VIJAY MANIVEL

for FeTNA - Vice President

உங்கள் துணைத் தலைவர் வாக்கினை -
விஜய் மணிவேலுக்கு செலுத்தி வெற்றி பெறச் செய்யுங்கள்!!

VISIT MY WEBSITE: WWW.VIJAY4FETNA.COM

திரு. விஜய் மணிவேல் அவர்கள் அமெரிக்காவின் தலையாயத் தமிழ்த்தலைவர்களுள் ஒருவர். இருபது ஆண்டுகளுக்கும் முன்பாக ஒரு அடிப்படைத் தொண்டனாகக் களமிறங்கி, தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டதோடு தன்னையும் படிப்படியாக வளர்த்துக் கொண்டு இன்று சிறந்த தலைவராகத் திகழ்கின்றார். மிசெளரி தமிழ்ச்சங்கத் தலைவர், பேரவை நிர்வாகக்குழு உறுப்பினர், பேராளர், ஆயுள் உறுப்பினர் உள்ளிட்ட எண்ணற்ற பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றி வருபவர்.

ஆற்றிய முக்கிய தமிழ்ப்பணிகள்

  • செயற்குழு உறுப்பினராக பேரவை விழாப் பணிகளும் அமைப்புப் பணிகளும் (2010-2012)

  • பேரவை ஆயுள் உறுப்பினராக இருந்து பல்வேறு பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக (2012 – இன்றும்)

  • பேரவை இணையக் கட்டமைப்பு, பராமரிப்பு, நிர்வாகம் (2006 – 2012); பேரவைக்குச் செலவுகளேதுமில்லாமல்.

  • பேரவை விழாவுக்கான பதிவுக்குழு, உணவுக்குழு, நிகழ்ச்சிக்குழு என பல்வேறு குழுக்களில் (2006 – 2018)

  • மிசெளரி தமிழ்ச்சங்கத் தலைவராக (2006-2007); நிர்வாகக்குழு உறுப்பினராக (2007-2008)

  • செயின்ட் லூயிஸ் முருகன் கோவிலின் நிறுவன உறுப்பினர்(2020 – இன்றும்)

ஆற்றிய மற்ற தமிழ்ப்பணிகள்

  • பேரவைக்கான புதிய இணைய தளத்தை வடிவமைத்து பல புதுமைகளை செயற்படுத்தியமை

  • பேரவை விழாவுக்கான பதிவினையும் கட்டணம் செலுத்துதலையும் டிஜிட்டல் ஆக்கியமை

  • பேரவை விழாவுக்கான விருந்திநர் விசா, பயணச்சீட்டு போன்றவற்றை நிர்வகித்தமை

  • பேரவை விழாவுக்கான விளம்பரப் பணிகள் மேற்கொண்டமை

  • பேரவை இதழான அருவி என்பதனை மின்னிதழாகக் கட்டமைத்தமை

  • பேரவையின் 20 ஆண்டுகால ஆவணங்களைச் சேகரித்து தொகுத்து ஆவணப்படுத்தியமை

  • தமிழர் உரிமைக்கான கவன ஈர்ப்பு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தமை

  • தமிழ்க்கல்வி, கலை, இலக்கியம், பண்பாட்டுக்கான நிதிதிரட்டல் நிகழ்வுகளைக் கட்டமைத்தமை

  • பேரவைக்கான இலச்சினை வடிவமைத்து ஒப்புதல் பெற்றுச் செயற்படுத்தியமை

  • பேரவைக்கான சமூகவலைதளம், மின்னஞ்சற் கட்டமைப்புகளை உருவாக்கி நிர்வகித்தமை

  • 2009 – 2011 காலகட்டங்களிலேயே பேரவை விழாக்களை நேரலையாக ஒளிபரப்பியமை

  • அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகம், பள்ளிகளுக்கான இலச்சினை வடிவமைப்பு

  • தமிழ் அமைப்புகளுக்கான இணைய தளங்களைக் கட்டணமேதுமின்றி கட்டமைத்துக் கொடுத்தமை

  • அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தலைவர்களுக்கான தகவற்தொடர்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி நிர்வகித்தல்

  • ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டியமை

  • சென்னை பெருவெள்ளம் நிதி திரட்டியமை

நான் தேர்ந்தெடுக்கப்பட்டால்...

1.) எங்களுடைய அனைத்து நடவடிக்கைகளும், செயல்களும், இங்கு வாழும் தமிழர்களையும், தாய் மொழியான தமிழையும், நம் வளர்ச்சியையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மட்டுமே மையப் படுத்தி இருக்கும்!

2.) நம் மக்களிடையே தமிழ்/தமிழர் மரபை, பண்பாட்டை, இயல் இசை, இலக்கிய ஆர்வத்தை, வளர்க்க, மேம்படுத்த, இரசிக்க, நம் தொப்புள் கொடி நாடுகளில் இருந்து சிறப்பும் திறமையும் மிக்க, வாய்ப்புக் கிடைத்திராத, நலிந்த கலைஞர்களை வரவழைத்து, அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து, பாராட்டி, பெருமைப்படுத்துவோம்.

3.) வட அமெரிக்க நாடு தோறும் உள்ள அனைத்து பகுதிகளிலும், தமிழ்ச் சங்கங்களில் உள்ள குழந்தைகளுக்கும் மாணவர்ளுக்கும் தமிழ் கற்றுக்கொடுக்கவும் வகுப்புகள் நடத்தவும் இன்னும் அரிய பெரிய முயற்சிகள் மேற்கொள்வோம்!

4.) 1988ல் நான்கு தமிழ்ச் சங்கங்களுடன் துவங்கிய நம் பேரவை, இன்று கிட்டத்தட்ட 65 தமிழ் சங்கங்களுடன் பெருமைபட வளர்ந்துள்ளது. நம் பேரவையின் இந்த வளர்ச்சிப் பாதை தொடர, இந்த உறுப்பினர் சங்கங்களின் எண்ணிக்கை கூடிய விரைவில் 100 தமிழ்ச்சங்கங்களாக உயர, முழு மூச்சுடன் பாடுபடுவோம்.

5.) பேரிடர் காலத்தில் தமிழ்ச்சமூகத்துக்கு உதவிடவும், அமெரிக்கப் பொது நீரோட்டத்தில் கலந்து பல்வேறு துறைகளில் முன்னேறிடவும் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவோம்.

தலைமைப் பண்புகள்

இலக்கு

வட அமெரிக்காவில் பரந்து வாழும் தமிழர்களுக்கிடையே ஒருங்கிணைப்பை மேற்கொள்வதும், பொருளாதார மேம்பாட்டுக்காகவும் பண்பாட்டுப் பேணலுக்கும் உழைத்தல்.

அரவணைப்பு

பேரவையின் அங்கமாக இருக்கின்ற எல்லாத் தமிழ்ச்சங்கங்களின்பாலும், மற்றுமுள்ள தமிழ் அமைப்புகளின்பாலும் அக்கறையுடன் செயற்படுதல்.

பொறுப்பு

மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டு, வெற்றிகரமாகச் செயற்படுத்தலுக்கான கடமையுணர்வை உறுதிப்படுத்துதல்.

தொலைநோக்கு

அடுத்த பத்து ஆண்டுகளுக்கான பார்வையுடன் செயற்பட்டுப் பங்களிப்பைத் தொடர்ந்து மேற்கொள்வதும் விழிப்புணர்வை ஊட்டுவதும்.


வெளிப்படை

மேற்கொள்ளும் பணிகளின் நிலைப்பாடு, பேரவையின் கணக்குவழக்குகள், உறுப்பினர் அமைப்புகளின் தொடர்பு முதலானவற்றை வெளிப்படையாக வைத்துக் கொள்தல்.


அறம்

தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கு ஆட்படாமல் பேரவை நெறிகளுக்கொப்ப பணிகள் இடம் பெறுதலை உறுதிப்படுத்துதல்.


உங்கள் துணைத் தலைவர் வாக்கினை -
விஜய் மணிவேலுக்கு செலுத்தி வெற்றி பெறச் செய்யுங்கள்!!