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் மற்றும் நாவல் இலக்கியங்கள் வாயிலாகவும் மற்றும் அனுபவக் கல்வி வழியாகவும் இக்கூறுகள் நெறிப்படுத்தப்பட்டு மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும்.   இப்பாடத்திட்டத்தின் வழி, மாணவர்கள் தயக்கமின்றித் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதோடு நண்பர்களோடும் சமூகத்தினரோடும் தயக்கமின்றி தமிழில் கலந்துரையாடும் திறனை வளர்த்துக்கொள்வர். மேலும், ஒரே கருப்பொருளை ஒட்டிய இருவேறு பனுவல்களை ஒட்டிய கேள்விகளுக்குக் கருத்துரை எழுதவும் கற்பிக்கப்படும். 


மதிப்பீடும் கற்பித்தல் முறைகளும் :


வீட்டுப்பாடம், தேர்வு ஆகியவற்றிற்கு அப்பாலான கூறுகளை மதிப்பீட்டு உத்திகளாகக் கொள்ளுதல், 


H2 Tamil Language & Literature syllabus guide can be accessed via link below: 


Pre-requisites

உயர்தரம் 2 தமிழ்மொழிப் பாடத்தைப் பயில விரும்பும் மாணவர்கள் பொதுவாக  தங்கள் யதிற்கும் அனுபவத்திற்கும் உட்பட்ட பொருத்தமான பனுவல்களைக் கேட்டு படித்துப் புரிந்துகொள்ளவும் பேச்சுத் தமிழில் உரையாடவும் கருத்துகளை எழுத்துத் தமிழில் கூறவும் மற்றும் பல்வேறு கருப்பொருள்களில் கட்டுரை எழுதவும் அறிந்திருக்க வேண்டும்.மேலும், தமிழ்மொழி பயில்வதில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருத்தல் நன்று. உயர்தரம் 2 தமிழ்மொழிப் பாடத்தைப் பயில விரும்பும் மாணவர்கள் ‘O’ நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது உயர்நிலையில் உயர்தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


Scheme of Assessment

Paper / weightage for A levels  (H2 Tamil Language & Literature):

All candidates are required to enter for Papers 1, 2 & 3.

Skill attainment

கற்றல் பயணங்கள், பட்டறைகள், கருத்தரங்கு, கருத்தாடல்கள் போன்ற பல்வேறு வழிகளில் மாணவர்களுக்குத் தமிழ்மொழி கற்பிக்கப்படும். தமிழ்மொழி கற்றல் மாணவர்களுக்கு ஓர் இனிய அனுபவமாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில் மாணவர்களின் தேவைகளையும் திறன்களையும் அறிந்து பல்வேறு கற்பித்தல் உத்திகள் பயன்படுத்தப்படும். குறிப்பாக, மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும் கருத்துத்தெரிவிப்பு (Feedback), மாணவரின் தனித்திறன்களுக்கு ஏற்ற கற்பித்தல் முறை (Differentiated Instruction) கூடிக்கற்றல் முறை (Cooperative Learning) மேற்கொள்ளப்படும். மேலும், மாணவர்கள்  தங்கள் புத்தாக்கத்திறன்களையும் தகவல் தொழில்நுட்பத் திறன்களையும் வெளிப்படுத்த ஒப்படைப்புகள் மற்றும் தனிநபர்\குழு வேலைத்திட்டங்களும் வகுப்பறைப் படைப்புகளும் மேற்கொள்ள வாய்ப்புகள் அளிக்கப்படும். இதன்வழி இலக்கியத் திறனாய்வுத் திறனும் மேம்படும். 


Other Relevant Info

மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் தயக்கமின்றிச் சரளமாகத் தமிழில் உரையாடத் தேவையான மொழியாற்றலை வளர்த்துக்கொள்வதோடு புத்தாக்கச் சிந்தனையையும் எதையும் அணுகி ஆராய்ந்து தீர்மானிக்கும் திறனையும் பெறுவார்கள். இது ஒரு மானுடவியல் துறை (Humanities) சார்ந்த பாடம் என்பதால் பல்கலைக்கழகத்தில் எந்தத் துறைக்குச் சென்றாலும் 3ஆம் பாடமாக இதைப் பயன்படுத்தலாம். (Science or Arts Courses) 

     (If a student has a flair for Tamil Language especially, those who have done Higher            Mother Tongue should take up this subject. As one of the Humanities subjects, H2 Tamil 

         Language & Literature can be used to apply for various courses offered in the faculties of  

         Engineering, Computing, Social Studies, Business, Arts & Social Sciences at both local or   

         foreign Universities.)



FAQ

Is your course a prerequisite for some popular university courses? 


Yes, for Diploma  or Degree in Teaching Mother Tongue Languages, NTU/NIE

And  to pursue any Degree courses in any universities in Singapore or overseas. 

தமிழ்மொழி பயிலும் மாணவர்களுக்கு வருங்காலத்தில் எத்தகைய தொழில் துறைகளில் பணியாற்றும் வாய்ப்புகள்  உள்ளன?


தமிழ்மொழியில் சிறந்த தேர்ச்சி பெறும் மாணவர்கள் பொதுவாக அனைத்து துறைகளிலும் ஈடுபடலாம். குறிப்பாக, பத்திரிக்கைத் துறை, ஊடகத்துறை, கல்வித்துறை, மொழிபெயர்ப்புத் துறை மற்றும் புத்தாக்கப் படைப்பு தொடர்பான பல்வேறு துறைகளில் பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. Engineering, Law, Arts or Science courses படிக்க விரும்புகின்றவர்களும் இதை ஒரு Humanity துறை சார்ந்த பாடமாகக் கொண்டு எந்தத் துறையிலும் பணியாற்றலாம்.






For Subject videos, please return to the Home Page.

For Online Subject Enquiries, please refer to the zoom links on this page.