தலைமை இணைய தளம்
தலைமை இணைய தளம்
தலைமை:
தலைமை என்பது ஒரு மனிதர் அல்லது ஒரு இயக்கத்தின் முதன்மையான பங்குவகிப்பவரின் பண்பை குறிக்கும் தமிழ் சொல். அந்தச் சொல்லின் உச்சரிப்பு , THALAMI என்ற ஒரு ஆங்கில சொல்லின் உச்சரிப்பை தழுவி இருப்பது தற்செயலான ஒரு அம்சம் என்று எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால், THALAMI என்ற ஆங்கில சொல், உடற்கூறியலில் முக்கியமான ஒரு சொல். ஒரு மனிதனின் மூளையில் முக்கியமான ஒரு பகுதியை குறிக்கும் சொல் THALAMI . THALAMI என்ற பகுதி, மனிதனின் மூளையில் CORTEX என்ற பகுதியை மனிதனின் உடலில் பல்வேறு உணர்வுகளுடன் ஒன்றிணைக்கும் முக்கியமான செயலாற்றுகிறது.
THALAMI என்பது ஆங்கில சொல்லாக இருப்பினும், அது கிரேக்க மொழி சொல்லிலிருந்து ஆங்கில மொழிக்கு பரவியது நிதர்சனம். தமிழ் மொழியிலும் கிரேக்க மொழியின் தாக்கம் இருப்பது உண்மை என்பது எனது கருத்து.
எனவே இந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் தமிழ் மொழி ஆவணங்களை, இந்த பகுதியில் பகிர்கிறேன்.
மேலும் இந்த நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளை, THALAMI அல்லது THALAMAI என்ற பெயர்ச்சொல்லைக் கொண்டு கண்டறியலாம்.
இந்த நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும், அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை, தமிழ் வழியிலும் எல்லோரும் பயன் பெரும் வகையில் அமைப்பதே என்னுடைய நோக்கம்.
இந்த முயற்சிக்கு அனைவரும் அதரவு தர வேண்டுகிறேன் - - நாகராஜன் துரைசாமி (நிறுவனர்).
அனைவரும் என்னுடைய மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ள research <@> thalami . io என்ற முகவரியை பயன்படுத்தலாம். தொடர்பு கொள்ளும் முன்னர் < > என்ற குறியீட்டை நீக்கிவிட்டு, மேற்கண்ட மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தவும்.
காப்புரிமை. - நாகராஜன் துரைசாமி.