JANSIRANI PRABAKARAN

For FeTNA - BOARD OF DIRECTOR

ஆற்றிய முக்கிய தமிழ் பணிகள்:

  • என் கணவருடன் விஸ்கான்சின் தமிழ்ச் சங்கம் உருவாக்க உறுதுணையாக இருந்தேன் ( 2003)

  • வெவ்வேறு தலைமை பொறுப்பை ஏற்று தமிழ் பணி ஆற்றியுள்ளேன் (தலைவர், செயலாளர், துணை செயலாளர், தற்போது, துணை தலைவர்)

  • வட அமெரிக்க பேரவை விழாவுக்கு 2007 வருடம் முதல் இன்று வரை சென்று தன்னார்வ தொண்டு செய்து வருகிறேன்

  • விஸ்கான்சின் தமிழ்ச் சங்க தமிழ் பள்ளி ஆசிரியராக பணி புரிந்துள்ளேன் (2003-2004)

  • விஸ்கான்சின் தமிழ்ச் சங்கத்தில் வாழை இலை விருந்தினை ஆரம்பிக்க துணை புரிந்து சிறப்பாக செயல் படுத்தி வருகிறோம்

  • விஸ்கான்சின் தமிழ்ச் சங்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு தலைமை கட்டிடத்தில் கூடி முழக்கம் செய்து ஆதரவு தெரிவித்தோம்

  • வட அமெரிக்க பேரவை விழா அட்லாண்டாவில் நடைபெற்றபோது நீயா நானா கோபிநாத் தலைமையில் நடை பெற்ற பேச்சரங்கத்தில் பங்கு பெற்றேன்

  • 2019 வருட வட அமெரிக்க பேரவை திட்ட குழுவில் தமிழ் பணியாற்றினேன்

  • 2020 வருட வணக்கம் வட அமெரிக்கா, ஆடல் குழுவில் தன்னார்வலராக தொண்டாற்றினேன்

  • ஒவ்வொரு ஆண்டும் வட அமெரிக்க பேரவை நடத்தும் சங்கங்களின் சங்கமம் நிகழ்ச்சியில் 2007 ஆண்டு முதல், எங்கள் தமிழ் சங்கத்தின் சார்பில் பங்கு பெற்று வருகிறேன்


தமிழ் கலைகள்:

2007 வட அமெரிக்கா பேரவை, வட கரோலினாவில் நடை பெற்றது. அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில், கும்மியிலு. வில்லு பாட்டிலும் பங்கு பெற்றேன்

விஸ்கான்சின் தமிழ்ச் சங்கத்தில் கும்மி, கரகம், கோலாட்டம், பின்னல் கோலாட்டம் போன்ற நடனங்களில் பங்குபெற்றுள்ளேன்

கடந்த 15 ஆண்டுகளாக விஸ்கான்சின் தமிழ் சங்கத்தின் கலாச்சார குழுவில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறேன்

விருது:

பிரித்தானிய தமிழ் வானொலி மற்றும் பிரான்ஸ் தமிழ் கலாச்சார மன்றமும் இணைந்து வழங்கிய

ஊக்குவிக்கும் உலகத் தமிழ்ப் பெண் விருது

தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியின் சிறந்த பெண் சாதனையாளர் விருது (2022)