தமிழ்த்துறை

முகப்புரை

மொழிப்பற்றுக் கொண்ட மாணவர்களை உருவாக்குவதில் தமித்துறை முனைப்போடு செயல்பட்டு வருகின்றது. ஒரு மனிதனின் அடையாளமாக மொழி விளங்குகின்றது என்பதை மாணவர்கள் உணரும் வகையில் தமிழ்த்துறை சிறப்பாக இயங்கி வருகின்றது. மொழியே மனிதனின் ஆளுமையை வரையறை செய்யும் அகம் சார்ந்த உணர்வு. இதனைத் தொடர்ச்சியாக மாணவிகளுக்குத் தமிழ்த்துறை அறிவுறுத்தி வருகிறது.

முன்னுரை

1985 ஆம் ஆண்டு முதல் தமிழ்த்துறை செயல்பட்டு வருகின்றது. தொடக்கம் முதற்கொண்டு மாணவிகளுக்கு அடித்தளப் படிப்பாகத் (Foundation Course) தமிழ் பயிற்றுவிக்கப் படுகின்றது. அனுபவம் மிக்க பேராசிரியர்கள் இலக்கிய நுட்பத்தை மாணவிகளுக்கு உணர்த்தி வருகின்றனர். அதன் மூலம் சிறந்த பண்பாடு மிக்க மாணவிகளை உருவாக்கி வருகின்றனர்.