செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பாக வருடம் தோறும் கல்லூரி நிறுவனர் பெருமதிப்பிற்குரிய திருமதி.எலிசபெத் அம்மையார் அவர்களின் பிறந்தநாள் கவியரங்கமாகக் கொண்டாடப் பட்டுவருகிறது. 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான கவியரங்கம்“ பெண்மை வாழ்க வென்று கூத்திடுவோமடா” என்னும் தலைப்பில் நடைபெற்றது. இக்கவியரங்கின் கவிதைகள் தொகுக்கப்பட்டு 25.5.2023 அன்று வெளியிடப்பட்டது. கல்லூரி முதல்வர் உயர் திரு எஸ்.ஸ்ரீதேவி அவர்கள் தலைமை வகுக்க உயர் திரு .துணை முதல்வர்ஆர்.மீனாட்சிஅவர்கள் நூலை வெளியிட்டார்.
தமிழ்த்துறையின் மேனாள் துறைத்தலைவர் பேராசிரியர் வ.விசயரங்கன் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். கவிதைத் தொகுப்பை வாழ்த்திபேசிய முதல்வர் தொடர்ச்சியாக இப்பணிசெவ்வனே நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். துணை முதல்வர் அவர்கள் தமிழ்த்துறையின் இத்தகையச் செயல் பாடுகளுக்கு ஆதரவுநல்கினார். பேராசிரியர் விசயரங்கன் அவர்கள் மாணவிகளுக்குச் சிறப்புரைவழங்கியதோடு கவிதைத் தொகுப்பு குறித்து பாராட்டி பேசினார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர்களும் நூலினைப் பெற்றுக் கொண்டதோடு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இவ்வாறாக இவ்விழா இனிதே நடைபெற்றது.
செவாலியர் டி.தாமஸ் எலிபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறைச் சார்பாக 19/9/2023 அன்று கவியரங்கம் நடத்தப்பட்டது. கல்லூரியின் நிறுவனர் மதிப்பிற்குரிய திருமதி .எலிசபெத் அம்மையார் அவர்களின் பிறந்த நாள் 17. 4 .2023. அதனை முன்னிட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏறுபோல் நட என்னும் தலைப்பில் அமையப்பெற்ற இக்க வியரங்கத்தில் 15 மாணவிகள் கவிதை படித்தனர் .அயராத உழைப்பும் பெண் கல்விக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவமும் அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் இந்நிகழ்வு அமைந்தது. நமது முன்னோர்களின் நெறியான உயரிய வாழ்க்கை முறையை இளைய தலைமுறை பின்பற்றுவதற்கான உந்துதலாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. இதனை மொழி துறைத் தலைவர் முனைவர் கா.பிரீதா தலைமை ஏற்று நடத்தினார் .தமிழ் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.ஜா.வள்ளி நன்றியுரை கூற இவ்விழா இனிதே நிறைவு பெற்றது.
நாள்: 17.03.2023
செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக 17-3-2023 அன்று முத்தமிழ் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை தமிழ்த்துறை தலைவர் முனைவர் க.பிரீதா, காலை 9 மணியளவில் நீதியரசர் J.கனகராஜ் கலையரங்கில் தொடங்கி வைத்தார். லிங்கன் புக் ஆஃப் ரெகார்ஸ் அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை வகித்தார். இதன் பொருட்டு தமிழ்த்துறை அன்று காலை 9 மணியளவில் அனைத்துக் கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றன. மாணவர்களின் படைப்பாற்றலையும் பேச்சாற்றாலையும் வளர்த்தெடுக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேரா. மு. ராஜீ மற்றும் முனைவர் ஜே.கே. ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாணவர்கள் நிறைய வாசிக்கவும் நன்கு எழுதவும் வேண்டுமென ஜோசப் இளந்தென்றல் அவர்கள் அறிவுறுத்தினார்.
பேரா.மு.ராஜீ அவர்கள் தமது உரையில் கலையியலின் நுட்பத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். கலை உணர்வே வாழ்வியலைச் செம்மைப் படுத்துகின்றது என வலியுறுத்தினார். பறையிசை ஆய்வாளர் ஜெயக்குமார் இசைத்தன்மையின் ஒழுங்கியலை எடுத்துரைத்தார். ஓசையின் அமைப்பு மனதைப் பக்குவப்படுத்துகிறது எனவும் இசை என்பது மனித வாழ்வியலில் பின்னிப் பிணைந்தது என்றும் தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் கவிதைப் போட்டியின் நடுவராக கவிஞர் அமீர் அப்பாஸ் அவர்கள் பங்கேற்றார். அவர் பேசுகையில் கலை என்பது மனிதநேயம் மிக்கது என உறுதிப்படுத்தினார். நிறைவாக மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் கண்ணிற்கு விருந்து படைத்தன. பேச்சு, கவிதை மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்கத்தொகை பரிசளிக்கப் பட்டன. 2022-23 கல்வியாண்டில் தமிழ்த்தென்றல் பேரவை நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் சிறப்பு விருந்தினர்களால் புத்தகப் பரிசு வழங்கப்பட்டன.
முன்னதாக பேரா.முனைவர். ஜ. வள்ளி அவர்கள் வரவேற்புரை நல்க கணினியியல் முதலாமாண்டு மாணவி ஆஷிகா நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
நாள்: 16.03.3023
செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறையும் எல்.ஆர். எம். மருத்துவமனையும் இணைந்து 16.3.2023 அன்று காலை 10 மணியளவில் பல் மருத்துவ முகாம் நடத்தின. இந்நிகழ்வை தமிழ்த் துறைத் தலைவர் பேரா. க. பிரீதா தொடங்கி வைத்தார். மாணவிகளின் மருத்துவ நலனை கருத்தில் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவிகளும் பேராசிரியர் களும் கலந்து கொண்டு பல் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 200 மாணவிகள் பங்கேற்றனர். பின்பு இவர்களில் 80 பேர் தேர்வு செய்யப்பட்டு எஸ்.ஆர். எம். பல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 27.3.2023 அன்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மாணவிகளும் பேராசிரியர்களும் பயனடைந்தனர். மாணவிகள் சமூக அக்கறையுடன் செயல்பட்டது இதன் முத்தாய்ப்பாக அமைந்தது. கணினிப்பயன்பாட்டியல் முதலாமாண்டு மாணவிகள் செல்வி கீர்த்தனா மற்றும் பிருந்தா ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்
செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக 28-2-2023 அன்று பிற்பகல் 11.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் உலகத் தாய்மொழி தினத்தைக் கொண்டாடியது. உலகத் தாய்மொழி தினம் என்பது ஒவ்வொரு மொழி சார்ந்த சமூகத்தை அடையாளப்படுத்துகின்றது. மொழி பற்றிய உணர்வு நல்ல சிந்தனை மரபை உருவாக்குகின்றது. இதனை மாணவிகள் புரிந்து கொள்ள வேண்டி இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
மொழி என்பதே கலை இலக்கிய கலாச்சாரத்தின் அடித்தளமாகிறது. 13 மொழிகளை அடையாளப்படுத்தும் விதமாக மாணவிகள் உடையணிந்து அணிவகுப்பு நடத்தினர். மொழி குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்றனர். அந்தந்த மொழி சார்ந்த நடனமாடி மகிழ்ந்தனர். மொழியின் சிறப்பு குறித்து கவிதை படித்தனர். மொழி ஆளுமை பற்றி உரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வை கல்லூரி மாணவிகள் அனைவரும் கண்டு மகிழ்ந்தனர். பயனடைந்தனர். இந்தி மற்றும் பிரெஞ்சுத் துறையும் இணைந்து பங்கேற்றது இந்நிகழ்வின் முத்தாய்ப்பாகிறது
செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின், தமிழ்த்துறை சார்பில் 27.01.2023 & 28.01.2023 ஆகிய இரு நாட்கள் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற சுற்றுலாப் பொருட்காட்சியில் கல்லூரி கல்வி இயக்ககம் பிரிவில் சித்தா கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் 8 மாணவிகள் கலந்து கொண்டு சித்த மூலிகைகளின் பயன்பாட்டினையும் சிறப்பினையும் பொது மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாணவிகள் புலியாட்டம் ஆடித் தங்கள் கலையுணர்வை வெளிப்படுத்தினர்.
செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின், தமிழ்த்துறையின் தமிழ்த்தென்றல் பேரவையின் சார்பாக 23/01/2023 முதல் 25/01/2023 வரை இலக்கிய மாந்தர் உலா, பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, நாடகப்போட்டி, வினாடி வினா முதலான போட்டிகள் நடைபெற்றன. இதில் 23.01.2023 அன்று நடைபெற்ற இலக்கிய மாந்தர் உலாப் போட்டியில் மாணவிகள் கண்ணகி, மணிமேகலை, பாரதியார் உள்ளிட்ட வேடங்களில் வந்து தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், முனைவர் பா. அனிதா அவர்கள் நடுவராகப் பங்கேற்ற இப்போட்டியில் 6 மாணவிகள் கலந்து கொண்டனர். ‘வான் புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்னும் தலைப்பில் கவிதைப்போட்டி நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் க.பிரீதா அவர்கள் நடுவராகப் பங்கேற்க, 15 மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
‘ மதம் கடந்த மானுடம்’ என்னும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டிக்குத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், முனைவர் ஜ. வள்ளி அவர்கள் நடுவராகப் பங்கேற்க 7 மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர். 24.01.2023 அன்று நடைபெற்ற நாடகப்போட்டியில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் க.பிரீதா அவர்கள் நடுவராகப் பங்கேற்க,5 குழுக்கள் போட்டியில் கலந்து கொண்டு நாற்காலிக்காரர் நாடகம், வட்டக்கண்ணாடி, கல்வியா?, செல்வமா? வீரமா?, வீரபாண்டிய கட்டப்பொம்மன் உள்ளிட்ட தலைப்புகளில் நடித்துக்காட்டினர்.
25.01.2023 அன்று சங்க இலக்கியங்கள், சங்க மருவிய கால இலக்கியங்கள், காப்பியங்கள் என்னும் தலைப்பில் நடைபெற்ற வினாடி வினாப் போட்டியில் 9 குழுக்கள் பங்கேற்றனர். தமிழ்த்தென்றல் பேரவைப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராகத் தமிழ்த்துறை உதவிபேராசிரியர் முனைவர் அ.விமலாராணி அவர்கள் விளங்கினார். நல்ல முறையில் நடைபெற்ற இப்போட்டிகளில் பரிசு பெற்ற மாணவிகளின் விவரங்கள் பின் வருமாறு ;
செவாலியர்.டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின், தமிழ்த்துறையும் அகமதிப்பீட்டுக் குழுவும் இணைந்து 6 ஆவது தேசிய சித்தா நாளை, 11.01.2023 அன்று முற்பகல் 11 மணியளவில் கல்லூரியின் ஜே.ஜே.கே கலையரங்கில் கொண்டாடியது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, சென்னை தாம்பரத்தில் இயங்கிவரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர், பேராசிரியர். மரு,ஆர். மீனாகுமாரி அவர்கள் பங்கேற்றார். அவர் தமது சிறப்புரையில், தமிழும் சித்தமருத்துவமும் உடலும் உயிரும் போன்று இணைந்த தொடர்புடையது என்றும் பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களிலும், பன்னிரு திருமுறைகளிலும், கலிங்கத்துப்பரணி போன்ற சிற்றிலக்கியங்களிலும் ஏராளமான சித்தமருத்துவம் குறித்தப் பல்வேறு குறிப்புகள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி மாணவியர்களிடையே உரையாற்றினார். மேலும், தமிழ் மாணவியர்கள் ஒவ்வொருவரும் மேற்குறிப்பிட்டது போன்ற, பழந்தமிழ் இலக்கியங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அவற்றில் உள்ள சித்த மருத்துவக் குறிப்புகளை எல்லாம் தக்க ஆதாரங்களுடன் ஒருங்கிணைத்து தமிழர்களின் சித்த மருத்துவ அறிவினைக் கட்டுரைகளாகப் பதிவு செய்ய வேண்டுமென ஊக்கப்படுத்தினார். இவ்விழாவில் கல்லூரியின் துணை முதல்வர், முனைவர் திருமதி. இரா. மீனாட்சி அம்மையார் பங்கேற்றுச் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். முன்னதாக மொழித்துறைத்தலைவர் முனைவர் திருமதி. க. பிரீதா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
செவாலியர்.டி.தாமஸ்.எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையும், மாணவர் மேம்பாட்டு மையமும் இணைந்து 09.01.2023 அன்று தேசிய சித்தா நாளை, ஒட்டி ‘சித்த மருத்துவப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு’ ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கல்லூரியின் பல்வேறு துறை சார்ந்த மாணவிகள் பங்கேற்றுச் சித்த மருத்துவத்தில் தங்களுக்கு இருந்த ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர். அந்த வகையில் உளவியல் இரண்டாமாண்டு மாணவிகள், தரணி சித்ரா பா.சீ, லாக்ஸீஸ் செலீனா மாதுளை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோலின் பயன்களையும் சிறப்புகளையும் எடுத்துரைத்தனர். ஆங்கில இலக்கியம், இரண்டாமாண்டு மாணவிகள், வெ.கிருத்திகா, சரஸ்வதி, ஷீபா கற்றாழையின் மருத்துவ குணங்கள், கற்றாழையின் வரலாறு, கற்றாழைக்குப் பிற நாடுகளில் வழங்கப்படும் பெயர்கள் முதலியவற்றைத் தெளிவாக எடுத்துரைத்தனர். உளவியல், முதலாமாண்டு மாணவிகள், பிரீத்தி.ர, ஸ்ரீஹரிஷா, ‘அறியபடாத கிழங்கு மருத்துவம்’ என்னும் தலைப்பில் வெற்றிலை வள்ளி கிழங்கு, அமுக்ரா கிழங்கு உள்ளிட்ட பலவகை கிழங்குகளின் மருத்துவ குணங்களையும் அவற்றின் பயன்பாடுகளையும் குறித்து விளக்கினர்.
இவை மட்டுமன்றி மாணவிகள் மிளகு, சுக்கு, துளசி, குப்பைமேனி, சில்லுக்கருப்பட்டி, பனங்கற்கண்டு, முடக்கறுத்தான், ஆவாரம், நெல்லிக்காய், கஸ்தூரி மஞ்சள், அதிமதுரம், திப்பிலி, ஆடுதொடா இலை, , நொச்சி, மலைவேம்பு, கற்பூரவள்ளி உள்ளிட்ட மூலிகைகளின் மருத்துவக் குணங்களை எடுத்துக் கூறிக் காட்சிப்படுத்தினர். மேலும் விற்பனை பிரிவில், முடக்கறுத்தான் தோசை, அவல் இட்லி, பூசணிக்காய் லட்டு, பீட்ரூட் அல்வா, சிமிலி, கற்றாழை பானம், வேர்க்கடலை பர்பி, குப்பைமேனி பொடி உள்ளிட்ட ஆரோக்கிய உணவுப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் இரா.மீனாட்சி அம்மையாரும், மொழித்துறைத் தலைவர் முனைவர் க.பிரீதா அம்மையாரும், வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மலர்விழி அம்மையாரும் கல்லூரியின் பேராசிரியர்களும் கலந்து கொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டதோடு மாணவிகளின் இம்முயற்சியை வெகுவாகப் பாராட்டிச் சென்றனர்.
நாள்: 28.12.2022
நேரம்: மதியம் 12.00 - 1.00 மணி
தலைப்பு: ராஜாஜி புகைப்படக் கண்காட்சி
பங்கேற்பு: 39 மாணவர்கள்
28.12.2022 அன்று எங்கள் கல்லூரியில் மொழியியல் துறை ராஜாஜியின் புகைப்படக் கண்காட்சியைக் காண்பிப்பதற்காக அண்ணா நூலகத்திற்கு களப்பயணம் செய்யத் திட்டமிட்டோம். அந்த புகைப்படக் கண்காட்சியில் ராஜாஜியின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை வரலாறு பற்றிய கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொண்டோம். அங்கேயும் ராஜாஜி பற்றிய சரியான டைம் லைன் சார்ட்டைக் கண்டுபிடித்தோம். TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த இடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... ஒவ்வொரு படத்திலும் படத்தைப் பற்றிய தகவல்கள் இருந்தன. தலைவர்களுடன் ராஜாஜியின் 50 க்கும் மேற்பட்ட படங்களை அவர்கள் எவ்வாறு சேகரித்தார்கள் என்று நாங்கள் ஆச்சரியப்பட்டோம். பிறப்பு வரை ராஜாஜி பற்றிய ஒவ்வொரு தகவலையும் ஒரு புகைப்படக் கண்காட்சியின் கீழ் அவர்கள் சேகரித்தனர். அண்ணா நூலகத்தின் புகைப்படக் கண்காட்சி மற்றும் அனுபவத்தால் நாங்கள் மிகவும் திருப்தி அடைந்தோம். இந்தக் கண்காட்சிக்கு எந்தப் பணமும் இல்லை. ராஜாஜியின் முழு வரலாற்றையும் தெரிந்துகொள்ள அந்தக் கண்காட்சியில் 1 மணிநேரம் செலவிடுவது உண்மையில் மதிப்புக்குரியது.
நாள்: 19.12.2022
நேரம்: மதியம் 12.00 - 2.00 மணி
தலைப்பு: ஊடகங்களில் இளம் தொழில் முனைவோர் வாய்ப்புக்கான பயிற்சி பட்டறை
பங்கேற்பு: 150 மாணவர்கள்
19.12.2022 அன்று செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின், மொழித்துறையும், டிசேல் சர்வதேச திரைப்படம் மற்றும் ஊடக அகாடமி மற்றும் மாணவர் மேம்பாட்டு மையமும் இணைந்து மூன்றாமாண்டு பயிலும் மாணவிகளுக்கு வேலை வாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில், ‘ஊடகங்களில் இளம் தொழில் முனைவோர் வாய்ப்புக்கான பயிற்சிப் பட்டறையை நடத்தியது. இந்நிகழ்வில் வணிகவியல், கணினிப்பயன்பாட்டியல், கணினி அறிவியல், வணிக நிர்வாகவியல் துறை சார்ந்த 180 மூன்றாமாண்டு மாணவிகள் கலந்து கொண்டனர். ஊடகங்களில் தங்களின் தனித்திறமைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது, அதற்கான பயிற்சி முறைகள், கல்வி முறைகள் குறித்து, டிசேல் சர்வதேச திரைப்படம் மற்றும் ஊடக அகாடமி இயக்குனர் பேராசிரியர் S.S. ஜெயகுமார் லாரன் அவர்கள் எடுத்துரைத்தார். மாணவிகளுக்கு இந்நிகழ்வு பயனுள்ளதாக இருந்ததோடு நல்லதோர் வழிகாட்டியாகவும் அமைந்தது.
தேதி: 29/09/2022
நேரம் : 10.30 Am
இடம் : JJK Auditorium
மதிப்பிற்குரிய லாரன்ஸ் ஜெயக்குமார் ஐயா அவர்கள் இந்த வேலை நோக்கு நிலையில், ஊடகத்தில் உள்ள வேலை வாய்ப்புகளை மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். அதில் செய்தி வாசிப்பாளர், செய்தி தொகுப்பாளர், வானொலிப் புரவலர், காணொளிப் புரலவர், நிகழ்ச்சி தொகுப்பாளர் இப்படி ஊடகத்தில் பேச்சுத் திறமையைக் கொண்டு மட்டுமல்லாமல் எழுத்துத்திறனால் உள்ளடக்க எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர், உரையாடல் எழுத்தாளர், பாடலாசிரியர் போன்ற வேலைகளில் பெண்கள் பெரும்பாலும் பணி புரியலாம் என்ற விவரத்தையும் கூறினார்.
இது மட்டுமன்றி டிஜிட்டல் புகைப்படத்தில் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. திருமணம் மற்றும் பிறந்தநாள் நிகழ்வுகளுக்கு தலைமை பொறுப்பேற்று அந்த நிகழ்வைச் சிறப்பாக நடத்திக் கொடுக்கும் நிகழ்ச்சி மேலாண்மை வேலைகளிலும் பெண்கள் பணிபுரியலாம் என்று ஊடகத்தில் உள்ள அனைத்து வேலைகளையும் அந்தப் பணிகளின் சிறப்பையும் மற்றும் வேலை வாய்ப்பு இடங்களைப் பற்றியும் கூறினார். இந்நிகழ்வின் மூலம் மாணவர்கள் ஊடகத்தின் முக்கியத்துவத்தையும் அதில் இருக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகளையும் அறிந்து கொண்டனர்.
செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு 20/09/2022 அன்று நண்பகல் 2 மணிக்கு நீதியரசர் ஜே.கனகராஜ் கலையரங்கில் ஓவியக் கண்காட்சியை நடத்தியது. பாரதி எனும் மகாகவியின் ஆளுமை பற்றிய புரிதல் மாணவிகளுக்கு ஏற்பட வேண்டி இப்போட்டி நடத்தப்பட்டது. பாரதியின் பிம்பம் மற்றும் கவிதை வரிகள் ஆகியன ஓவியத்திற்கான கருப்பொருளாகக் கொடுக்கப்பட்டன.
மாணவிகள் தங்களது கற்பனைக்கு எட்டிய வரையில் பல்வேறான பாரதிகளை ஓவியங்களாகப் படைத்தளித்தனர். பாரதியின் வரிகள் இன்றைய சமூகத்திற்குப் பொருந்திவருவதை ஓவியமாக்கினர். இப்போட்டியில் 30 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் இக்கண்காட்சியைக் கண்டு பயனடைந்தனர்.
ஓவியப் போட்டியில் பரிசுப் பெற்றோர் விவரம்
முதல் பரிசு - லிபியா . ர, வணிக நிர்வாகவியல், முதலாமாண்டு
இரண்டாம் பரிசு - பாரதி . த, கணினி அறிவியல், இரண்டாமாண்டு | யாமினி.அ, வணிகவியல், முதலாமாண்டு ஆ பிரிவு
மூன்றாம் பரிசு - கீர்த்தி பிரியங்கா .என், உளவியல், இரண்டாமாண்டு
செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக பாரதியின் நினைவு நாளை முன்னிட்டு 20/9/2022 அன்று பட்டிமன்றம் நடத்தப்பட்டது. அடிமைத் தனத்தின் மோகம் தணிந்ததா? தணியவில்லையா? எனும் தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில் பல்வேறு தூறைகளைச் சேர்ந்த 6 மாணவிகள் கலந்து கொண்டு பேசினர். நடுவராக டி.துளசி இயற்பியல், மூன்றாமாண்டு மாணவி பொறுப்பேற்றார். மாணவிகளின் கருத்து வாதங்களைத் தீர அலசிப் பார்த்து தீர்ப்பு வழங்கினார். சமூகத்தின் பல தளங்களில் காணப்பட்ட ஏற்ற இறக்கங்களை வெளிப்படுத்தும் நோக்கில் மாணவிகளின் பேச்சு அமைந்திருந்தது. சமூக அக்கறையுள்ள நிகழ்வாக இது அமைந்திந்ததில் வியப்பில்லை. பண்பட்ட அறிவுத் தெளிவோடு மாணவிகள் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். இந்நிகழ்விற்குத் தமிழ்த்தென்றல் பேரவை மாணவச் செயலாளர் செல்வி அபிஜா, கணிதவியல் மூன்றாமாண்டு மாணவி வரவேற்புரை வழங்கினார்.
தேதி : 17/09/ 2022
இடம் : ஜே.ஜே.கே. கலையரங்கம்
நேரம் : 11.00 am – 12.30 pm
செவாலியர் டி தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் பிறந்த நாளையொட்டி. 17/9/2022 அன்று சமூக நீதி நாளைக் கொண்டாடியது. இதன் சிறப்பு விருந்தினராக ஆவணப்பட இயக்குநர் மற்றும் எழுத்தாளர் திரு. ரவிசுப்பிரமணியன் கலந்து கொண்டார், “கீழோர். மேலோர் இல்லை” எனும் தலைப்பில் உரையாற்றினர்· சங்க காலம் முதல் தற்காலம் வரையிலான சமூக நீதிக் கருத்துக்களை மாணவிகளோடு கலந்துரையாடினார். பெரியாரின் சமத்துவம் பற்றிய புரிதலை எடுத்துரைத்தார். சமத்துவம் என்பது அனைவருக்குமானது என்பதை அறிவுறுத்த வேண்டி அதற்கான ஆவணப் படத்தையும் காண்பித்தார். சமூக நீதி பற்றிய புரிதலை இந்நிகழ்வு மாணவிகளுக்கு ஏற்படுத்தியது மொழித்துறைத் தலைவர் முனைவர்.க.பிர்தா வரவேற்புரை கூற தமிழ்த்தென்றல் பேரவை மாணவச் செயலாளர் கணிதவியல் இரண்டாமாண்டு மாணவி அபிஜா, நன்றியுரை நல்கினார். இதில்150 மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்த் துறை சார்பாக 27/08/2022 அன்று சனிக்கிழமை சிறப்பு மாணவிகளுக்காக அவணப்படம் காட்டப்பட்டது. தமிழ்த் துறையும் டெசிமா மாஸ் மீடியாவும் இணைந்து இந்நிகழ்வை நடத்தினர். “சிவரஞ்சனியும் சில பெண்களும்” என்ற தலைப்பில் அமைந்த இப்படம் பெண்களின் மன உறுதியை வெளிப்படுத்துவதாக அமைந்து இருந்தது. மன வலிமை மிக்க பெண்களால் எதனையும் சாதித்துக் காட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையை இப்படம் மாணவிகளுக்கு ஏற்படுத்தியது. பெண்கள் தங்களுடைய கல்வியறிவையும் விடா முயற்சியையும் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வாக கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தியது. இதன் மூலம் மாணவிகள் தங்களை நிலைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. இதில் 30 மாணவிகளும் 5 தமிழ்த் துறைப் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். டெசிமா மாஸ் மீடியாவின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெயக்குமார் லாரன்ஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்க மாணவி அருள்மேரி நன்றியுரை வழங்கினார்.
செவாலியர்.டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையின் தமிழ்த்தென்றல் பேரவையின் சார்பாக 75 ஆவது சுதந்திர தினப் பேச்சுப்போட்டி 11.08.2022 அன்று நடைபெற்றது. “ இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு ‘ என்னும் தலைப்பிலான இப்பேச்சுப் போட்டியில் வணிகவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் திருமதி லெனோரா அவர்கள் நடுவராக வீற்றிருந்து சிறப்பித்தார். இப்போட்டியில் 23 மாணவிகள் பதிவு செய்திருந்தனர். 13 மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். நாட்டுப்பற்றைப் பறைச்சாற்றக்கூடிய விதத்தில் தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர். உளவியல், இரண்டாமாண்டு மாணவி சிந்துஜா, வேலுநாச்சியார் போல் வேடமணிந்து வந்து பேசியது மேலும் சிறப்பு சேர்த்தது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 12.00 மணியளவில் உளவியல், இரண்டாமாண்டு மாணவி, தரணி மற்றும் தனலட்சுமி தங்கள் நடனம் மூலம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.
போட்டியில் பரிசு பெற்றோர் விவரங்கள் :
முதல் பரிசு – செ.சிந்துஜா, உளவியல், இரண்டாமாண்டு
இரண்டாம் பரிசு – தனுஷ்கோடி, கணக்கியல் மற்றும் நிதியியல், இரண்டாமாண்டு
மூன்றாம் பரிசு – அருள்மேரி, இயற்பியல், இரண்டாமாண்டு
ஆறுதல் பரிசு :
பெரியநாயகி. அ - வேதியியல், இரண்டாமாண்டு
சாராபானு. அ - உளவியல், இரண்டாமாண்டு