Free Physiotherapy Consultancy R.Rajkumar MPT sports Physiotherapist Simmakkal Madurai
புற்றுநோய் மக்களை அச்சுறுத்தும் ஒரு கொடிய நோயாக இருந்து வருகிறது. இன்று வரை உலகளவில் 500 க்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. புற்றுநோய் நம் உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை எல்லாம் அழித்து புற்றுநோய் கட்டிகளாக வளர்ச்சி பெற வைத்து விடுகிறது. இந்த புற்றுநோய் கட்டிகள் நம் உடலில் ஒரு உறுப்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை.
உடலில் புற்றுநோய் அபாயத்தைத் தூண்டும் உணவுகள்
தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொழுப்பு, ஸ்டார்ச் போன்ற பொருள்களின் சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இந்த வகை உணவுகளில் பல்வேறு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் அதிகரிப்பு ஏற்படும் அபாயம் உண்டாகலாம். மேலும் இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. இது வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அதிகரிப்பதால், புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
இன்று பலரும் சிவப்பிறைச்சியை விரும்பி உண்ணுகின்றனர். ஆனால் இது புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக பதப்படுத்தப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட இறைச்சிகளே புற்றுநோயைத் தூண்டுகிறது. மருத்துவர் மணீஷ் அவர்களின் கூற்றுப்படி, “சிவப்பிறைச்சிகளை சமைக்கும் விதம் மிகவும் முக்கியமாகும். பல நேரங்களில் சமைக்கும் போது சிவப்பிறைச்சியில் தனிமங்கள் உற்பத்தியாகலாம். இது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம்.”
இந்த வகை இறைச்சியில் நைட்ரேட்டுகள், நைட்ரைட்டுகள் போன்ற பல கூறுகள் உள்ளது. சமைக்கும் போது சூடுபடுத்தும் போது நைட்ரோசமைன் என்ற தனிமத்தை வெளியிடுகிறது. இது பெருங்குடல் மற்றும் வயிற்று புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம். இந்த பதப்படுத்தப்பட்ட உணவை பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கும் கொடுக்கக் கூடாது. மாற்றாக, குறைந்த கொழுப்புள்ள இறைச்சியை உட்கொள்ளலாம்.
எந்த வகையான இனிப்புகளையும் அதிகளவு உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். குறிப்பாக, சர்க்கரை சார்ந்த பானங்கள் மார்பக மற்றும் வயிறு புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. பொதுவாக அதிகளவு சர்க்கரை உட்கொள்வது உடல் பருமனை அதிகரிப்பதுடன், இன்சுலின் எதிர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், புற்றுநோய்க்கு சர்க்கரை எந்த அளவுக்குக் காரணம் என்பதை அறிய கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது
போதைப் பொருள்கள் அதிலும் குறிப்பாக மது அருந்துவது உடல் நலத்திற்கு எந்த வித பயனும் இல்லை. அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்கள் பல்வேறு நோய்களைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். மது அல்லது வேறு வகையான போதைப் பொருள்களை உட்கொள்வதால் பல்வேறு வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதில் மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் போன்றவை அடங்கும். தினசரி மது அருந்துவது கல்லீரல் பாதிப்பையும் ஏற்படுத்தும். மேலும் இது ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களுக்கும் காரணமாகிறது.
காற்று மாசுபாடு,
கலப்பட உணவுகள்,
புகைப்பிடித்தல்
மற்றும் மதுப்பழக்கம்
போன்ற காரணங்கள் நமக்கு புற்றுநோய் ஏற்படக் காரணமாக அமைகின்றன.
இந்த புற்றுநோய்கள் வந்த பிறகு குணப்படுத்துவதை விட அதை வராமல் தடுப்பது சிறந்தது . எனவே புற்றுநோய் வராமல் தடுப்பதில் நம் அன்றாட உணவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் சில வகை உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள், பழங்கள் போன்றவை புற்றுநோய் வராமல் காக்க உதவி செய்கிறது. இந்த வகை உணவுகளில் இயற்கையாகவே புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கின்றன. இவை புற்றுநோயை விரட்டுகிறது என்பது மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. சரி நமக்கு வரும் புற்றுநோயை தடுக்க எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். தெரிஞ்சுக்கலாம்
தக்காளி சிவப்பாக இருப்பதற்கு அதில் காணப்படும் லைக்கோபீன் என்ற பொருள் தான் காரணம். இந்த லைக்கோபீன் பொருளில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உள்ளது. தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, தக்காளியை அதிகளவு பயன்படுத்தி வாருங்கள். இது உங்களுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை தரும்.
பீன்ஸில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் இது குடல் புற்றுநோயை போக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. குடல் புற்று நோய் கொண்ட நபர்களுக்கு பீன்ஸை உணவில் சேர்க்க சொன்ன போது அவர்களின் புற்றுநோய் கட்டிகளின் வீரியம் குறைந்திருப்பது தெரிய வந்தது. ஊட்டச்சத்து மற்றும் புற்றுநோய் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி பீன்ஸ் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை 75 சதவீதம் தடுக்கும் திறன் கொண்டு இருப்பது தெரிய வந்தது.
பிரக்கோலியில் சல்போராபேன் என்ற பொருள் உள்ளது. இது புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. கிளினிக்கல் கேன்சர் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட 2010 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின்படி,குறிப்பாக பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயை 50 சதவீதம் வரை குறைக்க கூடியது என்கிறது ஆராய்ச்சி தகவல்கள். எனவே பிரக்கோலியில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் காணப்படுவதால் இதை சாலட்டுகள், சூப்கள், சாண்ட்விட்ச்கள் போன்றவற்றில் நீங்கள் சேர்த்து பயன்படுத்தி வரலாம். அதே மாதிரி பெருங்குடல் புற்றுநோயை தடுக்கவும் பிராக்கோலி உதவுகிறது.
இலவங்கப்பட்டையில் இரத்த சர்க்கரை மற்றும் அழற்சியை போக்கும் தன்மை காணப்படுகிறது. பொதுவாக இலவங்கப்பட்டையை எடை இழப்புக்காக பயன்படுத்துவர். ஆனால் இலவங்கப்பட்டை புற்றுநோயை தடுக்கவும் உதவுகிறது என்கிறது ஆராய்ச்சி. பட்டை புற்றுநோய் கட்டிகள் பரவுவதை தடுத்து நிறுத்துகிறது. குறிப்பாக பட்டை யிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் தலை மற்றும் கழுத்தில் வளரும் புற்றுநோய் செல்களை குறைக்கின்றன. எனவே தினமும் 1/2-1 டீ ஸ்பூன் அளவு பட்டை பொடியை சேர்த்து வாருங்கள். இது உங்களுக்கு புற்றுநோயை தடுக்கும் ஆற்றலை கொடுக்கும்.
மஞ்சள் நாம் பாரம்பரியமாக பயன்படுத்தும் ஒரு பொருளாகும். மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் மாதிரி செயல்படுகிறது. இதனால் இதற்கு புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் காணப்படுகிறது. குறிப்பாக மஞ்சள் குடல் புற்றுநோயை குறைக்கும். மேலும் மற்றொரு ஆராய்ச்சியில் தெரிய வந்தது என்னவென்றால் குர்குமின் பொருள் கழுத்து மற்றும் தலையில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. அதுமட்டுமல்லாமல் மஞ்சள் நுரையீரல், மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களையும் வராமல் தடுக்க உதவுகிறது. எனவே மஞ்சளை தவறாமல் உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள்.
பொதுவாக கேரட் நம் கண் பார்வைக்கு நல்லது என்று தெரியும். ஆனால் உண்மையில் கேரட்டில் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் காணப்படுகிறது. இரைப்பை புற்றுநோய் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கேரட் வயிற்று புற்றுநோயின் அபாயத்தை கிட்டத்தட்ட 26% குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. அதே மாதிரி புரோஸ்டேட் மற்றும் நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டும் காணப்படுகின்றன. எனவே கேரட்டை பச்சையாகவோ அல்லது பொரியல், வேக வைத்தோ சாப்பிட்டு வரலாம். உங்கள் உணவில் இனி கேரட்டையும் தவறாமல் சேருங்கள்.
பூண்டில் இருக்கும் கந்தகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அத்துடன் பைட்டோகெமிக்கல் நோய் பாதிப்பை தடுக்கும் ஆற்றலை கொண்டிருப்பதுடன், வயிற்றில் ஏற்படும் கட்டிகளை குறைக்க உதவுகிறது. இஞ்சியில் இருக்கும் காரத்தன்மைக்கு காரணமான ஜிஞ்சரால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் புராஸ்டேட் புற்று நோய் பாதிப்பை குறைக்கிறது
எள்ளு
வயிற்றில் இருக்கும் புண்ணை குணமாக்கும் தன்மை எள்ளில் உள்ளது. இதில் இடம்பிடித்திருக்கும் துத்தநாகம் தோல் தொடர்பான புற்றுநோய் பாதிப்பை தடுக்கும்.
முளைக்கட்டிய பயறுகளில் லைசின் என்கிற அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் சல்ஃபோராபேன் என்கிற சேர்மானம் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. வெறும் பயறுகளை விட முளைக்கட்டிய பயறுகளில் சல்ஃபோராபேன் அளவு 50 சதவீதம் வரை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது
வைட்டமின் சி, கோமெஸ்ட்ரோல் போன்று நுண் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும் பச்சை பட்டாணி ரத்த புற்று நோய், நுரையிரல், ஆசணவாய் புற்றுநோய் பாதிப்பின் தாக்கத்தை குறைக்கிறது.