திருமூலர் பிராணாயாமம்
Free Physiotherapy Consultancy R.Rajkumar MPT sports Physiotherapist Simmakkal Madurai
திருமூலர் பிராணாயாமம்
பிராணாயாமம் பற்றி திருமூலர் அருளிச் செய்த ”திருமந்திரத்தில்” அட்டாங்க யோகம் பகுதியின் நான்கம் பிரிவில் வெளிப்படுத்திய மூச்சுப் பயிற்சி தொடர்பான சிறு விளக்கம் கீழே பதிவாகியுள்ளன.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!
எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு வங்கியில் பணம் சேமிப்பது போல. வங்கியிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் நம்முடைய மூச்சை விரைவாக செலவழித்தால் நாம் உயிர் வாழும் ஆண்டுகளும் குறையும்.
இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம்.
சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.
திருமூலர் தனது பாடலில்:-
விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே
விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.
ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.
ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்
18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)
ஆம் சுவாசமே நம் உயிர் வாழ்விற்கு ஆதாரம். ஆனால் அதைக் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல் நாம் வாழ்ந்து வருகிறோம்.
சுவாசம் பற்றிய அறிவு அனைத்து தரப்பு மக்களுக்கும் அவசியமான ஒன்றாகும். பலப்பல தேவையில்லாத விஷயங்களைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்கிற நாம், நம் உயிர் வாழவிற்கு ஆதாரமான சுவாசம் பற்றி யோசிக்கக் கூடச் செய்வதில்லை.
சுவாசத்தை வாசி என்பார்கள். வாசியை மாற்றிச் சொன்னால் சிவா. ஆக சுவாசம் கடவுளுக்கு நிகரான அல்லது கடவுளை அறிய உதவும் விஷயமாகும். சுவாசிப்பதை இரண்டு நிலைகளாகச் சொல்லலாம்.
ஒன்று நுரையீரலுக்குச் சென்ற பிராணவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களுக்குக் கொடுக்கப்பட்டு இரத்தக் குழாய்களிலுள்ள கரிமிலவாயு காற்றால் வெளியேற்றப்படுகிறது.
இரண்டு இரத்தக் குழாய்களில் உள்ள பிராணவாயு செல்களுக்குக் கொடுக்கப்பட்டு செல்களில் உள்ள கரிமிலவாயு இரத்தக் குழாய்களால் பெறப்படுகிறது. இப்படி இரண்டு நிலைகளில் வாயுக்களின் பரிமாற்றம் நடைபெறுகிறது.
நாம் சுவாசிக்கும் போது மூக்கில் நுழையும் காற்றிலுள்ள தூசுகள் மூக்கின் உள் உள்ள முடிகளாலும் ஈரப்பதமுள்ள மியூகஸ் பரப்பாலும் தடுக்கப்பட்டு தொண்டைப் பகுதிக்குக் காற்று செல்கிறது.
அங்கிருந்து குரல்வளைப் பகுதியைத் திறந்து கொண்டு மூச்சுக் குழலுக்குச் சென்று, அங்கிருந்து சிறிய மூச்சுக் குழலையும், நுண்ணிய மூச்சுக் குழலையும் தாண்டி காற்றறைகளுக்கு வந்து சேர்கிறது.
இங்கு வைத்துதான் பிராணவாயு நிறைந்த மூச்சுக் காற்றும் இரத்தத்தில் உள்ள கரிமில வாயு நிறைந்த காற்றும் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.
நுண்ணிய காற்றறைகளும், நுண்ணிய மூச்சுக் காற்றுக் குழாய்களும், நுண்ணிய இரத்தக் குழாய்களும் நிறைந்த தொகுதியே நுரையீரல் ஆகும்.
இதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 5 லிட்டர் காற்று. இது மார்பின் இடப்பக்கமும், வலப்பக்கமும் இரு பாகங்களாக அமைந்துள்ளன. உயிர் மூச்சுக் காற்றுப் பரிவர்த்தனை நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் நடைபெறுவதால் இது ஒரு முக்கியமான உறுப்பாகக் கருதப்படுகிறது.
செல்களில் உள்ள கரிமிலவாயு நிறைந்த காற்று அசுத்த இரத்தக் குழாய்களால்(சிரை) கவரப்பட்டு இதயம் செல்கிறது. அங்கிருந்து இரத்தக் குழாய்கள் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது.
அங்குள்ள காற்றறைகளில் கரிமிலவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களால் தள்ளப்பட்டு, காற்றறைகளில் உள்ள சுவாசத்தின் மூலம் வந்த காற்று இரத்தக்குழாய்களால் பரிவர்த்தனை செய்யப்பட்டு இதயம் வழியாக செல்களுக்கு அனுப்பப்படுகிறது.
உள்ளிழுக்கும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு, நைட்ரஜன் 79%, பிராணவாயு 20 %, கரிமிலவாயு 0.04%, ஆகும்.
வெளிவிடும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு நைட்ரஜன் 79%, பிராணவாயு 16%, கரிமிலவாயு 4.04% ஆகும்.
பிராணாயாமத்தின் பொழுது காற்று நுரையீரலில் அதிக நேரம் நிறுத்தப்படுவதால் காற்றிலுள்ள ஆக்சிஜன் அதிக அளவு பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
இதனால் செல்களுக்கு அதிக ஆக்சிஜன் என்கிற பிராணவாயு கொடுக்கப்பட்டு சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும் ஆக்சிஜனால் கிடைக்கும் பிராண சக்தி தசைகளில் உள்ள மயோகுளோபினால் சேர்த்து வைக்கப்படுகிறது.
சாதாரணமாக சுவாசிக்கும் போது நுரையீரலில் உள்ள 3000 காற்றறைகள் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் பிராணாயாமத்தின் போது 6000 காற்றறைகள் செயல்படுகின்றன.
எனவே இரு மடங்கு சக்தி கிடைப்பதோடு, அதிகமான பிராணசக்தி சேமிக்கப்பட்டு ஒரு நிலையில் ஓஜஸாக மாறி மூலாதாரத்தில் சேர்கிறது. இதனால் ஆயுளும் அதிகரிக்கிறது.
செல்களுக்குத் தேவையான பிராணவாயுவை பிராணாயாமம் மூலம் பெறும் தன்மையையும் உடல் அடைவதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன.
நிமிடத்துக்கு 15 முறை சுவாசிக்கும் மனிதன் 10 நிமிடம் பிராணாயாமம் செய்யும் போது ஒரு பங்கு நேரம் உள் இழுத்தல், நாலு பங்கு நேரம் உள்ளே வைத்தல், இரண்டு பங்கு நேரம் வெளியே விடுதல் என்று சுவாசம் செய்யும் போது 140 சுவாசங்களை மிச்சப்படுத்துகிறான்.
காலை, மாலை இரு வேளையும் செய்தால் 280 சுவாசம் ஒருநாளில் மிச்சமாகிறது. மேலும் சுவாசத்தை ஆழமாக இழுத்து மெதுவாக விடும் பழக்கத்தைப் பெற்றுவிடுவதால் நிமிடத்திற்கு மூன்று சுவாசம் மிச்சமானால் கூட, தூங்கும் நேரம் போக மற்ற நேரங்களில் எவ்வளவு சுவாசம் மிச்சமாகும் என்று கணக்கிட்டுப் பாருங்கள்.
அந்த அளவு ஆயுள் அதிகரிக்கும் என்பதோடு மட்டுமல்ல ஆரோக்கியமும் மேம்படுகிறது.
இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. பிராணன் அடங்கினால் மனம் அடங்கும், பிராணனின் சலனம் மனதின் சலனம், பிராணன் வசமானால் மனம் வசமாகும் என்றெல்லாம் சொல்கிறீர்கள்.
அப்படியானால் எதற்காக அஷ்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆசனம் என்கிற மூன்று நிலைகளை பிராணாயாமத்திற்கு முன்னால் கடைபிடிக்கச் சொல்கிறீர்கள் ?
நேரடியாகப் பிராணாயாமம் அதற்கு அடுத்து பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று போய் விடலாமே ?
ஒருவன் தன் ஆன்மிக வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியே இயமம், நியமம் என்பனவாம், வேறொன்றும் இல்லை. இந்த ஒழுக்க நெறிகளையும், ஆசனம் என்கிற உடலை உறுதி செய்கின்ற பயிற்சியையும் மேற்கொண்டவர்கள் மட்டுமே தியானத்தில் நிலைத்து நின்று சமாதி நிலையை அடைய முடியும்.
மற்றவர்கள் மனதையும், உடலையும் வலுவாக்கி உலகாய வாழ்வை திறம்பட நடத்திக் கொள்ளலாம். ஏனென்றால், எவ்வளவு சக்தியை மேம்படுத்திக் கொண்டாலும், உலகாய வாழ்வைப் பொறுத்த மட்டில் சக்தி விரையமாவதைத் தடுக்க முடியாது.
இந்த உலகாய வாழ்விலும் இல்லற ஒழுக்கம் என்ற நெறியைத் தவறாமல் கடைபிடித்து மேம்பாடு அடைந்தவர்களும் உண்டு.
எனினும் இரண்டிற்கும் பலனடையும் காலம் வித்தியாசப்படும். என்றாலும் பிராணனைக் கையிலெடுத்தவர்கள் காலதாமதமானாலும் உண்மையை உணரும் வழிக்கு தானே வருவார்கள். இது நிச்சயம்.
ஒரு ஆரோக்கியமான சூழலில் வாழும், திடகாத்திரமான மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிப்பான். ஆனால் நாமெல்லாம் இருபது முறைக்கும் அதிகமாகவே சுவாசிக்கிறோம் என்பது அதிர்ச்சிதரும் புள்ளி விபரம்.
ஆரோக்கியமான நல்ல மனிதனுக்குக் கூட ஒரு நாளைக்கு 21600 சுவாசங்கள் இயங்கினாலும், 7100 சுவாசங்கள் பாழாகும் என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.
எஞ்சிய 14500 சுவாசங்களே உள்ளே புகுந்து உடலுக்கு நன்மை செய்யும் என்று கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள்.
தற்போது மனிதர்களின் ஆயுள் குறைந்துள்ளது எதனால் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளியே விடும் பழக்கம் நமக்கு இல்லை. கட்டாயம் அதை நாம் பழகிக் கொள்வதோடு நம் குழந்தைகளுக்கும் இளம் வயதிலேயே அதைப் பழகித்தர வேண்டும்.
எனெனில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராண சக்தியே மானிட உடலுக்குள் உயிராய் விளங்குகிறது. அதை நாம் உணவு, நீர் மற்றும் வாயுவிலிருந்துப் பெற்றுக் கொள்கிறோம். எனினும் சுவாசம் மூலமாகவே நாம் அதிகம் பெறுகிறோம்.
அதிகாலையில் நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று சொல்வதன் காரணம் கூட அதில் உள்ள பிராண சக்தி எந்தத் தடையுமில்லாமல் கிடைக்கும் என்பதால்தான்.
மனித சக்திக்கு ஆதாரமாய்த் திகழும் பிராணனே உடலில் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கிறது. பிராணன் உடலின் தொழிலாகவும், நரம்பில் ஓட்டமாகவும், இதயத்தில் துடிப்பாகவும், நுரையீரல் விரிந்து, சுருங்கவும், சுரப்பிகள் சுரப்பு நீரை சுரப்பதற்கும், உணவு செரிப்பதற்கும், கழிவுகள் வெளியேற்றப்படவும் எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணத்தின் போக்குக்கும், வலிமைக்கும் காரண, காரியமாகவும் விளங்குகிறது.
எவர் ஒருவர் உடலில் பிராணசக்தி குறைவில்லாமல் உள்ளதோ, அவர் முகத்தில் வனப்பும், உடலில் வலிமையும் மிகுந்து காணப்படும்.
நாம் சுவாசிப்பது மூச்சுவிடுவது என்பது நமது உயிரின் வடிவம். அதிலிருந்து எழும் பிராணசக்தி அதன் சூக்கும வடிவம். எனவேதான் உயிர் மூச்சு உள்ளவரை பிராணன் இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
பிராணன் நம் உறுப்புகள் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பே கருவிலேயே உதயமாகிவிடுகிறது. பரம ஆத்மாவிலிருந்து உண்டாகும் பிராணன் ஜீவாத்மாவிடம் பரவி நிற்கின்றது.
ஆத்மாவின் நிழல் போன்றது பிராணன் என்று சொல்வார்கள். ஆகவேதான் பிராணன் நம் மனதையும், புலன்களையும் இயக்கும் சக்தி பெற்றுள்ளது.
பிராணனை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தி பயன்படுத்தினால் நெருப்பினால் உலோகம் தூய்மையடைவது போல ஜீவாத்மாவின் கரும வினைகளும் தொலைந்து ஜீவன் தூய்மையடையும்.
உடம்பிலும், இந்திரியங்களிலும் உள்ள அசுத்தங்கள் யாவும் நீங்கி அவைகளும் தூய்மையடையும். மனதை அழிவிலிருந்துக் காத்து காயசித்தி பெற்று மரணத்தை வெல்லலாம்.
"மூச்சு என்ன செய்யுமடா (என அலட்சியம் காட்டினால்) நரகில் தள்ளும், மோசமது போகாதே பாசன் (எமன்) கையில்". – அகத்தியர்.
தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, தூய உணர்வு நிலையானது முழு பிரபஞ்சத்தின் வெளிப்பாடு ஆகும். பிரபஞ்சம் வெளிப்படுத்த்தும் இந்த தூய உணர்வு நிலை, இரண்டு துருவங்கள் அல்லது அம்சங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று மற்றது இல்லாமல் இருக்க முடியும்.
ஒரு அம்சமானது சிவம் (Shiva) ஆகும், ஆண் நிலை, நிலையான, இயக்கமற்ற (Static) தன்மை கொண்டது மற்றும் வெளிக்காட்டப்படாத உணர்வு அடையாளமாக உள்ளது. சிவம் முழுமையான ஆற்றல் கொண்டது. ஆனால் உருவாக்கவோ அல்லது மாற்றவோ முடியாதது.
மற்ற அம்சமானது சக்தி (Shakthi) ஆகும், பெண் நிலை, இயங்கக் கூடியது (Dynamic). சுறுசுறுப்பு, படைப்பு தன்மையுடையது. பிரபஞ்சத்தின் மாபெரும் தாய். அவளிடம் இருந்து அனைத்து வடிவங்களும் பிறந்தன.
தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம் ஆவான். பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதனிடமும் காணப்படும். பிரபஞ்சத்தில் பொருந்தும் ஏல்லாக் கொள்கைகளும் தனிப்பட்ட மனிதன் விஷயத்திலும் பொருந்தும்.
மனித உயிர்களின் மீது, சக்தியின் பெண்மையை அம்சம் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் முதுகு தண்டு அடிப்பகுதியில் ஓய்வு பெறுவதாகக் கூறப்படுகிறது. குண்டலினி-யோகாவின் தந்திர பயிற்சியின் நோக்கம், இந்த அண்ட ஆற்றலை மேலே எழுப்பச்செய்து முதுகெலும்பு அச்சில் உள்ள சக்கரங்கள் எனப்படும் உணர்வு திறன்கள் மையங்கள் வழியாக செலுத்துவதாகும். பிறகு சிவம் எனப்படும் தலையில் உள்ள கிரீடம் போன்ர தூய உணர்வு நிலை கொண்ட இடத்தில் சேர்ப்பதாகும். இவ்வாறாக சிவம், சக்தியை ஒன்றினைப்பதின் மூலம் நாம் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ள முடியும். உலகத்தின் பந்தங்களிலிருந்து விடுதலை பெறக்கூடிய நிலையை அடைய முடியும்.
"ஆசையே அழிவுக்கு காரணம்". - இதை சொல்லாத ஆத்மஞானிகளே கிடையாது. பகவான் கிருஷ்ணரில் இருந்து, புத்தர், மஹாவீரர், திருவள்ளுவர், சித்தர்கள் என எல்லா ஞானிகளும், இந்த கருத்தை வலியுறுத்த தவறவில்லை.
நெருப்பு புகையால் மறைக்கப்பட்டு இருப்பது போல, கண்ணாடி தூசியால் மறைக்கப்பட்டிருப்பது போல, சிசு கருப்பையால் மறைக்கப்பட்டிருப்பது போல, ஒருவருடைய தெளிவான ஞானம் ஆசைகளால் மறைக்கப்பட்டுள்ளது.
ஆடம்பரமான உடைகள் அணிவதில் இருந்து, ருசியான உணவுகள், சொகுசு கார்கள், நகைகள், பதவி, பணம், பங்களா, அழகான பெண்கள், புகழ், ஏன் நல்ல பெயற்கும் கூட ஆசை படுபவர்களை, நம்மை சுற்றியும் பார்க்க முடிகிறது. எதற்கும் ஆசை படாதவர்கள் யாரேனையும் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட நடை முறையில் சாத்தியபடாத ஒன்று என்றே கூறலாம்.
அப்படி "ஆசை" இருந்தால் தான் என்ன? ஆசை தானே, மனிதனை ஒரு இலக்கை நோக்கி அடைய செய்யும் கருவி!. ஆம், ஆசை என்பது ஒரு நல்ல கருவி தான், நம் இலக்குகள் சரியாக இருக்கும் போது மட்டும்... "அத்தனைக்கும் ஆசைப்படு" என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறுகிறார். ஆனால் ஆசைகள் பரிசுத்தமாய் இருக்கட்டும் என்றும் ஒரு நிபந்தனை!. பள்ளியில் படிக்கும் மாணவன், தான் படித்து பெரிய டாக்டர் ஆக வேண்டும் என்று எண்ணுகிறான் என கொள்வோம். எதற்கு என்று கேட்டால், பொருளில்லாதவர்களுக்கு, இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு என்று கூறுகிறான். இந்த உயர்ந்த லட்சியம், அவன் மருத்தவன் ஆன பின்பும் தொடர்ந்தால், அவன் படிக்கும் போது கொண்ட "ஆசை", உண்மையிலேயே உயர்ந்தது எனலாம். ஆனால் எத்தனை ஆசைகள் இப்படி ஆரம்பித்த படியே நீடிக்கின்றன?.
"உயர்ந்த ஆசைகள்" என்பதை எப்படி வரையறுக்க முடியும்? பகவத் கீதை, புலன் இன்பங்களில், உயர்ந்த யோகி, பற்று (ஆசை/அவா) வைக்க மாட்டான் என்று கூறுகிறது. புலன் இன்பங்கள், மனதுடன் தொடர்பு உடையவை. மனதை கட்டுப்படுத்த முடியாதவனே, புலன் இன்பங்களில் ஆசை வைக்கிறான். இந்த ஐம்புலன்களை மகிழ்ச்சி படுத்தும் செயல்கள் ஆகிய பார்த்தல், கேட்டல், ருசித்தல், நுகர்தல் மற்றும் தொடுஇன்பம் ஆகியவைகளை பொறுத்த ஆசை, தாழ்ந்தவைகள் என்று கூறப்படுகிறது. இந்த புலன் இன்ப ஆசைகள், எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என பகவத் கீதை கூறுகிறது.
”சதா உலக விசயங்களை யோசித்து கொண்டு இருக்கும் மனிதனுக்கு அதில் பற்று உண்டாகிறது. பற்றினால் ஆசை (காமம்) உண்டாகிறது. ஆசையினால் கோபம் உண்டாகிறது. கோபத்தால் மனக்குழப்பம் ஏற்படுகிறது. மனக்குழப்பத்தால் நாம் பெற்ற "புத்தி"யில் நாசம் உண்டாகிறது. புத்திநாசம் (அறிவு அகன்ற நிலை) ஏற்பட்டவனுக்கு நன்மை எனபது ஏது?” (2.62-63)
இவ்வாறு, இந்த இரண்டு ஸ்லோகங்கள் பொருள் தருகின்றன. எத்தனை அழகான மற்றும் ஆழமான ஆராய்ச்சி!!!. அடிப்படையை ஆராய்ந்து அதன் முடிவு வரை விளக்குகிறது, இந்த ஸ்லோகங்கள். அக ஆராய்ச்சியில் நிலை கொண்டவன், உலக விஷயங்களுக்காக பெரிதாக அலட்டி கொள்வதில்லை. மேலும் அவன் தன் ஆத்ம சுகம் ஒன்றையே உயர்வென கருதுகிறான், போன்ற விளக்கங்கள் உண்மையில் உலக பொருட்களுக்கான ஆசைகள் துச்சமானவைகள் தான் என ஆணித்தரமாய் கூறுகிறது.
கீதை யை பொறுத்தமட்டில், ஆசை (காமம்) என்பது ஞானிகளின் பரம எதிரி என்று வர்ணிக்க படுகிறது. மேலும் ஆசை (காமம்) பெற்றுள்ள குணங்கள் என மூன்று விஷயங்கள் கூறப்படுகிறது. அவை : "நெருப்பிற்கு சமமானது", "விரும்பிய வடிவை பெற வல்லது" மற்றும் "ஒருபோதும் அடைவதால் திருப்தியுராதது அதாவது ஒருபோதும் முழுமை அடையாதது". (3.39)
"புலன்கள், மனம், புத்தி" இந்த மூன்றும் தான் ஆசையின் இருப்பிடங்கள். மேலும் ஆசையானது "மனம், புத்தி மற்றும் இந்திரியங்கள் (புலன்கள்)" ஆகியவற்றை ஆட்கொண்டு, ஞானம் எனும் பரம்பொருளை மறைத்து நிற்கின்றது. (3.40)
ஆசைகள், உண்மையில் எதிர்பார்ப்புகளை தூண்டி விடுகிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது, கோபம் வருகிறது. பின் அதன் வழியாக அனைத்து கெட்ட எண்ணங்களும், நம் உள் புக ஆரம்பிக்கின்றன. உலகெல்லாம் ஒளி விடும் சூரியனை, கையாலோ, பிற பொருட்களாலோ மறைக்க நினைப்பதை விட, நம் கண்களை மட்டும் மூடி கொள்வது புத்திசாலி தனம் அல்லவா. அது போல, ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி விட துடிப்பதை விட, ஆசைகளையே அடக்குவது தான் மிகவும் சிறந்தது என நினைக்கிறேன்.
தன் வாழ்நாளில் எப்படியாவது ஒரு சைக்கிள் மட்டும் வாங்கி விட்டால் போதும் என்ற ஒருவனது ஆசை, அடுத்து அவன் சைக்கிள் வாங்கிய பின், மோட்டார் சைக்கிள், கார் என அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. உண்மையில் அவனுக்கு மோட்டார் சைக்கிள் அல்லது கார்களுக்கான தேவை இல்லாவிடினும் அவற்றை அடைய நினைக்கும் ஆசையில், அவனே தன்னை துன்பத்தில் ஆட்படுத்தி கொள்ள விழைகிறான். இவ்வாறு தேவைக்கு மேல் உள்ள ஆசைகளின் பிடியில் சிக்காதவர்கள் உண்மையில் எத்தனை பேர்? ஆசைக்கு அளவு தான் ஏது?
"ஆசையே அழிவு" என்று மகாவீரரும் குறிப்பிடுகிறார். அவர் ஒரு நாள், காட்டில் தவம் செய்து கொண்டு இருக்கும் போது, குளிரால் நடுங்கி கொண்டு இருந்த ஒரு ஏழையை பார்த்தார். தான் அணிந்து இருந்த வஸ்திரத்தின் பாதியை கிழித்து கொடுத்து அந்த எளியவனுக்கு உதவி செய்தார். அந்த ஏழை, மகாவீரர் அளித்த அந்த துணி மிகவும் விலை உயர்ந்தது என தெரிந்த கொண்ட படியால், மீதி பாதியையும் அவரிடம் இருந்து பெற்று விட வேண்டும் என ஆசை கொண்டான். மீதி பாதியை, அவரிடம் கேட்டு பெற்று விடலாம் என, மகாவீரர் இருக்கும் இடத்திற்கு சென்றான். அப்போது அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அதிர்ஷ்ட வசமாக, மீதி பாதி துணியும் கீழே விழுந்து கிடந்தது. "கேட்டு பெற வேண்டும்" என்று கிளம்பியவன், ஆசை மிகுதியால், அவருக்கு தெரியாமலேயே அதை அடைந்து விட எண்ணினான். இங்கே, "அகங்காரம்", அல்லது "நற்பெயருக்கான ஆசை" புதிதாக அவனிடம் எட்டி பார்த்து விட்டது. அதாவது, "நான் இவரிடம் கேட்டு பெற வேண்டுமா?" என்ற அகங்காரமோ, அல்லது, "மறுபடியும் இவரிடம், மீதி துணியை கேட்டால், இவர் என்னை தப்பாக நினைக்க கூடும். எனவே தெரியாமல் எடுத்து சென்றால் அவர் என்னை தப்பாக நினைக்க மாட்டார்" என்ற "நற்பெயருக்கான" ஆசையோ அவனிடத்தில் புதிதாக தோன்றியது. எனவே, திருட துணிந்தான். திருடிய பின், காலில் முள் குத்தியதால் சத்தம் போட மகாவீரர் விழித்து கொண்டார். இந்நிலையில் சிறிதும் கோப படாத மகாவீரர், "இந்த மீதி பாதி துணியில் நான் கொண்ட ஆசை அல்லவா, இவனை திருடனாக மாற்றியது" என்று நினைத்து வருந்தினாராம். எத்தனை பெரிய ஞான நிலை.
ஆசையை உண்மையில் அடக்குவது என்பது ஒரு மிக பெரிய கலை. இதை நம்மால் தனியே நின்று சாதிப்பது என்பது மிகவும் கடினம். "கடவுள் பக்தி" என்ற ஒரு நண்பனின் உதவி கொண்டே அதை சாதிக்க முடியும் என்று நினைக்கிறேன். நண்பர்களே, ஆசை என்பதே இல்லாத வாழ்க்கை வாழ முடியா விடினும், முடிந்த வரை தேவைகளுக்கு மட்டுமே ஆசை கொள்ள முயலுவோம். படிப்பதையும், நினைப்பதையும் செயல்முறை படுத்தும் சக்தியை, எல்லாம் வல்ல இறைவன் நமக்கு கொடுத்து துணை புரிவாராக ("தெய்வ பக்தி" இல்லாத நண்பர்கள் எனின் மன உறுதியை, இறைவன் என பொருள் கொள்க).
சுவாசத்தை கவனித்தல்
எல்லா விதமான தியான முறைகளையும் உனக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை. எளிதானதாகவும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும் ஒரு முறையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். இது உலகம் முழுவதும் பரவட்டும். இதை சுவாசத்தை கவனித்தல் என நான் அழைக்கிறேன், இது மிகவும் எளிய முறை.
எப்போது – நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய எல்லா நேரங்களிலும், ரயிலிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில்..
காலம் – 2 நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.
முதல் படி – உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி. உள்ளே செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல், வெளியே வரும்போது நீயும் அதனுடன் வெளியே வா.
நீ சுவாசத்துடன் உள்ளே சென்று பின் அதனுடன் வெளியே வருவது என்பது போன்று செய்யும் சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய். நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும். இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும். திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும். நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும், பின் வெளி வரும். வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும். இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.
பின் ஒரு சமயம் வரும். இந்த இடைவெளி மிகச் சரியாக நாற்பத்தி எட்டு நிமிடங்கள் இது 10,000 வருடங்களுக்கு முன்பே கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறையை உபயோகித்த அத்தனை சாதகர்களாலும் மிகச் சரியாக இதே நேரம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அப்படி இடைவெளி வந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுவாய். தியானம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.
உன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யாருக்கும் நீ செய்வது என்னவென்று தெரியாது. அதை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. நீ இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம். சில சமயங்களில் வெறும் இரண்டு நிமிடங்கள் கூட செய்யலாம்.
சில நேரங்களில் படுக்கையில் படுத்திருப்பாய். ஆனால் தூக்கம் வராது. தூக்கத்தைப்பற்றி கவலைப்படாதே. அதைச் செய். இது இரண்டு வேலைகளையும் செய்யும். இது ஆழ்ந்த அமைதியான தியானத்தைத் தரும், இதைச் செய்வதன் மூலம் தூக்கமும் வந்து விடும். ஆனால் நீ எழுந்திருக்கும் போதுதான் தூங்கி விட்டிருப்பதே உனக்குத் தெரியும்.
ஆனால் மிகவும் வேறுபட்ட விஷயம் என்னவென்றால் நீ தியானம் செய்தவாறே தூங்கி விட்டிருந்தால் நீ காலையில் எழும்போதும் தியான தன்மையோடு எழுவாய். அப்படி என்றால் ஆழ் மனதில் எங்கோ ஆழத்தில் நீ அறியாவண்ணம் இந்த முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம். உனது இரவு முழுவதும் தியானமாக மாறி விட்டிருக்கிறது, இது உனக்கு கிடைக்கக் கூடிய மிக அதிக அளவு நேரமாகும். உனது தூக்கம் மிகவும் அமைதியானதாகவும், ஓய்வானதாகவும் புத்துணர்வு தரக்கூடியதாகவும் மிகவும் வேறுபட்ட குணத்தில் இருக்கும்.
ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை இந்த கவனித்தல் தொடர்கிறது. காலையில் நீ விழித்தெழுந்த உடன் உனது சுவாசத்தை கவனிப்பதை நீ தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பாய். அது உனக்கு வியப்பளிக்கும்.
2. உடலின் அடிப்படை
இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவருக்கு கவனக்குவிப்பு உதவி செய்யும், மற்றவருக்கு தளர்வு உதவி செய்யும். இவர்களின் வழிமுறை வேறானவை. தளர்வு முறையில் நீ வெறுமனே ஓய்வாக எதன்மீதும் கவனம் செலுத்தாமல் -கவனக்குவிப்புக்கு நேர் எதிர் மாறான முறையில் – தளர்வு கொள்.
எப்போது – இரவு, தூங்கப் போவதற்கு முன்
காலம் – 20 நிமிடங்கள்
ஒளி – ஒளி குறைவாக அல்லது இருட்டு
உடை – இறுக்கி பிடிக்காததாக அப்போதுதான் எந்த தடையும் இருக்காது
முதல் படி – பதட்டத்தை வெளியேற்றுதல்
உனது நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொள். இதில் வசதி மிகவும் முக்கியம். தளர்வு பெற ஒருவர் ஓய்வாக, வசதியாக உணர்வது மிகவும் அவசியம். எந்த நிலையில் அமர பிரியப்படுகிறாயோ அந்த நிலையில் அமர்ந்து கொள். கண்களை மூடி உடலை தளர்வு கொள்ளச்செய். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உள்ளே உணர்ந்து பார். எங்கே பதட்டம் இருக்கிறதென்று பார். முழங்காலில் பதட்டத்தை உணர்ந்தால், அந்த இடத்தை தளர்வு செய். முழங்காலைத் தொட்டு, தயவுசெய்து தளர்வு கொள் என்று சொல்.
பல இடங்களில் நீ பதட்டத்தை உணர்வாய். அதை முதலில் விடுவிக்க வேண்டும். இல்லாவிடில் உடலால் தளர்வை உணர முடியாது. உடலால் தளர்வை உணர முடியா விட்டால் மனதால் தளர்வு கொள்ள முடியாது. ஏதாவது பதட்டம் தோள்பட்டையில் இருப்பதாக நீ உணர்ந்தால் இந்த இடத்தை தொட்டு, தளர்வு கொள் என்று சொல். எங்கெல்லாம் உடலில் பதட்டத்தை உணர்கிறாயோ அந்த இடத்தை கருணையோடும் அன்போடும் தொட்டு உணரு. உனது உடல் உனது சேவகன்.
இதற்கு உனக்கு 5 நிமிடங்கள் பிடிக்கும், பின் நீ ஓய்வாக, தளர்வாக உணர்வாய்
இரண்டாவது படி – இப்போது உனது உணர்வை உனது சுவாசத்திற்கு கொண்டு வா. சுவாசத்தை தளர்வாக செய்.
உடல் நமது வெளிப்பாகம், இருப்பு நமது உள்பகுதி – சுவாசம் இரண்டிற்க்கும் இடையே பாலம். அதனால்தான் சுவாசம் தளர்வு கொள்ள அனுமதிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆகவே உனது உடல் தளர்வு கொண்ட பின் கண்களை மூடி உனது சுவாசத்தைப் பார். அதையும் தளர்வாகச் செய். சுவாசத்துடன் ஒரு சிறிது தொடர்பு கொண்டு, தளர்வாக இரு, இயல்பாக போய்வா என்று சொல். நீ, தளர்வாக இரு என்று சொல்லும் கணத்தில் ஒரு சிறிய மெலிதான குலுக்கல் ஏற்படுவதை நீ உணரலாம். அதனால் உன்னுடைய சுவாச முறையிடம், 2 அல்லது 3 முறை தளர்வு கொள் என்று சொல். பின் மௌனமாக அமர்ந்திரு. உனது சுவாசமும் முழுமையாக தளர்வு கொண்ட பின் அங்கே மெலிதான குலுக்கல் ஒன்று ஏற்படும்.
மூன்றாவது படி – ஒன்று
இப்போது ஒவ்வொரு வெளியேறும் சுவாசத்துடனும் ஒன்று என்று சொல். சுவாசத்தை உள்ளிழுக்கும் போது எதையும் சொல்ல வேண்டியதில்லை. அடுத்த வெளியேறும் சுவாசத்தில் ஒன்று என்று கூறு. நீ ஒன்று என்று கூறும் தருணத்தில் இந்த பிரபஞ்சத்தை ஒரே முழுமையாக உணரு. அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒன்று என்று சொல்லுவதே போதுமானது.
ஒரு வாரத்திற்க்குள் உன்னால் உனது உடலுடன் தொடர்பு கொள்ள முடியும். உனது உடலுடன் உனக்கு தொடர்பு ஏற்பட்டு விட்டால் பின் எல்லாமும் எளிதாகி விடும். உடலை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை, சம்மதிக்க வைத்துவிட முடியும். ஒருவர் தனது உடலுடன் சண்டையிட வேண்டியதில்லை – அது அசிங்கமானது, வன்முறையானது, ஆக்ரோஷமானது, எந்த வகையான பிரிவினையும் மேலும் மேலும் அதிக பதட்டத்தைத் தான் கொண்டு வரும். ஆகவே நீ எந்த வகையான பிரிவினையிலும் இருக்க வேண்டிய தேவையில்லை – வசதியாக இருப்பதுதான் ஒரே விதிமுறை.
ஆகவே ஏழு நாட்கள்….. ஆரம்பத்தில் இது சிறிது மடத்தனமாகத் தோன்றலாம். நமது உடலுடன் பேச, பழக நமக்கு சொல்லித்தரப் படவில்லை. இதன் மூலம் அற்புதங்கள் நிகழலாம். நாம் அறியாமலேயே அவைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
நீ கோபம் கொள்ள விரும்பும் போது, அல்லது கோபம் கொள்ளும்போது உடல் ஒத்துழைக்க வில்லையென்றால் உன்னால் கோபப் பட முடியாது. ஒரு வகையான விதிமுறை பின்பற்றப்பட வேண்டும், சில அமிலங்கள் சுரக்கப்பட வேண்டும், உனது கண்கள் சிவக்க வேண்டும், முகம் சிவக்க வேண்டும், உனது கைகள் அடிப்பதற்கோ, கொல்வதற்கோ, குத்துவதற்கோ தயாராக வேண்டும். நீ கத்துவதற்கோ கீச்சிடுவதற்கோ தயாராக வேண்டும், உனது உடல் ஒத்துழைப்பு தர வில்லையென்றால் எதுவும் சாத்தியமில்லை. ஆகவே முதல் விஷயம் உடலுடன் ஒரு ஒத்துழைப்பு உருவாக்கிக் கொள்வதுதான்
1) படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்
2) பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்
3) விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்
4) காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்
ஒற்றி கொள்ளவேண்டும் .
5)கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .
6) கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை
இதை தான் எரிச்சல் என்பார்கள் .
கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .
7) நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .
8) உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்
இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .
9) இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .
உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்
1O) அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .
11)மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..
12) துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான்
எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .
12)அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .
14) பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு
பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .
15) குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து
இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .
v
16) கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .
17) அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .
18) இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து உண்ணவேண்டும் .
19) கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .
வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .
2O) அடுத்து
மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .
21) நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்கிறேன் .
22) அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் ..
23) என்னை பொறுத்தவரையில்
அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான உணவு முறை
பழக்கம் இல்லாத காரணமும் தான் ...
24) காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .
24) பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது
25)சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .
26) குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .
27) ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .
28) சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .
29) அதன் படி உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .
எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று முறை இருக்கிறது .
3O) சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .
31) கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்
சக்கரை நோய் வராது,
33) உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.
34) கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .
35) தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .
36) பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .
♥இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .
♥மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .
♥நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..
♥மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....
♥கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ....
♥நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .
♥இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது
இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .
♥(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.
♥தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.
♥சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .
♥உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.
வணக்கம்