2025 - செயற்குழு தேர்தல் வேட்பாளர்கள்
2025 - செயற்குழு தேர்தல் வேட்பாளர்கள்
தலைவர்
ஏன் எனக்கு வாக்களிக்க வேண்டும்: https://www.youtube.com/watch?v=ilm0mcoCp8s
அனைவருக்கும் வணக்கம்!!
குறள்-39:
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல
அதிகாரம்: அறன் வலியுறுத்தல்
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை, புகழும் இல்லாதவை.
இந்த குறளின் படி, நானாற்றிய தமிழ் மன்ற மற்றும் தமிழ் சார்ந்த சமூக சேவைகள் இதோ,
1.கலிபோர்னியா தமிழ் பள்ளி ஆசிரியர் 2005-2010.
2.தமிழ் மன்றம் கலை&பண்பாடு, துணைத் தலைவர்-2021
3.நடப்பாண்டில் துணைத் தலைவர்-நிர்வாகம்.
4.உறுப்பினர் சேர்க்கை குழுவில் முக்கிய பங்கு.
5.வட அமெரிக்க தமிழ் பேரவையில் நிதித் திரட்டும் பணி மற்றும் FeTNA Delegate
6.2024-தமிழ் மன்ற சட்ட திட்டங்களை நெறிப்படுத்தும் Bylaw Committee உறுப்பினர்
7.2024-தமிழ் மன்ற VP Adminஆக அதிக புரவலர்கள் சேர்க்கை மற்றும் அதிக உறுப்பினர்கள் சேர்க்கை.
8.விரிகுடாப் பகுதியில் தமிழர்களை இணைத்து மாதம் தோறும் Tech Meetup, வேலை வாய்ப்புத் தேடுபவர்களுக்கு உதவி,தொழில் முனைவோர்களை இணைத்தல்.
9.SEEEDS என்ற Non-Profit அமைப்பில் தன்னார்வத் தொண்டு.
10.உடல் ஆரோக்கியம் பெருக - 30க்கும் மேற்பட்டவர்களை மாதம் தோறும் ஒருங்கிணைத்து கான்கார்ட் பாதயாத்திரை.
11."ஒன்றிணைவோம்2024" என தைத்திங்கள் பொங்கலில் முழங்கி ஆரோக்கியமான தமிழ் மன்ற நிகழ்ச்சிகளை நடத்த நிர்வாகக் குழுவுடன் சேர்ந்து பணி.
மீண்டும் "ஒன்றிணைவோம்_2025" என கூறி,
பெருமைமிகு தமிழ் மன்றத்தின் 45-வது தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் எனக்கு தங்கள் ஆதரவு அளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!!
#கோவிந்த்_அணி_2025 #ஒன்றிணைவோம்_2025 தேர்தல் அறிக்கை:
1)முதியோர் வாசகர் வட்டம்
2)இலக்கிய கூட்டம்
3)தமிழ் மன்றம் கூட்டாஞ்சோறு
4)மேற்கத்திய தமிழ் விழா
5)தொழில்நுட்ப சந்திப்பு/வேலை கண்காட்சி
6)காலாண்டு-மன்ற தகவல் அறிக்கை கூட்டம்
7)BATM தொழில்முனைவோர் சந்திப்பு
8)விளையாட்டு:பயிற்சியுடன் கூடிய மராத்தான்/கைப்பந்து/பிக்கிள் பந்து/யோகா/நடை/ஓட்டம்
9)குழந்தைகளின் திறமை நிகழ்ச்சி
10)திருவள்ளுவர் விழா
11)TCC நிதி திரட்டல்
12)உறுப்பினர்களுக்கான அவசர உதவி மையம்
13)மாணவர்களுக்கு கல்லூரி திட்டமிடல்
14)புரவலர்களை அதிகரித்து உறுப்பினர் பலன்களை பெருக்குவோம்
தமிழால் இணைவோம்! தரணியில் உயர்வோம்!!
துணைத்தலைவர் கலை/பண்பாடு
ஏன் எனக்கு வாக்களிக்க வேண்டும்: My Video
#GROW TOGETHER, #RESPECT #LISTEN #LEARN #COMMUNICATE
#GENUINE EFFORT #CREATE IMPACT #DONT EXPECT RETURNS
I am enthusiastic personal and passionate to keep my surroundings happy at all time,
I’m a proud mom of 2 kids
I’m in California, Bay Area from 2016
Worked at CA Tamil academy as a teacher in the year of 2017
I’ve been volunteering for SFBATM since 2019
Currently I’m working as a teacher
I’ve participated as an MC for SFBATM in multiple time
My daughter and I also took part in volunteering for TNVO (Marathon) in 2023
Starting from my apartment to the whole Bay Area I’ve taken part
in conducting various events such as potluck’s, Diwali, Pongal, and
New Year bringing our community together
During the COVID pandemic we set up a fundraising boutique to
help people who lost their jobs
In CA Tamil Academy I helped organize the annual day event
As a VP Cultural, I will pursue in bringing higher value to our Tamil society
in impactful way. I am excited about the opportunity to contribute to Bay
Area Tamil Mandram.
பொருளாளர்
ஏன் எனக்கு வாக்களிக்க வேண்டும்: https://www.youtube.com/watch?v=yI9wa7yhnfg
தமிழ் மன்ற நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் வணக்கம்.
வினோத்குமார் என்கிற நான், தமிழ் மன்றத்தின் 2025-ஆம் ஆண்டிற்கான செயற்குழுவில் பொருளாளர் (Treasurer) பதவிக்கு போட்டியிடுகிறேன். நான் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் தன்னலமற்று, தமிழ் மன்றத்தின் நலனுக்காக, நேர்மையாக பணியாற்றி வருகிறேன். குறிப்பாக தமிழ் மன்ற இணையத்தளம் மேம்பாட்டிற்காகவும், இணையம் மூலமாக பணம் செலுத்தும் வசதிக்காகவும் பணியாற்றி உள்ளேன். மேலும், நான் அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்கம் (ATEA) வில், 2017-ஆம் அண்டு முதல் செயலாற்றி வருகிறேன். இது மட்டுமல்லாது, பல இரத்த தான முகாம்களில் பங்கெடுத்துள்ளேன். முக்கியமாக லிவர்மோர் கோவில் நிர்வாகம் சார்பாக நடைபெறும் ஆங்கிலப் புத்தாண்டு விழாவில் உணவு வழங்கும் குழுவில் செயலாற்றி வருகிறேன். மேலும், ITA தமிழ் பள்ளி முதற்கொண்டு பல தன்னார்வ அமைப்புகளில் தன்னார்வலராக பணியாற்றி வருகிறேன்.
வருகிற தமிழ் மன்ற 2025 செயற்குழுவிற்கான தேர்தலில், பொருளாளராக தேர்ந்தெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நமது தமிழ் மன்றத்திற்கும், நம் வளைகுடாப் பகுதி தமிழ் மக்களுக்கும் சேவை செய்ய ஒரு வாய்ப்பு கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
#ஒன்றிணைவோம்2025 #TeamGovind அணி
Manifesto for Election 2025
Fundraising for TCC by Mega Event
Annual budget to support SFBATM growth
Financial Support: Upgraded SFBATM website with improved member onboarding and usage
Allocate funds for emergency and crisis events
Every penny is carefully considered—ensuring responsible use of community funds
Collaborate with VP-Admin to secure sponsors for various funding needs
துணத்தலைவர் - நிர்வாகம்
ஏன் எனக்கு வாக்களிக்க வேண்டும்: https://youtu.be/T9fNG4Oe8WU
I Arulvadivel Venugopal M.B.A., living in San Ramon & a Lifetime member supporting SFBATM past several years.
2022 Executive Committee:
Elected as Treasurer
Worked with all Sponsors to onboard as well support them during the year for their services
Supported Pongal,Mothers day , Fatherday,Chithirai Vizha, Volleyball event, Aimperum Vizha, Vazhai Ilai Virunthu, AIA & FOG events etc.,
ByLaw Phase1, Phase2 Committee
2023 Volunteering:
Pongal Vizha
Vaazhai Ilai virunthu
Chithirai thiruvizha
Kodaiyil Tamil Mazhai
2024 Volunteering:
Pongal Vizha
ByLaw Committee
Pickleball Event
Huge Passion for Tamils & Tamil Culture drives me to support Tamil Manram enormously.
I am proud of the 44-year-old SFBATM and I would like it to grow even further.
My Duties & Goals:
CoExecute all the events in 2025 by supporting President
Meet & Greet all Existing Sponsor to support 2025
Onboard new Sponsors for Increase in Revenue of 2025
Arrange Sponsor Specific events during 2025
Advertise Sponsor’s services Social Media,Online & In-person events
Support in raising funds for Building TCC
Manifesto of our Team:
#கோவிந்த் அணி 2025 #ஒன்றிணைவோம் 2025
தேர்தல் அறிக்கை:
1) முதியோர் வாசகர் வட்டம்
2)இலக்கிய கூட்டம்
3)தமிழ் மன்றம் கூட்டாஞ்சோறு
4)மேற்கத்திய தமிழ் விழா
5)தொழில்நுட்ப சந்திப்பு/வேலை கண்காட்சி
6)காலாண்டு - மன்ற தகவல் அறிக்கை கூட்டம்
7)BATM தொழில்முனைவோர் சந்திப்பு
8) விளையாட்டு: பயிற்சியுடன் கூடிய மராத்தான் / கைப்பந்து / பிக்கிள் பந்து / யோகா / BATM நடை/ ஓட்டம்
9)குழந்தைகளின் திறமைசாளிகளுக்கான நிகழ்ச்சி
10) திருவள்ளுவர் விழா
11) TCC நிதி திரட்டல்
12) உறுப்பினர்களுக்கான அவசர உதவி மையம்
13) மாணவர்களுக்கு கல்லூரி திட்டமிடல்
14) புரவலர்களை அதிகரித்து உறுப்பினர் பலன்களை பெருக்குவோம்
I request all of you to vote to elect me for VP Admin 2025
துணத்தலைவர் - நிர்வாகம்
வணக்கம் !
எனது அறிமுகம் : துணைத் தலைவர் - நிர்வாகம் பொறுப்புக்கு,
இந்துமதி ஜெயபால்.
மன்ற உறுப்பினர்களுக்கு வணக்கம்!
நான் நடைபெறும் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தேர்தலில் நிர்வாக துணைத் தலைவர் அதாவது Vice President -Administration பொறுப்புக்கு போட்டியிடுகிறேன். தமிழ் மன்ற தேர்தலில் நான் களம் காண்பது எனக்கு புதிதல்ல.
2020 ஆம் ஆண்டு கலை/பண்பாட்டுத் துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்டு மாபெரும் வெற்றியை மன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பெற்றேன். 2020 ஆம் ஆண்டு கலை/பண்பாட்டுத் துணைத் தலைவராக பொறுப்பேற்று பொங்கல் விழாவினை சிறப்பாக நடத்தினேன். அந்த ஆண்டு மார்ச் மாதம் Covid பெரும் தொற்று காரணமாக விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த முடியாத சூழல் வந்த போது மனம் தளராமல் மெய்நிகர் வழியில் கலைநிகழ்ச்சிகள் மட்டுமல்லாது மக்கள் உடல் மற்றும் மன நலன் காக்கும் வகையில் பல நிகழ்ச்சிகளையும் சிறப்பாக நடத்தினோம். அதை மன்ற உறுப்பினர்கள் வெகுவாக பாராட்டி வரவேற்றார்கள் .
2017 முதல் தமிழ் மன்றத்தில் தன்னார்வ தொண்டராக பணியாற்றி உள்ளேன். அது மட்டுமல்ல, தமிழ் பள்ளியிலும் Grade Level/HSCP ஆசிரியராக சில வருடங்களும், Substitute Teacher Coordinator ஆக கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறேன்.
நான் 2025 ஆம் ஆண்டு நிர்வாக துணைத் தலைவராக வந்தால் ,
1.சிறு தொழில் செய்யும் பெண்களுக்கு முன்னுரிமை/சலுகைகள் கொடுத்து அவர்களின் தொழில் வளரவும் அதன் மூலம் மன்றத்திற்கு நன்கொடை பெறவும் முற்படுவேன்.
2.தமிழ் மன்றத்தில் 2025 ஆம் ஆண்டு புதிதாக பல புதிய தமிழ் நன்கொடையாளர்களை கொண்டு வருவேன்.
3. தமிழ் மன்றத்தில் 2025 ஆம் ஆண்டு புதிய உறுப்பினர்களின் சேர்க்கையை அதிகரிக்க முயல்வேன்.
4.தமிழ் மன்றத்தில் 2025 ஆம் ஆண்டு நிர்வாக துணைத் தலைவராக குழுவுடன் சேர்ந்து செயல்படுவேன்.
5. தமிழ் மன்றத்தில் 2025 ஆம் ஆண்டு பல fundraising நிகழ்ச்சிகள் நடைபெற செய்து மன்றத்தின் பொருளாதாரத்தை அதிகரிக்க செய்வேன்.
6. தமிழ் மன்றத்தில் 2025 ஆம் ஆண்டு இரண்டு ரத்த தான முகாம் நடத்துவேன்.
7.தமிழ் மன்றத்தில் 2025 ஆம் ஆண்டு நிர்வாக துணைத் தலைவராக நடுநிலையுடன் செயல்பட்டு அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து செல்வேன்.
உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்!
நன்றி !
இந்துமதி ஜெயபால்.
துணத்தலைவர் - நிர்வாகம்
என்னைப் பற்றி:
ஏன் எனக்கு வாக்களிக்க வேண்டும்: https://youtu.be/6Gw8PURuVZc
தமிழன்!
திருவருட்பா, திருக்குறள், தொல்காப்பியம், பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்தப் பயிற்சி & பேச்சாளர்!
தமிழ்ப் பண்பாட்டுக் கல்வியகம் -நிறுவனர்
முகநூல்(11,000+ பின்பற்றுவோர்): https://www.facebook.com/tamilculturestudy
Founder of Banking Soft Solutions LLC(USA) மற்றும் Linya Technologies Pvt Ltd(INDIA)
“5000 ஆண்டுகள் பழமையான, சிந்து சமவெளி நாகரிகத்தில் பேசப்பட்டது தமிழே” என உலகறியச் செய்ய, “தனியொருவனாக, சொந்த செலவில்”, திருக்குறள் செம்மல் பேரா. இரா. மதிவாணன் அவர்களை, தமிழ்நாட்டிலிருந்து, கொலம்பஸ் நகருக்கு அழைத்து, அவரது ஆய்வுகளின், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலினை (HOW TO DECIPHER INDUS SCRIPT) வெளியிட்டு, விழா நடத்தி, “பிற மொழி பேசுவோர் பலர் முன்னிலையில்” சிறப்பித்தேன். காணொளி : https://www.youtube.com/watch?v=dUr7JHoqrcc
தூத்துகுடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு
கொள்கை:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -குறள்972
சாதியும் மதமும் சமயமும் பொய்! -அகவல்106
திட்டங்கள்
சமத்துவம்: மன்றத்தில் 'சமத்துவம்' ஓங்கவும், எல்லாரும் 'தமிழ்ப் பணி' என்ற ஒருமையுடன் இயங்கும்படி, நடுநிலையாகச் செயல்படுதல். அதிக உறுப்பினர்களைச் சேர்த்தல் மற்றும், ஸ்பான்ஸர்களை இரட்டிப்பாக்குதல்
குழந்தைகள் நலம்: தமிழை நன்கு உச்சரிக்க, $30,000 மதிப்புள்ள பேச்சு மற்றும் எழுதும் போட்டிகள்
மகளிர் நலம்:
கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தை தாய்மார்களுக்கு உதவ தனிகுழு
மகளிரை மன்றத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் முன்னிலைப்படுத்தி, குழந்தைகள் மனதில், பெண்களை மிகுந்த மரியாதையோடும், கண்ணியத்தோடும் நடத்தும் தமிழ்ப் பண்பாட்டிற்கேயுரிய சிறப்பு குணத்தை ஏற்படுத்துதல்
பொது நலம்: பே ஏரியா தமிழ் ஆளுமைகளைச் சிறப்பித்து " தமிழ் மன்ற விருதுகள்"
தமிழ் மங்கையர் “ஃபேஷன் ஷோ” மற்றும் "மிஸ் தமிழ் பே ஏரியா" பட்டம் வழங்குதல்
தமிழ் பத்திரிக்கைகள் ( ஆனந்த விகடன் போன்றவை) பே ஏரியாவில், வீட்டில் கிடைக்க வழி செய்தல்
டிசிசி நிதி திரட்டுதல் & தமிழ் நூலகம்
செயலாளர்
ஏன் எனக்கு வாக்களிக்க வேண்டும்: https://www.youtube.com/watch?v=81sde7rRr5Q
#GROW TOGETHER, #RESPECT #LISTEN #LEARN #COMMUNICATE #ACT
About Me
Working Professional with a passion and commitment to make a meaningful impact in our community. With years of experience in relevant field or roles, I bring a strong background in operations, management, planning, and effective communication.
Communication: Strong verbal and written communication skills, capable of conveying complex information clearly and effectively.
Collaboration: Proven ability to work collaboratively with members, and volunteers to foster a positive and productive environment.
Vision: As Secretary, I aim to enhance the efficiency and transparency of operations. Strongly believe in fostering an inclusive environment where every voice is heard. Committed to ensuring that our meeting processes are streamlined and effective. Clear communication, Aspire to support in making informed decisions that advance our mission.
Community Involvement:
I actively participate in many communities service or volunteer work related to the ATEA (Tamil entrepreneur Association), ITA (Tamil Academy) TIE (Indus Entrepreneurs) This involvement has deepened my understanding of the challenges our community faces and has fueled my passion to create a meaningful impact within Tamil Community.
Thank You
Looking forward to contribute to Bay Area Tamil Mandram as Secretary. Together, we can drive positive change and strengthen our community.
ஏன் எனக்கு வாக்களிக்க வேண்டும்: http://go.bharatkiawaaz.co/Shan4Secretary
செயலாளர்
If I am elected for Secretary, will try champion below initiatives
Champion weekly conversations on topics impacting Tamil diaspora.
*Open conversations பேச்சு என் உயிர் மூச்சு * Promote open conversations with an inclusive & diverse participation across association
*Amplify for mindshare* உரக்க சொல்வோம் அமெரிக்க தமிழர்களின் குரலை From DC to Delhi
Help the association become the top voice of Tamils of America across India, World building more global bridges for causes like Tamil Cultural Center(TCC) Fund raising
*JUMPSTRAPS*
*தெற்கில் இருந்து வரும் விடியல்-தொழில் முனைப்பின் மூலம்* Champion Innovation Mindset ideating entrepreneurial Tamils into action with tight knit helping nexus of India & USA
Let’s cherish, champion our top Tamil ethos *Diversity & Inclusion*. My inspiration in life for social service are *Periyar, Ambedkar, Gandhi*.
I may not be enlightened yet to be a rationalist, Ambedkarite, gandhian, but have my own beliefs they are the top reformers of the world.
Want to emulate a bit of them in my social service endeavors.
This is Shan Sankaran
Entrepreneur
Journalist
Author
Activist
Humanist
Please allow me to serve our Tamil diaspora
செயலாளர்
அன்பு கலந்த அனைவருக்கும் வணக்கம் வளைகுடா பகுதியில் வசிக்கும் எனது தமிழ் நெஞ்சங்களுக்கு நான் சிவக்குமார் வேலுசாமி !
எனது 15 வருட ஐடி அனுபவத்தில் 10 வருட காலம் வளைகுடா பகுதியில் வசித்து வருகிறேன்.
நான் மென்பொருள் ஸ்டார்ட் நிறுவனத்தையும் ரெட் கார்பெட் பிலிம் இன்டர்நேஷனல் எனும் பிலிம் புரொடக்ஷன் கம்பெனியும் வளைகுடா பகுதியில் நடத்தி வருகிறேன்.
என் எண்ணத்திற்கும் எனது செயலுக்கும் உறுதுணையாக எப்பொழுதும் நின்று கொண்டிருக்கும் லலிதா மகேஸ்வரி மற்றும் எனது மகள் தீப்தி.
இந்தியாவில் கல்வி 40 எனும் ஒரு தன்னார்வு அமைப்பை ஒன்றை நடத்தி வருகிறோம் தமிழ்நாடு அரசுடன் சேர்ந்து நாங்கள் தமிழ் கல்வியை
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு டிஜிட்டல் வழியாக தமிழ் கல்வியை பாட புத்தகத்தில் இருந்து நடத்தி வருகிறோம் கடந்த மூன்று வருடங்களாக.
ஒரு மாத சனி அன்று San Jose பகுதியில் ஆதரவற்று வசித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் கடந்த ஒரு வருடங்களாக.
நான் பிலிம் மேக்கர் ஆகவும் டாக்டராகவும் சில படங்களில் நடித்துள்ளேன் அதற்குண்டான அவார்டுகளையும் நான் பெற்றுள்ளேன், உங்களுடன் பகிர்வது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது.
பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிக்க முடிக்கும் தருவாயில் இருக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான சரியான தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு கற்பித்து இலவசமாக பயனடைய செய்து கொண்டிருக்கிறேன்.
எனது கலைப் பயண அனுபவத்தையும் வளைகுடா பகுதியில் வழியாக அதை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளேன்.
எனது பங்களிப்பை வரும் காலத்தில் வளைகுடா பகுதியில் நடக்கவிருக்கும் கலை நிகழ்ச்சியில் ரேட்கார்பர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக எனது பங்களிப்பையும் எனது உழைப்பையும் நான் தருவதற்கு மிகவும் ஆவலுடனும் சந்தோஷத்துடனும் இருப்பதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
நான் இதற்கு முன்பு சில நான் பிராஃபிட் ஆர்கனைசேஷனிலும் சேவை செய்துள்ளேன்.
எனது உழைப்பையும் எனது அனுபவத்தையும் வளைகுடா தமிழ் மன்றத்திற்கு நான் அர்ப்பணிக்க முன்வந்துள்ளேன்.
வரும் தேர்தலில் நான் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்த வளைகுடா பகுதி தமிழ் மன்றத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
வரும் தேர்தலில் செயலாளர் பதவியில் நான் வெற்றி பெற்ற பிறகு என் அனுபவத்தையும் எனது திறமையும் வரும் தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என உறுதியாக நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் அதற்கு நீங்கள் உறுதுணையாகவும், நிற்பீர்கள் என்று எனக்கு உங்களுடன் மிகுந்த நம்பிக்கை உள்ளது.
எனது இந்த பயணம் இனிதே சிறக்க நான் உங்களுடன் சேர்ந்து பயணித்தால் மட்டுமே அது முழுமையாக முழுமை அடையும், உங்களின் இரு கரங்களையும் பிடித்து அன்புடன் விரும்பி கேட்டுக் கொள்கிறோம் பயணிப்போம் நாம் இருவரும்.
அன்பே சிவம்
உங்கள்
சிவகுமார் வேலுசாமி
அவை ஏற்பாட்டாளர்
ஏன் எனக்கு வாக்களிக்க வேண்டும்: https://youtu.be/5d4HDew7wnM
பாலகுமார் முனுசாமியின் அன்பு வணக்கங்கள்!
நான் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் செயற்குழு தேர்தல் 2025-இல் அவை ஏற்பாட்டாளர் (Convener) பதவிக்கு போட்டியிடுகிறேன். எனக்கு வாக்களிக்க அன்பு வேண்டுகோள்.
நான் 18 ஆண்டுகளுக்கும் மேலாக வளைகுடாப் பகுதியில் வசித்து வருகிறேன், மேலும் நான் SFBATM வின் வாழ்நாள் உறுப்பினராகவும் உள்ளேன்.
தமிழ் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் தமிழ்மன்ற உறுப்பினர்களுக்கு என்னால் இயன்ற தொண்டுகள் செய்துள்ளேன்.
புலம்பெயர் தமிழர்களிடையே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக பிரான்ஸ், பாரிஸ் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழ்ச் சிறகம் என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் துணைப் பொருளாளராகவும், முக்கியக் குழு உறுப்பினராகவும் உள்ளேன். இந்த அமைப்பு சமீபத்தில் மேடானில் முதல் திருவள்ளுவர் சிலை மற்றும் இந்தோனேசியாவின் மேடானில் பல இடங்களில் தமிழ் பள்ளிகளை நிறுவியது. இந்த அமைப்பின் ஸ்தாபனத்திற்கும் செயல்பாட்டிற்கும் நான் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக இருக்கிறேன்.
நான் அவை ஏற்பாட்டாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால்,
நான் வளைகுடாப் பகுதித் தமிழர் மற்றும் இந்திய சமுதாயங்கள் பயன்பெற தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.
அவை ஏற்பாட்டாளராக தமிழ் மன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை சிறப்பாக நடக்க தகுந்த இடத்தை தேர்வு செய்து அந்த நிகழ்வை நேரலை செய்ய உறுதி செய்வேன்.
TCC கட்டிடத்திற்கான நிதி திரட்டுவதற்கான ஆதரவு.
#கோவிந்த்அணி2025 #ஒன்றிணைவோம்2025
தேர்தல் அறிக்கை:
முதியோர் வாசகர் வட்டம்
இலக்கிய கூட்டம்
தமிழ் மன்றம் கூட்டாஞ்சோறு
மேற்கத்திய தமிழ் விழா
தொழில்நுட்ப சந்திப்பு/வேலை கண்காட்சி
காலாண்டு - மன்ற தகவல் அறிக்கை கூட்டம்
BATM தொழில்முனைவோர் சந்திப்பு
விளையாட்டு: பயிற்சியுடன் கூடிய மராத்தான் / கைப்பந்து / பிக்கிள் பந்து / யோகா / BATM நடை/ ஓட்டம்
குழந்தைகளின் திறமைசாளிகளுக்கான நிகழ்ச்சி
திருவள்ளுவர் விழா
TCC நிதி திரட்டல்
உறுப்பினர்களுக்கான அவசர உதவி மையம்
மாணவர்களுக்கு கல்லூரி திட்டமிடல்
புரவலர்களை அதிகரித்து உறுப்பினர் பலன்களை பெருக்குவோம்
எனக்கும் எங்கள் அணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய அன்பு வேண்டுகோள்.
நன்றி,
மு.பாலகுமார்
#Vote4Balakumar
அவை ஏற்பாட்டாளர்
Kesava Viswanathan Sivanthi has 20 years of experience in the semiconductor industry.
I am passionate about community service and have volunteered at various nonprofit.
Part of the emergency help team had helped families and women with emergency help needed with a support network
I was a Tamil school teacher till 2022 and taught various standards. When they met me, I remember many parents saying their kids liked my teaching and caring for them.
I have a special heart for differently abled people. One Parent made his differently-abled autistic child study Tamil with me in a Cupertino Tamil school as he preferred to be in my class for three years,
I Volunteered for Tamil Manram at various levels as Sound support, camera, and Cultural Coordinator; I planned logistics for the kid's zone for Pongal 2021 and also did odd jobs like cleaning, lifting, etc, and it was fun.:)
I won the best director award for my short film in Fetna
Conducted Star voice singing platform for talents across the world supported by Shri Unnikrishan
Conducts regular pattimanram and tech talk via Zoom
I have a dream for Tamil Manram and TCC.