முருகன்


தித்திக்கும் பழமாகிப் பழனிமலை நின்று

எத்திக்கும் புகழ்மணக்கும் திருத்தணிகை உவந்து

பக்தியுடன் தேனும் தினையுமளித்த வள்ளி

சித்தம் மகிழவந்த சீரார் மணவாளா

நித்தம் உனைத்துதிக்க எக்கணமும் மனம்-நினைக்க

தத்தோம் ததிங்கிணத்தோம் தத்தோம் ததிங்கிணத்தோம்

தித்தோம் தகதிமோத்தோம் என்றே வரும்-தாளம்

சந்தம் துணைக்கொண்டு அழகாய் மயில் நடனம்

முத்தே நீ-வந்து புரிந்திடுவாய் அழகேசா

வந்தெம் மனங்குளிர அருளிடு-வேல் முருகேசா...