பல்கலைக்கழகத்திற்கு வருகை
பல்கலைக்கழகத்திற்கு வருகை
பேராதனைப் பல்கலைக்கழகம் உலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் அழகான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். கண்டி மாவட்டத்தில் பேராதனை நகருக்கு மிக அருகாமையில் ஹந்தான மலைத்தொடரின் மேற்கு சரிவுக்கும் மகாவலி ஆற்றுக்கும் இடையில் மிக அழகான சூழலில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்கு அதன் செயற்பாடுகளுக்கு இடையூறு இன்றி வருகை தருவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பேராதனை பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறை பின்வருமாறு
பொது நிலை மற்றும் உயர்நிலை மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஒரே நேரத்தில் அதிகபட்சம் 200 மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அரசுப் பள்ளி/கல்வி நிறுவனம் அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் ஒரு நிறுவனத்தின் லெட்டர்ஹெட்டின் கீழ், பொறுப்பான நபரின் கையொப்பத்துடன் எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுக்கப்பட வேண்டும்.
இதற்கு ஒரு தனியார் நிறுவனம் ஒன்றிடம் 10,000.00 ரூபாய் அரவிடப்படும்.
பல்கலைக்கழகத்திற்கு வரும் பேருந்துகளுக்கு ரூ. 500/= பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும்
பல்கலைக்கழக shroff கவுண்டரில் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் மற்றும் அந்த ரசீதை அந்த கோரிக்கை கடிதத்துடன் இணைக்க வேண்டும்.
நீங்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ள தேதிக்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு முன்னர் கோரிக்கை கடிதம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதற்கு பிரதி துணைவேந்தரின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் போது முன் அனுமதி கடிதத்தை உங்களிடம் வைத்திருப்பது கட்டாயமாகும்.
இந்த அனுமதிக் கடிதத்துடன், வளாகத்தைப் பார்வையிடுவதற்கு சம்பந்தப்பட்ட பீடத்தின் பீடாதிபதியின் அனுமதியும் பெறப்பட வேண்டும்.
கோரிக்கைகளை அஞ்சல் அல்லது மின்னஞ்சல் அல்லது தொலைநகல் மூலம் அனுப்பலாம். மேலும், அலுவலகத்திலும் கையளிக்கலாம் .
தனிப்பட்ட அடிப்படையில் செய்யப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது.
கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி:
மக்கள் தொடர்பு அலுவலர் மூலம்,
பிரதி துணைவேந்தர்,
பேராதனை பல்கலைக்கழகம்
பேராதனை
மின்னஞ்சல்: visituop@gs.pdn.ac.lk
தொலைநகல் : 081 238 8102
தொலைபேசி : 081 239 2307
பல்கலைக்கழகம் பெற்ற கோரிக்கை கடிதத்தை கருத்தில் கொண்டு விண்ணப்ப கடிதங்கள் பெறப்படும் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலித்தீன் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே வருகையின் போது பல்கலைக்கழக வளாகத்திற்கு பொலித்தீன் கொண்டு வருவதை தவிர்க்கவும்.
நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டும் குப்பை போடுவதை உறுதி செய்யவும்.
பல்கலைக்கழகத்திற்குள் பார்வையாளர்களுக்கு உணவு வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்த முடியவில்லை.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.
வாகனங்களில் பாடுவது, கூச்சலிடுவது அல்லது இசையை இசைப்பது போன்றவற்றால் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாமல் ஏற்படாமலிருப்பத்தை உறுதி வேண்டும்.