thyagarajakrithis-meaning

001-அபி4மானமென்னடு3 கல்கு3ரா ..kunjari

களிப்பூட்டும் பட்டாபிராமா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!அன்பு என்றுண்டாகுமய்யா, அனாதையான என்மீது உனக்கு?குற்றங்கள் யாவற்றையும் மன்னியுமய்யா;

======================================================

002-

அபி4மானமு லேதே3மி - ராகம் ஆந்தா3ளி

வனமாலி!

=====================================================

003-Adigi Sukhamu - Raga Madhyamavati

ஆதிமூலமே இராமா! அறாத, பாவமெனும் இருள் நீக்கும் கோடி பரிதியே! சார்வபூமனே! கமலக்கண்ணா! நற்குணத்தோனே! அரக்கரையழித்தோனே! சாகேத நகருறையே! தியாகராசனால் போற்றப் பெற்ற இறைவா!

என்ன மாயையிது?

==========================================================

004-Adugu Varamula - Raga Arabhi - Prahlada Bhakti Vijayam

(இச்சொற்கள் பிரகலாதனுக்கு அரி பகர்வதென)

தானவச் சிறுவா! உயர் தியாகராசனின் நண்பா!

=======================================================

005-Adi Kaadu Bhajana - Raga Yadukula Kambhoji

==============================================

006-Alakalallalaadaga - Raga Madhyamavati

தியாகராசனால் போற்றப் பெற்றோனாகிய, இராமனின் முகத்தினில் துலங்கும் சுருளல்கள், எழில் மேலிட, அசைந்தாடக் கண்டு, அவ்வரச முனிவர், விசுவாமித்திரர் எப்படிப் பொங்கினாரோ!

===================================================

007-Allakallolamu - Raga Saurashtra - Nauka Charitram

இப்பாடல் 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும்.

(பாடலின் பின்னணி - ஆய்ச்சியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, அவனுடன் படகில் யமுனை நதியில் பயணம் செய்தனர். கண்ணனை சந்தித்த மகிழ்ச்சியில், அவர்கள், கண்ணன், 'தங்களது சொத்து' என்று செருக்குற்றனர். அவர்களுடைய செருக்கினைப் போக்குதற்காக, யமுனையில், புயலையும், மழையையும் உண்டாக்கினான் கண்ணன். அந்தப் புயல் - மழையினால், படகு, நீரில் தத்தளித்தது. ஆய்ச்சியர், யமுனையில் மூழ்கிவிடுவோமோ என்று அஞ்சி, யமுனா தேவியினை வேண்டி இப்பாடல் பாடுகின்றனர்.)

தியாகராசனின் நண்பன் - கண்ணன்

---------------

=======================================================

007-Amba Ninu - Raga Arabhi

========================================================

008-Amma Dharmasamvardhani - Raga Athana

எமது தாயே! அறம் வளர்த்த நாயகியே! சிவனின் இல்லாளே!

தாயே! மலையரசனின் செல்ல மகளே! மதனர் கோடி எழில் உடலினளே! இளஞ்சிவப்புத் தாமரையிதழ்க் கண்ணினளே! உவமையற்ற, மங்கள உருவினளே! (புனித) பீடங்களிலுறைபவளே! புனித கரங்களில் வளையல் அணிபவளே! முற்றிலும் புனிதமானவளே! தொண்டரைக் காக்கும் சுமையேற்றவளே! வீர சக்தியே!

அம்பையே! சங்குக் கழுத்தினளே! அழகிய கதம்ப வனத்தினில் உறைபவளே! கோவை யிதழ்களுடைய, மின்னல்கள் கோடி நிகர் ஒளியினளே! கருணைக் கடலே! காமன் பகைவனின் இதயத்திலுறை சங்கரியே! கௌமாரியே! தும்புரு மற்றும் நாரதரின் இசை இனிமையினை வெல்லும் குரல் உடையவளே! பாவங்களைக் களைபவளே!

மங்களமானவளே! முக்கண்ணினளே! தலைசிறந்தவளே! சிறந்த யோகியர் இதயத்தில் மதிக்கப்பெற்றவளே! தியாகராசனின் குலப் புகலே! வீழ்ந்தோரைப் புனிதமாக்குபவளே! கருணைக் கடலே! பொதிகைக் கன்னியின் கரையிலுறைபவளே! பராபரியே! காத்தியாயினியே! இராமனின் சோதரியே!

========================================================

009-

அம்மா, துளசம்மா! கமலக்கண்ணாளே!

அம்மா, துளசம்மா! கமலக்கண்ணாளே!வாராயம்மா;

===========================================================