மிகச் சிறந்த இணையத்தள பிரஜையாவதற்கான 10 விடயங்கள் (10 things that make you a better online citizen)

Post date: Feb 8, 2018 7:25:05 AM

01. இணையத்தளத்தில் எதேனும் ஒன்றை பகிர்வதற்கு (SHARE) முன்னர் அது தொடர்பாக இரு முறை சிந்தித்து பார்க்க வேண்டும். என்பதனை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். அவ்வாறாக பகிரப்படும் விடயங்களை நண்பர்களுக்கு மட்டுமென மட்டுப்படுத்துவது பாதுகாப்பான முறைமையாக அமையும்.

02. சமூக வலைத்தளங்களில் ஆயிரக் கணக்கான போலி கணக்குகள் உள்ளன. உங்கள் பிள்ளைகளின் இணையத்தள தொடர்புகள் , அவர்களின் நம்பிக்கைக்குறிய நண்ப , நண்பிகளுக்கு மாத்திரம் அவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் மிகவும் முக்கியமாகும்..

03. ‘’கணனி என்பது பிள்ளைகளை பராமரிப்பவர் அல்ல’’ தொழில்நுட்ப உபககரணங்களிலிருந்து குறிப்பிட்ட நேரம் விடுபட்டு நண்பர்களுடன் ஓடி , ஆடி விளையாடுவதற்கு பிள்ளைகளை ஊக்கப்படுத்துங்கள்.

04. அவர்களின் நண்பன் நண்பிகள் உள்ளிட்ட இணையத்தில் தொடர்புகளை வைத்திருக்கும் யாருக்கேனும் அவர்களின் கடவுச் சொல்லை (PASSWORDS) வழங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டுமென பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது முக்கியமாகும்.

05. சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணையத்தள கணக்குகளில் ‘’PRIVACY SETTINGS’’ பயன்படுத்தும் முறை தொடர்பாக பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து அதனூடாக தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக கட்டிளம் வயதை தாண்டிய பிள்ளைகளுக்கு போலி இணையத்தள கணக்குகளில் இருந்து அதன் மூலம் பாதுகாப்பை பெற முடியும்.

06. அடுத்தவருக்கு பாதிப்பானவாறு தகவல்கள் (MESSAGES) தமது நண்ப நண்பிகளுக்கு செல்லாதவாறு பார்த்துக்கொள்வது தொடர்பாக பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அதேபோன்று வேறு யாரேனும் அவ்வாறு செய்தால் அதற்கு அதேபோன்றே பதிலளிக்க கூடாது என பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் நண்பர்களாகவும் மற்றும் பண்பாகவும் நடந்துக்கொள்வதற்கு ஊக்கமளியுங்கள்.

07. துன்புறுத்தும் வகையிலோ அல்லது அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலோ நடந்துக்கொள்ளும் சமூக வலைத்தளங் கணக்கு உரிமையாளர்கள் தொடர்பாக முறைப்பாடு (REPORT) செய்யவும்.

08. சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தளங்களில் மேற்கொண்ட விடயங்கள் தொடர்பாக தினமும் ஒரு தடவையாவது பிள்ளைகளுடன் கலந்துரையாடுங்கள்.

09. சமூக வலைத்தளம் ஊடாக பிள்ளையுடன் கருத்துப் பரிமாற முயற்சிக்கும் இனந்தெரியாத நபர்களின் கணக்குகளை முடக்க (BLOCK) செய்யுங்கள். அவ்வாறு செய்வதற்கு பிள்ளைகளை பழக்குங்கள்.

10. பெற்றோர்கள் என்ற ரீதியில் ‘’PRIVACY SETTINGS’’ தொடர்பாக தெளிவுகளை பெற்றிடுங்கள். அதன் மூலம் பாதுகாப்பான முறையில் இணையத்தளங்களை பயன்படுத்துவதுதொடர்பாக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்.