சிவன்எனும் பெயர்தரும் அருள்தனில் தெரிந்திடும்
அவனுமேயோர் மங்கலன் புவனமேழின் காவலன்
ஆக்குகின்ற தானவன் காத்துநிற்கும் மாலவன்
போக்குகின்ற தாக்கியே மறைத்திருந் தருள்பவன்
_________________________________________________________
கண்ணுதல் கொண்டானைப் போற்றுதும் போற்றுதும்.. தன்னுள்
பெண்ணெனக் கொண்டானைப் போற்றுதும்போற்றுதும்..விண்ணுள்
தென்படா நின்றானைப் போற்றுதும் போற்றுதும்.. எண்ணுள்
எழினைக் கொண்டானைப் போற்றுதும் போற்றுதும்.. நம்முள்
பொறியெனக் கரந்தானைப் போற்றுதும் போற்றுதும்.. மண்ணுள்
அன்பென வந்தானைப் போற்றுதும் போற்றுதும்.. என்றும்
போற்றுதும் போற்றுதும்..போற்றுதும் போற்றுதும்..