விவசாயியின் கழுதை:
ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தார் ,அவருக்கு திடீர்னு பணக்கஷ்டம் வந்தது ,உடனே தன்னோட கழுதையை விற்று அந்த பணத்தை வைத்து பிரச்னையை சமாளிக்கலாம்னு முடிவு பண்ணிணார்.
தன்னோட மகனைக் கூட்டிகிட்டு பக்கத்தில் இருக்கும் சந்தைக்கு நடந்து போனார். அந்த விவசாயி ,அப்படி போகும்போது ஒருத்தர் அவரைப் பார்த்து சொன்னார் ,கழுதை சும்மாதானே நடந்து வருகிறது ,உங்க ரெண்டு பேருல யாராவது ஒருவர் அதுமேல உக்காந்துட்டு போகலாமே என்று சொன்னார்.
உடனே தன்னோட மகனை அந்த கழுதையின் மேல ஏத்தி விட்டுட்டு கூட சேர்ந்து நடந்தார் விவசாயி.
கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா அங்கே வந்த இன்னொருத்தர் ,'அடப் பாவி, சின்ன பயலே! வயசான உங்க அப்பாவை நடக்க விட்டுட்டு நீ உக்காந்துகிட்டு வருகிறாயே என்று கேட்டார்.
உடனே விவசாயி சரி என்று தான் உக்காந்துக்கிட்டு அவரோட மகனைக் கூட நடக்க சொன்னார் ,
கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம் ,ஒரு பாட்டி வந்து நீ எல்லாம் பெரிய மனுசனா?,சின்ன பையனை நடக்க விட்டுவிட்டு நீ உக்காந்துட்டு வரியேனு கேட்டார் .
உடனே தன்னோட மகனையும் கூட ஏத்திக்கிட்டு ஒண்ணா பயணம் செஞ்சாரு அவரு ,
அப்ப அந்த வந்த முதியவர் ஒருவர் அட கொடுமைக்காரர்களா! இப்படி ரெண்டு பேரும் அந்த குதிரைமேல உட்கார்ந்து இருக்கீங்களே உங்களுக்கு இரக்கமே இல்லையான்னு கேட்டார்.
உடனே ரெண்டு பேரும் கீழ இறங்கிக்கிட்டு ,இனி என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க ,இனி இந்த கழுதையை நாம தூக்கிட்டு நடப்போம்னு ,ஒரு குச்சியை கழுதையோட கால்களுக்கு நடுவுல கட்டி தலைகீழா தூக்கிட்டு நடந்தாங்க ,
அப்ப அங்க ஒரு ஆறு குறுக்கிட்டுச்சு ,ஆத்த கடக்கறப்ப கழுதை பயத்துல துள்ளி குதித்தது ,உடனே பிடியை விட்டான் அந்த பையன் ,அப்ப அந்த கழுதை ஆத்தோட போயிருச்சு.
அடுத்தவங்க சொல்றத எல்லாத்தையும் கேட்டதால் அவங்களுக்கு ,கழுதையும் போயிருச்சு ,அதை வித்த பணமும் கிடைக்க வழியும் இல்லாம போயிருச்சு.
நீதி :- சொல் புத்தியை விட சுய புத்தியே சிறந்தது!