நிகழ்வின் பெயர் : கவியரங்கம்
நிகழ்வின் தன்மை: கல்லூரி நிறுவனர் திருமதி. எலிசபெத் அம்மையாரின் பிறந்த நாள் கவியரங்கம
தேதி மற்றும் நேரம்:17-04-2024 மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை :25
சிறப்பு விருந்தினர்: முனைவர் சு. ஸ்ரீதேவி, முதல்வர், சி.டி.டி.இ மகளிர் கல்லூரி
அறிக்கை:
சமூக வளர்ச்சியில் பெண்களின் நிலைப்பாட்டைப் பதிவு செய்ய வேண்டி செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக 17/4/2024 அன்று மாலை 7 மணியளவில் கவியரங்கம் நடைபெற்றது. 25 மாணவர்களும் 8 பேராசிரியர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் சு. ஸ்ரீதேவி அவர்கள் தலைமைக் கவிதை படித்தார். கல்லூரி நிறுவனர் திருமதி. எலிசபெத் அம்மையாரின் பிறந்த நாளில் அவரது கல்விப் பணியைப் போற்றும் நோக்கில் இப்படைப்பரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விளிம்பு நிலை மக்கள் அதிகம் வாழக்கூடிய பெரம்பூர் பகுதியில் பெண் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட அம்மையாரின் பங்களிப்பு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய ஒன்று. அதனை முன்னெடுக்கும் வகையில் தமிழ்த்து வருடந்தோறும் இத்தகைய சீரிய முயற்சியை எடுத்து வருகின்றது. பெண்களின் மனத்தூய்மையான சிந்தனைகள் வலிமையான சக்தியாக உருவெடுக்கும் வல்லமை பெற்றது என்பதை மாணவிகள் இந்நிகழ்வில் வெளிப்படுத்தியது பெண் ஆளுமைக்கான அடையாளம்.
நிகழ்வின் பெயர் : பன்னாட்டுக் கருத்தரங்கம் (Inter National conference)
நிகழ்வின் தன்மை: செப்பேடுகள் உணர்த்தும் தமிழக வரலாறும் பண்பாடும்
தேதி மற்றும் நேரம்: 15-04-2024 I day
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை : 150
சிறப்பு விருந்தினர்: மாண்பமை. துணைவேந்தர் உயர்திரு. மு. கிருஷ்ணன், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம்
அறிக்கை:
செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சமுதாயக் கல்லூரியுடன் இணைந்து 15.04.2024 அன்று “செப்பேடுகள் உணர்த்தும் தமிழக வரலாறும் பண்பாடும்” என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கினை நடத்தியது. இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தின், மாண்பமை. துணைவேந்தர் உயர்திரு. மு. கிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு, கருத்தரங்க நூலை வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார். அவர் தம் உரையில், தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் முக்கியப் பெண்கள் சுயநிதிக் கல்லூரியான, சி.டி.டி.இ.மகளிர் கல்லூரியில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கருத்தரங்கினைத் தலைமை தாங்கி நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தொடர்ந்து செப்பேடுகள் குறித்த ஆய்வுகள் விரிவாகச் செய்யப்படவேண்டும் என்றும் கூறினார். மேலும் இவ்விழாவிற்கு முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கிய சி.டி.டி.கல்வி அறக்கட்டளையின் அறங்காவலரும், கல்லூரித் தாளாளருமான, உயர்திரு.இல.பழமலை, இ.ஆ.ப.ஓய்வு அவர்கள் செப்பேடுகள் பற்றிய முக்கியத் தகவல்கள் கூறி இத்தகைய ஆய்வுகள் இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அவசியம் என்பதை எடுத்துரைத்து வாழ்த்தினார். மேலும், இக்கருத்தரங்கில், பங்கேற்று வாழ்த்துரை வழங்கிய சரித்திரச் செம்மல் ச.கிருட்டிணமூர்த்தி அவர்கள், எனக்குத் தெரிந்தவரையில் இந்தியாவிலேயே செப்பேடுகள் குறித்த முதல் கருத்தரங்கம் இதுதான் என்றார். கல்வெட்டு அறிஞரும் பாறை ஓவியப்புகழ் பெற்றவருமான, திரு. அனந்தபுரம் கிருட்டிணமூர்த்தி அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்று, வடசென்னையில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் இப்படியொரு கருத்தரங்கம் நடத்தவேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இதற்கானப் பணியை முன்னெடுத்த இரு கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் இவ்விழாவில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சமுதாயக் கல்லூரியின் இயக்குநர், திரு.ப.ச.வேல்முருகன் அவர்கள் பங்கேற்று, எங்கள் கல்லூரி வழி நடத்தப்படும் கல்வெட்டியல் மற்றும் மரபுமேலாண்மை ஓராண்டு பட்டயப்படிப்பின் வெற்றியாக இக்கருத்தருங்கினைக் காண்பதாகக் கூறி மகிழ்ந்தார். நிறைவு விழாவில், சி.டி.டி.,இ. மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.ஸ்ரீதேவி அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். அம்மையார் தம் உரையில், தமிழின் சிறப்பும் தொன்மையும் ஆங்கில மொழி வழி உலகறியச் செய்யப்பட வேண்டும் என்னும் தம் அவாவினைத் தெரிவித்து விழா சிறக்க துணை நின்ற அனைவரையும் பாராட்டிச் சிறப்பித்தார். இக்கருத்தரங்கின் நெறியாளரான தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் கல்வெட்டியல் மற்றும் மரபுமேலாண்மை பட்டயப்படிப்பின் பொறுப்பாளருமான, பேராசிரியர். முனைவர்.திரு.ச.இரவி அவர்கள் இகருத்தரங்கின் நோக்கத்தினை விரிவாக எடுத்துரைத்து, இந்நிகழ்வு சிறப்புறத் தம்மோடு இணைந்து செயலாற்றிய சி.டி.டி.இ மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.ஸ்ரீதேவி அவர்களுக்கும் தமிழ்த்துறைக்கும் தனது வாழ்த்தினையும் பாராட்டினையும் தெரிவித்தார். மொழித்துறைத் தலைவர் முனைவர் க.பிரீதா அவர்கள் விழாவில் பங்கேற்ற நல்லுள்ளங்களுக்கு நன்றி பாராட்டிச் சிறப்பித்தார். முன்னதாகக் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜ. வள்ளி அவர்கள் சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட அவையினை வரவேற்று மகிழ்ந்தார். இக்கருத்தரங்கில், தொல்லியல் அறிஞர்களும் ஆர்வலர்களும் பேராசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்று ஏறத்தாழ 94 கட்டுரைகள் வழங்கிச் சிறந்ததொரு ஆய்வுக்கோவை வெளிவர உதவினர். கட்டுரையாளர்களுக்கு கோப்பும், நூலும், சான்றிதழும் வழங்கப்பட்டு நாட்டுப்பண்ணுடன் கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.
நிகழ்வின் பெயர் : தேசியக் கருத்தரங்கம் (National conference)
நிகழ்வின் தன்மை:காலந்தோறும் தமிழ் கருத்தரங்கம்
தேதி மற்றும் நேரம்: 08-04-2024 I day
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை : 150
சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் முனைவர் ப. மகாலிங்கம், புல முதல்வர் வேல்ஸ் பல்கலைக்கழகம், பல்லாவரம் சென்னை & முனைவர் க. மாரியப்பன், மொழி பெயர்ப்பியல் துறை திராவிடப் பல்கலைக்கழகம், ஆந்திரா
அறிக்கை:
செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை 8.4.2024 அன்று ‘காலந்தோறும் தமிழ்’ என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கினை நடத்தியது. சிறப்பு விருந்தினர்களாக மொழிகள் புல முதல்வர் வேல்ஸ் பல்கலைக்கழகம், பல்லாவரம், சென்னை. பேராசிரியர் முனைவர் ப. மகாலிங்கம் அவர்களும் மொழி பெயர்ப்பியல் துறை திராவிடப்
பல்கலைக்கழகம், ஆந்திரா முனைவர் க. மாரியப்பன் அவர்களும் வருகை புரிந்தனர். காலந்தோறும் வளர்ந்து வருகிற தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள மொழி வளர்ச்சி, அரசியல், சமூகவியல், மருத்துவம், வானியல் முதலிய பல துறைகளில் ஆய்வு செய்யப்பட்ட கட்டுரைகளைப் பேராசிரியர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கருத்தரங்க அமர்வில் பேசினர். கல்லூரி முதல்வர் முனைவர் சு.ஸ்ரீதேவி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மொழித் துறைத் தலைவர் முனைவர் க.பிரீதா சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா.அனிதா கருத்தரங்க
பொருண்மை உரை வழங்கினார். வருங்கால தலைமுறைக்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் எடுத்துச் சொல்லும் விதமாக இக்கருத்தரங்கம் அமைந்தது சிறப்புக்குரியது அழைப்பிதழ்
நிகழ்வின் பெயர் : உலகத் தாய்மொழித் தினம்
நிகழ்வின் தன்மை: மாணவர்களுக்குத் தாய்மொழிப் பற்றை வளக்கும் நோக்கம்
தேதி மற்றும் நேரம்:21.02.2024 Ihour (1.30 – 2.30
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை : 400
அறிக்கை:
21.02.2024 அன்று செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின், மொழித்துறை, கருத்துப் பரிமாற்றத்தின் முக்கிய கருவியாக விளங்கும் மொழியைச் சிறப்பிக்கும் வகையில் உலகத்தாய்மொழித் தினத்தைக் கொண்டாடியது. இதில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறைவணக்கமும் பாடிய பிறகு, தமிழ்த்தென்றல் பேரவையின் மாணவச் செயலாளர் இயற்பியல், இரண்டாமாண்டு மாணவி யுவஸ்ரீ வரவேற்புரை நல்கினார். அவரைத் தொடர்ந்து வணிகவியல் ,முதலாமாண்டு மாணவி தீபிகா தன் பேச்சாற்றலால் தமிழ்மொழியின் தொன்மை சிறப்பினையும், பெருமையையும் எடுத்துக் கூறினார்கள். கணக்கியல் மற்றும் நிதியியல் துறை, முதலாமாண்டு மாணவி மீனாட்சி கண்ணன் தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் பாடல் பாடினார். பிரெஞ்சு துறை மாணவிகள் குழுப்பாடல் , குழுநடனம், பாரம்பரிய உடை அணிவகுப்பு நிகழ்த்தினார்கள்.மேலும் கணினி அறிவியல், முதலாமாண்டு மாணவி திவ்யபாரதி தமிழ்மொழியின் சிறப்பினையும் உலகத்தாய்மொழித் தினக் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அவரைத் தொடர்ந்து ஹிந்தி துறை மாணவி சிறப்புரையாற்றினார். பின்னர் தமிழ் மற்றும் ஹிந்தி துறை மாணவிகள், அனைத்து மொழிகளின் சிறப்பை வெளிக்காட்டும் விதமாகத் தனித்தனியாகக் குழு நடனம் ஆடினார்கள். இறுதியாக நன்றியுரை நல்க நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
நிகழ்வின் பெயர் : தேசியக் கருத்தரங்கம்
நிகழ்வின் தன்மை: மாணவர்களுக்கான ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்துதல்
தேதி மற்றும் நேரம்: 21-02-2024 & 7 மணி நேரம்
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை : 07
சிறப்பு விருந்தினர்: Dr. Sudha Seshayyan
அறிக்கை:
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு மற்றும் பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை இணைந்து 21.02.2024 அன்று சென்னை பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்திய ‘திருக்குறள் – மீளாய்வு’
என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கிற்கு மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். மொழித்துறைத் தலைவர் முனைவர் க. பிரீதா அவர்கள் மாணவிகளை ஒருங்கிணைத்து கருத்தரங்கில் பங்கேற்க செய்தார். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவிகள் மற்றும் பேராசிரியர் கருத்தங்கின் பங்கேற்புச்சான்றிதழ் பெற்றனர்.
நிகழ்வின் பெயர் : பாதுகாப்பான தீபாவளி/Safety Diwali
நிகழ்வின் தன்மை: சமூகப் பொறுப்பு /Social Responsipility
தேதி மற்றும் நேரம்: 09-11-2023 2 Hours (10a.m -12 p.m)
வீதி நாடகம் மற்றும் கலந்துரையாடல்/street play and discussion
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை : 19 (Students – 16, faculties – 3)
அறிக்கை: பாருக்குள்ளே நல்லதொரு நாடாக திகழும் நம் பாரத நாட்டின் பண்பாடும் நாகரிகமும் இந்த உலகத்திற்கு முன் உதாரணங்களாகத் திகழ்கின்றன. நம் முன்னோர்கள் கொண்டாடி மகிழ்ந்த ஒவ்வொரு பண்டிகையும் ஒரு பண்பாட்டைப் பறைசாற்றி நிற்கின்றன. அவ்வகையில் அனைவரும் கொண்டாடி மகிழும் ஒரு மாபெரும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை இருக்கிறது. தீயவனான நரகாசுரன் அழிந்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அதன் வெளிப்பாடாக மனதில் எழும் தீய எண்ணங்கள் அழிய வேண்டுமென்று தெய்வத்தை வேண்டி தீபம் ஏற்றிக் கொண்டாடி மகிழும் தீபாவளி பண்டிகையின் ஒரு செயல்பாடாக பட்டாசு வெடிக்கும் பழக்கமும் மக்களிடையே இருக்கிறது. பட்டாசுகளை வெடிக்கும் முறைகளைச் சரிவர பின்பற்றாத காரணத்தினால் ஆண்டுதோறும் பலர் தீக்காயங்களை அடையவும் சிலர் இறக்கவும் நேரிடுகிறது. இதில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்கள்தான். இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. அந்த நோக்கத்திற்காக சென்னை- 11 பெரம்பூர் செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையும் நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து ‘பாதுகாப்பான தீபாவளி’ கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை 09-11-2023 அன்று காலை 10 மணி அளவில் நடத்தின. இந்நிகழ்ச்சி சென்னை-118 ஜெயம்பரஞ்ஜோதி தெரு, கொல்லன் தோட்டம் மற்றும் செம்பியம் இ.பி சாலையில் வசிக்கும் பொதுமக்களிடையே நடத்தப்பட்டது. பட்டாசு வெடிக்கும் போது அருகில் வாளியில் நீர் வைத்துக் கொண்டு வெடிக்க வேண்டும்; குழந்தைகளைப் பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது; பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் குழந்தைகளையும் முதியோர்களையும் அனுமதிக்க கூடாது; அரசு அனுமதி வழங்கிய நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்; முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்த்து குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட வேண்டும்; வீரியம் மிக்க பட்டாசுகளை வெடிப்பதால் பறவையினங்களும் வீட்டில் வளர்க்கும் விலங்கினங்களும் அஞ்சுகின்றன; பட்டாசு வெடிப்பதால் அதிலுள்ள வேதிப் பொருட்களால் காற்று மிகவும் மாசுபடுகின்றது; ஒலி மாசுபாடு ஏற்படுகிறது; போன்ற விழிப்புணர்வுகளை மையக் கருத்தாக கொண்ட வீதி நாடகம் பொதுமக்களிடையே மாணவிகளால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நாடகத்தைக் கண்டு களித்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாடி மகிழ்வோம் என்று உறுதியளித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக மாணவிகளும் பேராசியர்களும் பொதுமக்களுக்குத் தீபாவளி வாழ்த்துகளைச் சொல்ல பொதுமக்களும் தங்கள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் 16 மாணவிகள் உட்பட மொழித்துறைத் தலைவர் முனைவர் க. பிரீதா, கூட்டுச் செயலாண்மையியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் உ. ப்ரியா, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் அ. கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர். முனைவர் அ. கஸ்தூரி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
நிகழ்வின் நோக்கம்: சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டும்’ என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் உருவாக வேண்டும். அந்நோக்கத்திற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
மாணவிகளின் அறிவுசார்ந்த விழிப்புணர்வு வசனங்களைக் கேட்டு அனைவரும் பெரிதும் மகிழ்ந்தனர். குறிப்பாக மாணவிகளின் வீதி நாடகத்தைப் பார்த்த பெண் ஒருவர் பெரிதும் மகிழ்ந்து இனி குழந்தைகளிடம் பட்டாசுகளைக் கொடுக்க மாட்டோம் என்றும் வீரியம் குறைந்த பட்டாசுகளை மட்டுமே வெடிப்போம் என்றும் உறுதியளித்தார். அந்த ஒரு பெண்மணியிடம் ஏற்பட்ட விழிப்புணர்வும் மனமாற்றமும் இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் ஏற்பட இருக்கும் விழிப்புணர்விற்கான அடித்தளமாகவும் நம்பிக்கையாகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
மாணவிகளின் வீதி நாடகம்
பேராசிரியர்களும் மாணவிகளும் பொதுமக்களிடையே கலந்துரையாடல்
கருத்தரங்கம்
நிகழ்வின் பெயர் : கருத்தரங்கம்
தேதி மற்றும் நேரம்: 17.10.2023 , 10am – 11am
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை : 168
சிறப்பு விருந்தினர்:முனைவர் தமிழ்ச்செல்வி, பேராசிரியர்,கன்னடத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், University Reprenstative, சி.டி.டி.இ.மகளிர் கல்லூரி.
செவாலியர் டி.தாமஸ் எலிசெபெத் மகளிர் கல்லூரியில் 17.10.2023 அன்று அகத்தர மதிப்பீட்டுக் குழுவும் தமிழ்த் துறையும் இணைந்து நடத்திய கருத்தரங்கம் ஜே.ஜே.கெ கலையரங்கத்தில் நடைபெற்றது. தடைகளைத் தாண்டி வெல்வோம் என்னும் தலைப்பில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது.தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் இறைவணக்கத்தோடு இக்கருத்தரங்கம் தொடங்கியது. மொழித்துறைத்தலைவர் முனைவர்.க.பீரிதா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் முனைவர்.சு.ஸ்ரீ தேவி அவர்கள் தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் அவர்களின் ஆளுமைகள் மற்றும் அவரின் சாதனைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் கன்னடத் துறைத் தலைவரும் சிறப்பு விருந்தினருமான முனைவர்.தமிழ்ச்செல்வி அவர்கள் பெண்கள் தடைகளைத் தாண்டி எவ்வாறு வெற்றியடைய வேண்டும் என்று எடுத்துக் கூறினார்.மேலும் அவரின் வெற்றிக்கான முயற்சிகளையும் அவரின் வெற்றி பயணங்களின் தொடர்ச்சிகளையும் எடுத்துக் கூறி மாணவிகளைச் சிந்திக்க வைத்தார்.இலக்கியத் தரவுகளையும் வாழ்வின் யதார்த்த நிகழ்வுகளையும் எடுத்துக்கூறி வாழ்விற்குத் தேவையான சிறப்பான ஒரு பொழிவினை நிகழ்த்தினார். பின்னர் அகத்தர மதிப்பீட்டுக் குழு இயக்குநர் முனைவர்.செ.ஹாஜிமா ரபியத் பீவி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.பா.அனிதா அவர்கள் நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணோடு கருத்தரங்கம் இனிதே நிறையுற்றது.
நிகழ்வின் நோக்கம் –வெற்றிப்பெறும் சிந்தனையை மாணவிகளுக்கு உருவாக்குதல்.
இன்றைய சமூகச் சூழலில் பெண்களுக்கு பல தடைகள் உள்ளது.ஆனால் அத்தடைகளை எல்லாம் தாண்டி அவர்கள் வெற்றியடைய வேண்டும் என்னும் சிந்தனையை மாணவிகளுக்குச் சிறப்பு பேச்சாளர் மூலம் புரிய வைத்தல்.
சிறப்பு விருந்தினர் குறித்துக் கல்லூரி முதல்வர் உரை வழங்குகிறார்
சிறப்பு விருந்தினரைத் துறைத் தலைவர் முனைவர் க. பிரீதா வரவேற்றுப் பேசுகிறார்
மேடையில் சிறப்பு விருந்தினருடன் முதல்வர் அவர்கள்
சிறப்பு விருந்தினர் உரை வழங்குதல்
சிறப்பு விருந்தினருடன் முதல்வர் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்
10.10.2023 அன்று செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியும் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம், பாலக்காடு கேரளா இணைந்து திரு. வானவில் கே. ரவியின் படைப்புலகம் எனும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் கல்லூரி ஜே.ஜே.கே கலையரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
11 மாணவிகள் திரு. வானவில் கே ரவியின் புத்தகங்களைப் படித்துக் கட்டுரையாக வழங்கினர். இயற்பியல், இரண்டாமாண்டு மாணவி க. யுவஸ்ரீ ‘வானவி கே.ரவியின் அனுபவச் சுவடுகள் எனும் தலைப்பிலும் கணக்கியல் மற்றும் நிதியியல் முதலாமாண்டுமாணவி மு. ஆயிஷா ‘வானவில் ரவியின் கவிதைகளில் சமூகப் பார்வை எனும் தலைப்பிலும் உளவியல் இரண்டாமாண்டு மாணவி மோ. மதுமிர்தா இயல்பியல் வரலாறு எனும் தலைப்பிலும் கூட்டுச் செயலாண்மையியல் இரண்டாமாண்டு மாணவி கு. சினேகா ‘சொன்னதும் சொல்லாததும் நூல் கூறும் பண்பாட்டு நெறி முறைகள் எனும் தலைப்பிலும் கூட்டுச் செயலாண்மையியல் முதலாமாண்டு ஆ பிரிவு மாணவி ச. சுப பாரதி உலகக் கவி பாரதி எனும் தலைப்பிலும் கூட்டுச் செயலாண்மையியல் முதலாமாண்டு ஆ பிரிவு மாணவி நெ. சோபியா மெர்சி வானவில் இராவியின் கவிதைகளில் அழகியல் எனும் தலைப்பிலும் கணினியியல் இரண்டாமாண்டு மாணவி ர. ஜீனத் பரீன் நமக்குத் தொழில் கவிதை எனும் தலைப்பிலும் கணினியியல் முதலாமாண்டு மாணவி செ. இளமதி காற்று வாங்கப் போனேன்’ எனும் தலைப்பிலும் கணினியியல் முதலாமாண்டு மாணவி திவ்ய பாரதி கவிஞர் ரவியின் கவிதைகளில் படைப்பாளுமை எனும் தலைப்பிலும் உளவியல் இரண்டாமாண்டு மாணவி ஸ்ரீ ஹரிஷா கவிஞர் ரவியின் மொழி நடை எனும் தலைப்பிலும் கூட்டுச் செயலாண்மையியல் இரண்டாமாண்டு மாணவி அ.அனிஷா ரவியின் படைப்புகளில் தனி மனித உணர்வு எனும் தலைப்பிலும் கட்டுரைகள் வழங்கினர்.
முனைவர் தோ.எழிலரசி நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முனைவர் க. பிரீதா வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கத்திற்கு வருகை புரிந்த திரு. வானவில் கே. ரவி அவர்கள் ஏற்புரையில் கட்டுரைகள் வழங்கிய மாணவிகள் அனைவரும் சிறப்பாக தங்கள் உரையை நிகழ்த்தினார் எனப் பாராட்டிப் பேசினார் . மேலும் மாணவிகள் அவரின் புத்தகங்களைப் படித்து சிறப்பாக ஆய்வு நோக்கில் கட்டுரைகளை வழங்கியுள்ளனர் என்று வாழ்த்தினார். கல்லூரி நூலகர் முனைவர் சுமுகி பத்பநாபன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இயற்பியல் துறை இரண்டாமாண்டு மாணவி க. யுவஸ்ரீ நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். முதலாமாண்டு வகுப்புகளான வணிகவியல் அ மற்றும் ஆ பிரிவுகள், வணிக மேலாண்மையியல், கூட்டுச் செயலாண்மையியல் அ பிரிவு , வணிகக் கணக்கியல் மற்றும் நிதியியல் என 300 மாணவியர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். கட்டுரைகள் வழங்கிய 11 மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகக் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இறுதியில் நாட்டுப் பண் பாடப்பட்டு கருத்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.
திரு. வானவில் கே. ரவி அவர்கள் கட்டுரை வழங்கிய மாணவிக்குச் சான்றிதழ் வழங்குகிறார்
மொழித்துறைத் தலைவர் முனைவர் க. பிரீதா சிறப்பு விருந்தினர் திரு .வானவில் கே. ரவி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார்
நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களாகக் கலந்து கொண்ட மாணவியர்
சிறப்பு விந்தினருடன் தமிழ்ப் பேராசிரியர்கள்
நிகழ்வின் பெயர் : முத்தமிழ் விழா
தேதி மற்றும் நேரம்: 29.9.2023, 9.30 AM - 12.30 PM
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை : 560
சிறப்பு விருந்தினர்: மூத்த வழக்கறிஞர் A.அருள்மொழி, பன்முகக் கலைஞர் ஜோ.அருணோதய சொர்ணமேரி
செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பாக 29.9.2023 அன்று காலை 9.30 மணியளவில் ஜே.ஜே.கே. கலையரங்கில் முத்தமிழ் விழா நடைபெற்றது. ஒவ்வோராண்டும், மொழி ஆளுமை குறித்த புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய தேவை கருதி இந்நிகழ்வு தமிழ்த் துறையால் முன்னெடுக்கப்படுகின்றது. முத்தமிழையும் சிறப்பிக்கும் வகையில் ஒரு நாள் நிகழ்வாக இவ்விழா கொண்டாடப்பட்டது. சி.டி.டி கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மற்றும் செயலாளர் உயர்திரு.இ.பழமலை (இ.ஆ.ப.,) ஓய்வு அவர்கள் தலைமையுரையாற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார்.
கல்லூரியின் முதல்வர் பேரா.சு.ஸ்ரீதேவி அவர்கள் வாழ்த்துரை வழங்கித் தமிழ் மொழியின் தொன்மைச் சிறப்பினை அறிவுறுத்தினார். மொழித் துறைத் தலைவர் பேரா.க.பிரீதா அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முதல் அமர்வான இயற்றமிழுக்குச் சிறப்பு விருந்தினராக மூத்த வழக்கறிஞர்
A.அருள்மொழி அவர்கள் கலந்து கொண்டார். ‘‘வரலாற்றில் தமிழ்ப் பெண் ஆளுமைகள்” எனும் தலைப்பில் தமிழ்ச் சமூகத்தின் பெண் போராளிகளை வரிசைப்படுத்திப் பேசினார். சங்ககாலம் முதற்கொண்டு தற்போது வரைக்குமான பெண் எனும் ஆளுமை மீதான சமூக வரையறையைத் தனது உரையில் குறிப்பிட்டுக் காட்டினார்.
புலமை மிக்க பெண்ணுக்கான சமூக மதிப்பீட்டை அடையாளப்படுத்தினார். தமிழ்ச் சமூக வரலாற்றில் பெண்களின் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுக் குறித்த சிந்தனைகளைப் பதிவு செய்தார். பெண் எனும் தன்மையிலான எழுச்சியாகவே அவர்தம் உரை அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து ‘இசைத் தமிழும் நாடகத் தமிழும் அன்று முதல் இன்று வரை’எனும் தலைப்பில், பன்முகக் கலைஞர் ஜோ.அருணோதய சொர்ணமேரி, சிறப்புரையாற்றினார். தமிழின் இசைக் கூறுகள் மற்றும் இசைக் கருவிகள் குறித்து எடுத்துக் கூறினார். நாடக அமைப்பு முறை மற்றும் நோக்கங்கள் பற்றி விரிவாக விளக்கினார். தமிழிலக்கியங்களில் காணலாகும். நாடகக் கூறுகளை நடித்துக் காட்டினார்.
தமிழ்ச் சமூகம் பண்பாட்டுப் புரிதலை மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் விதமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. நிறைவாகத் தமிழ்த் தென்றல் பேரவை மாணவச் செயலர் செல்வி K. யுவஸ்ரீ இயற்பியல், இரண்டாமாண்டு நன்றியுரை நவின்றார். 400க்கும் மேற்பட்ட மாணவிகள் இதில் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினரின் இசை நிகழ்ச்சி முத்தமிழ் விழாவின் முத்தாய்ப்பாக அமைந்து இருந்தது.
நிகழ்வின் நோக்கம் - இயல் , இசை, நாடகம் எனும் முத்தமிழ் பற்றிய புரிதலை ஏற்படுத்துதல்
முத்தமிழிலிலும் சிறந்து விளங்குபவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக வரவைத்து மாணவிகளுக்கு உரைநிகழ்த்தவதன் மூலம் மாணவிகள் பல்வேறு செய்திகளைத் தெரிந்து கொள்ளுதல்
இயல் – சிறப்பு விருந்தினர் மூத்த வழக்கறிஞர் A.அருள்மொழி மற்றும் கல்லூரி தாளாளர் குத்து விளக்கு ஏற்றுகின்றனர்
மேடையில் இசை மற்றும் நாடகத் தமிழின் சிறப்பு விருந்தினர்
சிறப்பு விருந்தினர் பறை இசைக்கிறார்
முத்தமிழ் விழாவில் கலந்துகொண்ட மாணவிகள்
நிகழ்வின் பெயர்: சமூக நீதி நாள்
நிகழ்வின் தன்மை: சிறப்புக் கலந்துரையாடல்
தேதி மற்றும் நேரம்: 19.9.2023 - 11 AM TO 12 PM
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை : 260
சிறப்பு விருந்தினர்: பேராசிரியர்.வீ. அரசு, மேனாள் தமிழ்த் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழம்
செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக 19.9.2023 அன்று காலை 11 மணியளவில் டி.தாமஸ் கலையரங்கில் ‘சமூக நீதி நாள்’ குறித்த சிறப்புக் கலந்துரையாடல் நடத்தப் பெற்றது. ‘சமூக நீதி’ எனும் சொல்லாடல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டி இந்நிகழ்வு தமிழ்த் துறையில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு கல்லூரியின் முதல்வர் பேரா.சு.ஸ்ரீதேவி அவர்கள் தலைமை தாங்கினார். மொழித் துறைத் தலைவர் பேரா.க.பிரீதா அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இத்தகு எழுச்சி மிக்க நிகழ்விற்கு சிறப்புரையாற்ற பேரா.வீ. அரசு, மேனாள் தமிழ்த் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழம் வருகை புரிந்தார். பெரியாரின் சாதீய முரண்பாடு மற்றும் பாலின முரண்பாடு பற்றியும் விரிவாக விளக்கியுரைத்தார். ‘பாலின சமத்துவம் எனும் சமூக நீதி’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்ணுக்கான சமூகம் சார்ந்த நிலைப்பாட்டை வரலாற்று அடிப்படையில் மாணவர்களுக்குப் புரிய வைத்தார்.
பெரியாரின் கொள்கைகள், மனு ஸ்மிருதி எனும் வடமொழி நூலின் பெண் பற்றிய புரிதல்கள், பெண்ணின் சிந்தனை குறித்த சமூகக் கருத்தியல்கள் எனப் பெண் ஆளுமை பற்றிய சமூக நீதியை எளிமையாக விளங்க வைத்தார். இதில் 260க்கும் மேற்பட்ட பல்வேறு துறையைச் சார்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகளோடு கேள்வி, பதில் அடிப்படையில் கலந்துரையாடல் நிகழ்த்தப் பெற்றது. செல்வி.ஜீனத் பரீன், கணினியியல் இரண்டாமாண்டு மாணவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். செல்வி.ம சந்தியா கணினியியல் இரண்டாமாண்டு மாணவி நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களை எடுத்துக் கூறி அனைவருக்கும் நன்றியுரை நல்கினார். விழா இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்வின் நோக்கம் – சாதிய பாகுபாடு பற்றிய சிந்தனையை மாணவிகளுக்கு உருவாக்குதல்
பின்னூட்டம் – இன்றைய சமூகச் சூழலில் சாதிய பாகுபாடு எனும் கொடிய செயல் மனிதர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தும் பிரிவினையை மாணவிகளுக்குச் சிறந்த பேச்சாளர் மூலம் புரிய வைத்தல்
சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசினைக் கல்லூரி முதல்வர் வழங்குகிறார்
சிறப்பு விருந்தினரைத் துறைத் தலைவர் முனைவர் க. பிரீதா வரவேற்றுப் பேசிகிறார்
நிகழ்வின் பெயர்: கல்லூர் நிறுவனர் எலிசபெத் அம்மையார் நினைவுப் பேச்சுப் போட்டி – கல்வித் தாய் எலிசபெத் அம்மையார்
தேதி மற்றும் நேரம்: 4.9.2023 10 மணி முதல் 11 மணி வரை
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை : 5
சி.டி.டி.இ மகளிர் கல்லூரியின் நிறுவனர் டாக்டர் எலிசபெத் அம்மையாரின் நினைவு நாளையொட்டி செப்டம்பர் 4 ஆம் தேதி கல்வித் தாய் எலிசபெத் அம்மையார் எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. வடச் சென்னையில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அம்மையாரின் கல்வித் தொண்டினை மாணவிகள் அழகுற எடுத்துரைத்தனர். முதலாமாண்டு உளவியல் மாணவி எஸ். பர்ஹத்துசபர், முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவி எம்.திவ்ய பாரதி, வணிகவியல் முதலாமாண்டு மாணவி எம். சங்கீதா, முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவி ஸ்ரீஜா . ஹே, கணக்கியல் (ம) நிதியியல் முதலாமாண்டு மாணாவி எம். ஆயிஷா , இரண்டாமாண்டு இயற்பியல் மாணவி எம். யுவஸ்ரீ , மூன்றாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவி கிருத்திகா ஆகியோர் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர். மொழித் துறைத் தலைவர் முனைவர் க. பிரீதா போட்டியில் சிறப்பாகப் பேசிய மாணவிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
கல்வித் தாய் எலிசபெத் அம்மையார் எனும் தலைப்பில் மாணவிகள் பேசுகின்றனர்
நிகழ்வின் பெயர் : சுதந்திரதினவிழா
நிகழ்வின் தன்மை: மாறுவேட அணிவகுப்பு
தேதி மற்றும் நேரம்: 14/08/2023 ; பிற்பகல் 2.30 மணி
முறை : நேரில் நடத்தப்பட்டது
நிகழ்வின் முறை : நம் கல்லூரித் தமிழ்த்துறை, 76 ஆவது இந்திய சுதந்திர தினத்தினை மிகச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுத் தங்கள் இன்னுயிரையும் நீத்தத் தியாகிகளைச் சிறப்பிக்கும் விதமாக, 14.08.2023 அன்று மதியம் 2:30 மணியளவில், மாறுவேட அணிவகுப்பு நம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாணவியர் அனைவரும் இந்நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி, சுதத்திரப் போராட்டத் தியாகிகள்போல் மாறுவேடமணிந்து பேசி, அவர்களை சிறப்பித்துப் பயனடைந்தனர்
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை : 6
நிகழ்வின் நோக்கம்: சுதந்திர போராட்ட வீரர்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல்.
ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள்:
மொழித்துறைத் தலைவர் - முனைவர் க.ப்ரீத்தா.
முனைவர் ஜ. வள்ளி
மாணவ ஒருங்கிணப்பாளர்கள்:
ஷர்புன்னிஸா- இரண்டாமாண்டு, உளவியல்
மகாலக்ஷ்மி -இரண்டாமாண்டு, உளவியல்
ஜிவஜெசி - முதலாமாண்டு, ஆங்கிலம்
பின்னூட்டம் : நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை மாணவியர் அறிந்து பயனுற்றனர்.
நாள் - 10/8/2023
நேரம் - காலை 9 மணி
முறை - நேரில்
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை - 21
தலைப்பு - முத்தமிழ் கலைஞர் ஆளுமை
இடம் - டி தாமஸ் கலையரங்கம்
நிகழ்வின் நோக்கம் - டாக்டர்.கலைஞரின் அரசியல் வாழ்க்கை பற்றிய தகவல்களை உரையின் மூலம் வழங்கவும், அவரது சாதனைகளை கண்காட்சியின் மூலம் வெளிப்படுத்தவும் நிகழ்வு நடத்தப்பட்டது.
பின்னூட்டம் - மாணவர்கள் முழு ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்டதுடன், கண்காட்சியைக் கண்டு மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
விளக்கம் - 10 ஆகஸ்ட் 2023 அன்று தமிழ்த் துறை கலைஞரின் நூற்றாண்டு விழாவை பேச்சுப் போட்டி மற்றும் கண்காட்சி வைத்து நடத்தியது. இந்த நிகழ்ச்சியின் காலம் 3 மணி நேரம் மற்றும் இந்த போட்டிகளில் மொத்தம் 21 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் ஒவ்வொரு மாணவர்களும் டாக்டர் கலைஞரைப் பற்றிய பல தகவல்களை அறிந்து மகிழ்ந்தனர்.\
Name of the Event: பேச்சுப் போட்டி (Oratorical Competition)
Nature Fo The Event: ஆளுமைத் திறன் (Personality Development)
Date and Duration: 22-01-2024 2 Hours (2.30 P.M - 4.30)
Mode: நேரடி நிகழ்வு(Off Line)
Methodology: உரையாடல் (Discussion)
No. Of Participant: 10
Resource Person: Dr. K. Preetha and Dr. P. Anitha
தமிழ்த் தென்றல் பேரவை அறிக்கை – 2023 -2024
செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை, தமிழ்த் தென்றல் பேரவைச் சார்பாக மாணவர்களின் தனித்திறமையைக் கண்டறிதல் மற்றும் இலக்கியப் புலமையை வளர்த்தல் நோக்கத்திற்காக இலக்கியப் போட்டிகள் நடத்தப் பெற்றன.
Name of the Event: கவியரங்கம் (Poets Meet)
Nature Fo The Event: ஆளுமைத் திறன் (Personality Development)
Date and Duration: 23-01-2024 1 Hour (2.30 P.M - 3.30)
Mode: நேரடி நிகழ்வு (Off Line)
Methodology: Article presentation
No. Of Participant: 5
Resource Person: Dr. J. Valli, Dr. A. Vimalarani
23-01-2024 அன்று மாணவர்களின் கற்பனைத் திறனையும் எழுத்துப் புலமையையும் வளர்க்கும் நோக்கத்தில் ‘மண்ணிலே ஈரம் உண்டு’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தப் பெற்றது. கவியரங்கில் ஐந்து மாணவிகள் தம் கவிதைகளை அரங்கேற்றினர். கவியரங்கின் தலைமையாளராக மொழித்துறைத் தலைவர் முனைவர் க. பிரீதா, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் ஜ. வள்ளி மற்றும் முனைவர் அ. விமலாராணி முனைவர் அ. கஸ்தூரி ஆகியோர் கலந்துக் கொண்டனர். கவியரங்கில் முன்னதாக முனைவர் ஜ. வள்ளி தலைமைக் கவிதை வாசித்தார். அவரைத் தொடர்ந்து முனைவர் அ. விமலாராணி, முனைவர் அ. கஸ்துரி ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். இறுதியாக மொழித்துறைத் தலைவர் முனைவர் க. பிரீதா தம் கவிதையை அரங்கேற்றம் செய்து மாணவிகளுக்கு வாழ்த்துக் கூறி கவியரங்கை நிறைவு செய்தார். போட்டிக்கான நிகழ்ச்சிகள் அனைத்தையும் 2023-2024 ஆம் கல்வியாண்டின் தமிழ்த்தென்றல் பேரவையின் துணைத்தலைவர் முனைவர் அ. கஸ்தூரி மற்றும் தமிழ்த் தென்றல் பேரவை மாணவச் செயலாளர் மாணவி க. யுவஸ்ரீ ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.