வைஷ்ணவ ஜனதோ


இறையின்ஒளியில் உறைபவன் பிறரின்வலியை உணர்பவன்

கரைந்துநெஞ்சம் உருகுவான் விரைந்துசென்று உதவுவான்

நிறைந்துசெய்த உதவியாலே மனதில்மமதை கொண்டிடான்

நிறைந்தகுடத்தின் நீரைப்போலே அமைதிகொண்டு செல்லுவான்

வினயத்துடன் மென்மையாய் வணங்கிப்பேசும் மேன்மகன்

கணப்பொழுதும் எவரையுமே இகழ்ந்திடாத நன்மகன்

எண்ணத்திலும் செய்கையிலும் பேச்சினிலும் தூயவன்

புண்ணியத்தால் இவனைப்பெற்ற தாயேஅருளின் பாத்திரம்

சமநிலையில் உறைபவன் ஆசைகளைத் துறந்தவன்

ப்ரேமைதனைக் கெடுக்குமப்பொ றாமைதன்னை மறந்தவன்

உமையின்வடிவ மாகமற்ற பெண்களையே நினைப்பவன்

பொய்கள்தன்னை பகர்ந்திடான் மற்றோர்செல்வம் கவர்ந்திடான்

உலகமாயை தன்னிலுமே சிக்கிடாமல் இருப்பவன்

விலகுமாறு ஆசையும் கோபத்தையும் செய்பவன்

சிலகணமே இவனைக்காண சந்ததிக்கே மோக்ஷமே

உலவுகின்ற கடவுளான இவனல்லவோ வைணவன் ...!