2025 - செயற்குழு தேர்தல்
2025 - செயற்குழு தேர்தல்
இந்த ஆண்டு தேர்தலில் நீங்கள் பங்கேற்க விரும்பினால், தேர்தல் அலுவலருக்கு (Election.Officer@sfbatm.org) பின்வரும் தகவல்களுடன் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்:
உங்கள் பெயர், உறுப்பினர் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
நீங்கள் எந்த பொறுப்பிற்கு போட்டியிட விரும்புகிறீர்கள்
உங்கள் வேட்புமனுவை முன்மொழியும் நபரின் பெயர், உறுப்பினர் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
உங்கள் வேட்புமனுவை வழிமொழியும் நபரின் பெயர், உறுப்பினர் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
உங்கள் மூவரின் உறுப்பினர் மற்றும் இதர தகுதிகளை சரிபார்த்த பிறகு, தேர்தல் அலுவலகம் ஒரு Docusign ஆவணத்தை உருவாக்கி பெறப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பும். வேட்புமனுவை நிறைவு செய்ய மூவரும் அந்த ஆவணத்தில் கையொப்பமிட வேண்டும். ஆவணம் கிடைக்கப்பெறாவிட்டால் உடனடியாக இந்த அலுவலகத்தை அணுகவும்.
முக்கியம்: இந்த செயல்முறையை அக்டோபர் 2, 2024 க்குள் முடிக்க வேண்டும், இதுவே வேட்புமனு ஏற்கப்படும் கடைசி நாள்.
வேட்புமனு தாக்கல் செய்ய காலக்கெடு முடிந்த பிறகு, தேர்தல் அலுவலர் இந்திரா தங்கசாமி, செயலாளர் ஜான் பிரதீப் வழியாக இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார்கள்.