சுந்தரமூர்த்தி ஆதியாகவேல் - மினசோட்டாத் தமிழ்ச் சங்கம்

பிறந்து, வளர்ந்து மதுரையில்
வாழ்ந்து வருவது மினியாபோலிஸில்


ஆற்றிய பணிகள்

  • பேரவையின் செயற்குழு உறுப்பினர் - 2015 , 2016 .

  • பேரவையின் பல்வேறு குழுக்களில் தலைமை - 2012 ஆண்டிலிருந்து

  • நிதிதிரட்டல்குழுவின் தலைமைப் பொறுப்பு - மினசோட்டா பேரவை விழா 2017

  • மரக்கால் கட்டி பொய்க்கால்குதிரை ஆட்டம் - பேரவை விழா 2015

  • ’தமிழ் மொழி மற்றும் மரபு மாதம்’ மாநில ஆளுநர் அறிவிப்பு - 2020, 2021, 2022 தொடர்ந்து 3 ஆண்டுகள்

  • ஹாவர்டு தமிழிருக்கை, வெள்ளநிவாரணம், தமிழ்க்கலைஞர்கள் உதவி - நிதிதிரட்டல் நிகழ்ச்சிகள் தொகுத்தது

மேலும் சில

  • மினசோட்டாத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக - 2019, 2020, 2021,

  • மினசோட்டாத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக - 2012, 2013

  • பேரவைப் பேராளராக - 2012 ஆண்டிலிருந்து

  • மினசோட்டாத் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியர் - 2010 இருந்து 13 ஆண்டுகளாக

  • பொய்க்கால் குதிரை ஆட்டம், கட்டக்கால், பறை, சிலம்பம், நாடகம், ஒயிலாட்டம், குத்துவரிசை, கரகம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு - அரங்கேற்றி, பயிற்றுவித்தது.

  • கலைவிழாக்கள், குழந்தைகளுக்கு பல்வேறு தமிழ்ப் போட்டிகள், மாநிலக் கலைவிழா - ஒருங்கிணைப்பும், அரங்கேற்றமும்

  • அண்டை மாநிலங்களுக்குச் சென்று - பாசறைகளும் பயிலரங்கங்களும் நடத்தியது.

  • வேள்பாரி, இராசேந்திரச் சோழன், வேலுநாச்சியார் நாடகங்களை - எழுதி, இயக்கி அரங்கேற்றம் செய்தது.

  • உலக நாடுகள் விழா (FON) - தமிழ்க்கலைகளையும் அடையாளங்களையும் காட்சிப்படுத்தியது.

  • உலக நாட்டு மக்கள் பங்கு பெறும் நாடக அரங்குகளில் - மருதநாயகம், கீழ்வெண்மணி நாடகங்களை அரங்கேற்றியது.

  • ஜல்லிக்காட்டுக்கு ஆதரவாகவும். நிறவெறித் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் பறை அடித்து வணக்கம் செலுத்திய நிகழ்வை ஒருங்கிணைத்தது.

நோக்கம்

  • "தமிழ் நாள்" என்ற அங்கிகாரத்தை அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களுக்கும் பெற வைத்து, சட்டமாக்குவது.

  • தமிழ் மொழி, இலக்கியம், தமிழர் கலைகள், தமிழர் மரபு பயிற்றுவிக்கும் விதமாகவும், பறைசாற்றும் விதமாகவும் பயிற்சி பட்டறைகளை நடத்துவது.

  • தமிழ் மொழி கற்பித்தலைத் தரப்படுத்துதல் - காலாண்டு தோறும் பல்வேறு தமிழ் வழிக் கூட்ட பள்ளிகளை இணைக்கக் கூட்டம்.

  • தமிழர்களின் அடையாளங்கள் மற்றும் தமிழ்மொழி வாசகங்களை, பொது இடங்களான நூலகம், விமான நிலையம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இடம்பெற செய்தல்.

  • பத்தாண்டுகளுக்கும் மேலான பங்களிப்புடையோர் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றுவர்.

  • காலாண்டுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, வெளிப்படைத்தன்மை போற்றப்படும்.

  • பேரவை நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும்.

  • மேம்பட்ட தகவற்தொடர்பு நெறிமுறைகள் கட்டமைக்கப்படும்.

  • தனிநபர் விளம்பரத் தன்மையைக் களைந்து மரபுகள் போற்றப்படும்.

  • பேரவை ஆர்வலர்கள், பேராளர்கள், தமிழ்ச்சங்கங்கள் மட்டுமே பேரவை’ என்பது மீள்க் கட்டமைக்கப்படும்.

  • கலந்துரையாடற்களம் - அனைத்து சங்கங்களின் பங்களிப்பு, தமிழ்க் சங்கத் தலைவர்கள் மற்றும் பேராளர்கள்/ ஆயுட்கால உறுப்பினர்களான பொதுவெளி கலந்துரையாடற்களம் கட்டியமைத்து நிர்வகித்தல்.

நோக்கம்

  • இலக்கு - வட அமெரிக்கத் தமிழர்களுக்கிடையே ஒருங்கிணைப்பை மேற்கொள்வதும், பொருளாதார மேம்பாட்டுக்கும் பண்பாட்டுப் பேணலுக்கும் உழைத்தல்.

  • அரவணைப்பு - பேரவையின் அங்கமாக இருக்கின்ற தமிழ்ச்சங்கங்களின்பாலும், மற்றுமுள்ள தமிழ் அமைப்புகளின்பாலும் அக்கறையுடன் செயற்படுதல்.

  • பொறுப்பு - மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டு, வெற்றிகரமாகச் செயற்படுத்தலுக்கான கடமையுணர்வை உறுதிப்படுத்துதல்.

  • தொலைநோக்கு - அடுத்த பத்து ஆண்டுகளுக்கான பார்வையுடன் செயற்பட்டுப் பங்களிப்பைத் தொடர்ந்து மேற்கொள்வதும் விழிப்புணர்வை ஊட்டுவதும்.

  • வெளிப்படை - மேற்கொள்ளும் பணிகளின் நிலைப்பாடு, கணக்குவழக்குகள், உறுப்பினர் அமைப்புகளின் தொடர்பு முதலானவற்றை வெளிப்படையாக வைத்துக் கொள்தல்.

  • அறம் - தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கு இடங்கொடாமல் நெறிகளுக்கொப்பப் பணிகள் இடம் பெறுதலை உறுதிப்படுத்துதல்.

சிலம்பம் பயின்ற மாணவர்களுடன்

உலக அரங்கில் - பறை பயிற்சி

பேரவை விழா 2019 - சிகாகோ

Black Lives Matter - பறை வணக்கம்

பேரவைச் சான்றோர்களுடன்

கயானா முதன்மை அமைச்சர்-திரு மோசஸ் நாகமுத்துடன்-2017

பேரவை விழா 2019 - சிகாகோ

உங்கள் பேரவைச் செயலாளர் வாக்கினை -
சுந்தரமூர்த்திக்கு செலுத்தி வெற்றி பெறச் செய்யுங்கள்!!