3267. அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார்.
உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் இன்னாரிடம் (உஸ்மான்(ரலி) அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆயிற்றே!)'' என்று கேட்கப்பட்டது. 61 அதற்கு அவர்கள், 'நான் உங்கள் எதிரில் உங்களக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்குக்) கதவைத் திறந்து விடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே பேசுகிறேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறந்த முதல் ஆள் நானாக இருக்க விரும்பவில்லை. 62 மேலும், ஒருவர் எனக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதானால் அவரை மக்களில் சிறந்தவர் என்று நான் சொல்ல மாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதரிடமிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அப்படி) ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன்'' என்று கூறினார்கள். மக்கள், 'நபி(ஸல்) அவர்கள் என்ன சொல்லக் கேட்டீர்கள்?' என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், 'நான் நபி(ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லக் கேட்டேன்'' என்றார்கள்.
மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, 'இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு அவர், 'நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்'' என்று கூறுவார்.
இந்த நபிமொழி மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்படுகிறது.
2452. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.
என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
4686. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அல்லாஹ் அக்கிரமக்காரனுக்குவிட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்'' என்று கூறிவிட்டு, பிறகு, 'மேலும் அக்கிரமம் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 19:102 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.
3974. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் பயணச் சுமைகளுக்குக் காவலாக 'கிர்கிரா' என்றழைக்கப்பட்ட மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (ஒரு நாள்) இறந்துவிட்டார். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவர் நரகத்தில் நுழைவார்'' என்று கூறினார்கள். (இதைக் கேட்டு) நபித்தோழர்கள் அவரைப் பார்ப்பதற்காகச் சென்றனர். அங்கு அவர் மோசடி செய்து (திருடி) எடுத்து வைத்திருந்த மேலங்கி ஒன்றைக் கண்டார்கள். 191
''(என் ஆசிரியர்) இப்னு சலாம்(ரஹ்) 'கிர்கிரா'வை 'கர்கரா' என்று வாசிக்க வேண்டும் என்று கூறினார்கள்'' என அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன்.
(வழக்கின் போது) தலைவர் எதிரிகளுக்கு அறிவுரை கூறுவது.
7169 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
நான் ஒரு மனிதன்தான். நீங்கள் என்னிடம் உங்கள் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விடத் தம் ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்கு சாதுரியமிக்கவராக இருக்கலாம். நான் கேட்பதை வைத்து அதற்கேற்ப தீர்ப்பு வழங்கிவிடுவேன். எவருக்கு நான் அவரின் சகோதராரின் உரிமையில் சிறிதை (உண்மை நிலை அறியாமல் வாதங்களை வைத்து) கொடுக்க வேண்டுமென்று தீர்ப்பளித்து விடுகிறேனோ அதை அவர் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அப்போது நான் அவருக்குப் பெயர்த்துக் கொடுப்பதெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான்.
என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.31