பேரவையைக் காப்போம் அணி 2022-2024

VOTING DATES: MAY 28 TO JUNE 1

PRESIDENT CANDIDATE

VICE PRESIDENT CANDIDATE

SECRETARY CANDIDATE

JOINT SECRETARY CANDIDATE

TREASURER CANDIDATE

BOARD OF DIRECTOR CANDIDATE

BOARD OF DIRECTOR CANDIDATE

AMARAN KANDIAR

YOUTH BOARD MEMBER

YAMIKA RAMESH

YOUTH BOARD MEMBER

வட அமெரிக்காவில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றையும் தமிழர்களின் நலனையும் பேணிப்பாதுகாத்து வளர்த்தெடுப்பதுதான் நமது பேரவையின் முக்கியமான குறிக்கோள். இந்த விழுமிய குறிக்கோளுக்காக கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து அறப்பணியாக பலர் எவ்வித தன்னலமும் எதிர்பார்க்காமல் அயராது உழைத்து வந்துள்ளனர். நமது பேரவையை அதன் குறிக்கோளில் உறுதியுடன் நிலைநிறுத்திக் கட்டிக்காத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் தலையாய கடமை நம் அனைவருக்கும் உண்டு.

பேரவை இப்பொழுது ஒரு பெரும் மரமாக வளர்ந்துள்ளது. பேரவையை தங்களுடைய வணிகம், பதவி, அரசியல், விளம்பரம் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தும் தவறான போக்கு தவிர்க்கப்படவேண்டும். தன்னலமற்று பொதுநலத்தையே உள்ளத்தில் ஏந்தி நிற்கும் “கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார்”களை நாம் கண்டு அறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

கடந்த காலப் பணிகளில் கிடைத்த அனுபவங்கள், முன்னோடித் தலைவர்களின் அறிவுரைகள், பேரவையின் நெறிமுறைகள் மற்றும் தொடர்ச்சி போன்றவற்றில் தொய்வு ஏற்படக்கூடாது. ஆகவே, மக்கள் நேரடியாக வந்திருந்து கலந்து கொண்ட விழாக்களை நடத்தியோர், மக்கள் பணியில் பல்லாண்டு காலம் ஈடுபட்டோரின் பங்களிப்பு பேரவையின் முக்கியமான தேவையாக இன்று உள்ளது. அத்தகைய அனுபவம் மிக்கோருடன் “பேரவை காப்போம்” அணியில் இளையோரும் இணைந்து பணியாற்றுகின்றனர். வணிகர்கள், வசதி படைத்தோர் என்பவர்க்கு மட்டுமில்லாமல், சாமானியர்களுக்குமான பேரவையாக மீளக்கட்டமைக்க வேண்டிய தலையாய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அதனை நிலைநாட்டித் தமிழ்ப் பணியை மேன்மேலும் வளரச் செய்திட நம் வேட்பாளர்களுக்கு வாக்களித்திடுவோம்! வென்றெடுப்போம் தமிழ்ப்பணியை!!