2025 - செயற்குழு தேர்தல்
தேர்தல் நடைமுறைகள்
கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் தேர்தல் https://electionrunner.com/ என்ற இணையதளம் மூலம் இணையவழி நடத்தப்படும்.
தேர்தல் அலுவலர்க்கான வரையறுக்கப்பட்ட உரிமைகள்:
தேர்தல் அலுவலகத்திற்கு மன்ற உறுப்பினர்கள் அல்லது வாக்குச்சீட்டுகள் குறித்த எந்த தேவைக்கதிக அணுகலும் இருக்காது.
தேர்தல் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு மன்ற உறுப்பினர் அல்லது தேர்தல் அலுவலர் செயலாளர்/பொருளாளருடன் இணைந்து ஜனவரி 2024 முதல் புதிய உறுப்பினர் சேர்க்கை காலம் வரை உறுப்பினர் தகவல்களைச் சரிபார்ப்பார். மேலும், செயலாளருடன் இணைந்து உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிகளைப் (மின்னஞ்சல் முகவரிகள் மட்டுமே, வேறு எந்த தகவலும் இல்லை) பெற்று https://electionrunner.com/ இல் பதிவேற்றம் செய்வார். வாக்குப்பதிவிற்கான காலம் முடிந்தவுடன் மேற்குறிப்பிட்ட தளத்திலிருந்து முடிவுகளைப்பெற்று ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பார்.
இணையதள வாக்குப்பதிவு செயல்முறை
தேர்தல் https://electionrunner.com/ என்ற இணையதள சேவையைப் பயன்படுத்தி நடத்தப்படும். வாக்குகள் கணனிமயமாக்க முறையில் பெயரிலியாக உள்ளீடு செய்யப்படும். தேர்தல் அதிகாரி உட்பட யாருக்கும் உறுப்பினர்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பது தெரியாது.
வாக்களிக்கத் தகுதியுள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் தனித்துவமான அடையாளத்துடன் கூடிய மின்னஞ்சல் அனுப்பப்படும்.உறுப்பினர்கள் இணைப்பைக் சொடுக்கி வாக்குச்சீட்டைத் திறந்து தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.
ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும். இது கடந்த காலங்களில் மேற்சொன்ன இணையதளம் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
வாக்களிப்பு செய்ய 96 மணி நேரம் அவகாசம் அளிக்கப்படு உள்ளது, அக்டோபர் 23, 2024 (புதன்) நண்பகல் 12:00 முதல் அக்டோபர் 27, 2024 (ஞாயிறு) நண்பகல் 12:00 வரை. இந்த நேரத்திற்குள் உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளைச் சமர்ப்பிக்கலாம். இந்த கால இடைவெளிக்கு வெளியே வாக்களிப்பதற்கான வாய்ப்பினை தேர்தல் நடத்தும் இணையதளம் தவிர்க்கும்.
வாக்குச்சீட்டு மின்னஞ்சல்கள்:
ஒவ்வொரு வாக்காளருக்கும் அக்டோபர் 23, 2024, நண்பகல் 12:00 மணிக்கு மேல், தேர்தல் தொடங்கியவுடன் Election Office - San Francisco Bay Area Tamil Manram <noreply@electionrunner.com> என்ற முகவரியிலிருந்து வாக்குச்சீட்டு மின்னஞ்சல் வரும்.
மின்னஞ்சல் noreply@electionrunner.com என்ற முகவரியிலிருந்து வரும். மின்னஞ்சலில் "from" என்பது "Election Office - San Francisco Bay Area Tamil Manram <noreply@electionrunner.com>" என்று இருக்கும். இந்த மின்னஞ்சலுக்கு பதிலளிக்க வேண்டாம். இந்த மின்னஞ்சல் முகவரியால் பதிலளிக்க இயலாது.
24 மணி நேரத்திற்குப் பிறகு, இன்னும் வாக்களிக்காதவர்களுக்கு அக்டோபர் 24, 2024, 12:01 AM மணிக்கு முதல் நினைவூட்டலை அனுப்பும்.
மீண்டும் 24 மணி நேரத்திற்குப் பிறகு, இன்னும் வாக்களிக்காதவர்களுக்கு அக்டோபர் 25, 2024, 12:01 AM மணிக்கு இரண்டாவது மற்றும் இறுதி நினைவூட்டலை தானாகவே அனுப்பும்.
உங்களுக்கு மின்னஞ்சல் வரவில்லை என்றால், ஸ்பேம்(spam) அஞ்சல் கோப்புறையில் தேடவும்.
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தேர்தல் அலுவலரை election.officer@sfbatm.org என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.