ஆலயம் காப்போம் என்பது இந்து பக்தர் குழுக்களை ஒருங்கிணைக்கும் ஒரு கூட்டமைப்பு. நமது கோயில்கள், அவற்றின் பரம்பரை சொத்துக்கள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பதுடன், ஆகமம் ஒட்டி வழிபாடு மற்றும் கோயில் நிர்வாகம் செய்வதற்கான உரிமைகளை இந்துக்களுக்கு மீட்டுக்கொடுப்பதற்கான போராட்டத்தில் நாம் மொழி, ஜாதி மற்றும் அரசியல் பிரிவினைகளை தவிர்த்து, சேர்ந்து நிற்பதற்கான ஒரு வலுவான தளமாக ஆலயம் காப்போம் அமையும்.
ஆலயம் காப்போம் மக்களுக்கு இந்து தர்மத்திலுள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதன் மூலம், அவர்கள் மதமாற்றில் ஈடுபடும் தீய சக்திகளின் கவர்ந்திழுக்கும் வித்தைகளுக்கு வீழாமலிருக்க பாடுபடும். இதில் உடன் சேரும் குழுக்கள் தங்கள் சுய அடையாளத்துடன் உள்ளூர் சேவைகளை தொடர்ந்து செய்யலாம்.
ஆலயம் காப்போம் இயங்க ஆரம்பித்து மிக குறுகிய காலத்தில் சில நல்ல காரியங்களை செய்துள்ளது :
சென்னை நீதி மன்றத்தில், கோயில்களின் நிர்வாகத்தில் அரசு தலையிட்டு தன்னிச்கையாக ஆரம்பித்த ஆகமத்துக்கெதிரான அர்ச்சகர் நியமனம், கோவில்களின் பொக்கிஷங்களான பொன் இனங்களை உருக்குதல், கோயில் நிதி கொண்டு கல்லூரிகள் துவங்குதல் போன்ற விதிமீறல்களுக்கு எதிராக பல வழக்குகள் தொடர்ந்து சாதகமான தீர்ப்புகளை பெற்றுள்ளது.
சென்னை நீதி மன்றத்தில், இந்து சமய அறநிலையத்துறை கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க எடுத்துள்ள தவறான செயல்முறைகளை எதிராக போடப்பட்டுள்ள வழக்கில், நீதிமன்றம் எம் தரப்பு வாதங்களை ஒப்புக்கொண்டு படிவங்களை திருத்தும் வழி முறைகளை கொடுக்க இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 26-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள கிள்ளாய் கிராமத்தில் கட்டப்பட்டிருந்த கனக காளீஸ்வரர் ஆலய வளாகத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் எந்தவித முன்னறிப்பும் இன்றி, போலீஸ் துணையுடன் கிராமத்து பக்தர்களின் மேல் வன்முறையை ஏவி போக்லேயின் இயந்திரங்களை கொண்டு தரைமட்டமாக்கியுள்ளனர். விக்கிரங்களை, நூல்கள், பூஜை பொருட்கள் மற்றும் தானியங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. ஆலயம் காப்போம் குழுவினர் உடனடியாக அங்கு சென்று, அக்காட்சிகளையும், கோவில் நிறுவனர் மற்றும் பக்தர்களை வீடியோ பேட்டி கண்டு ஊடகங்கள் மூலம் செய்தியை வெகுவாக பரப்பினர். பல பக்தர் குழுக்களை ஒன்று சேர்ந்து அவர்களுக்கு மீண்டும் புதிய கோவில் கட்ட உதவவும், அதிகார துஷ்ப்ரயோகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடத்தவும், அரசுக்கு நஷ்ட ஈடு கோரி புகார் அளிக்கவும், சட்ட ரீதியாக பல்வேறு நிலை அதிகாரிகளிடம் புகார் மற்றும் மனு கொடுக்கவும், பல உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
பல பக்தர்களின் மற்றும் சிவனடியார்களின் குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் அடுத்த ஓராண்டில் 50,000 உறுப்பினர்களை சேர்க்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கூடிய விரைவில் ஆலயம் காப்போம் உறுப்பினர்கள் நமது இந்த மாபெரும் குறிக்கோளை நிறைவேற்றுவது மற்றும் தங்களது ஊர் கோயில்களை சேவைகளில் ஈடுபடுவது தொடர்பான செய்திகள் வாட்ஸாப் மூலம் அனுப்பப்படும். மத்திய குழுவினர் இதற்கு உறுதுணையாக செயல்படுவர்.
நம் அரும்பெரும் பொக்கிஷங்களான ஆலயங்களை காத்திட, லிங்க் மூலம் விண்ணப்பத்தை நிரப்பி உறுப்பினராக வேண்டுகிறோம். பதிவு விண்ணப்பம்
-ஆலயம் காப்போம், மயிலை, சென்னை 4
ஈமெயில் : aalayamkappom@gmail.com
ட்விட்டர்: https://twitter.com/AalayamKappom
முகநூல் : https://www.facebook.com/AalayamKappom