BOAT-STORY-TAMIL

NOUKA CHARITHRAM- NOT BY THYAGARAJA?

December 18, 2019

I  very  much  doubt  that 'Nouka Charithram '  songs ( numbering 20 )  were  wriiten  by  Thyagaraja Swami.

My  surmise  is  that  it  was  written  by  his  disciple  Venkata Ramana Bagavathar  and  passed  off  as  that  of Thyagaraja.

---------------------

   The words  used are  explicitly  vulgar  and  erotic  and  to  the  best  of  my  knowledge,  Thyagaraja  never  used  such  vulgar  description  of  women  any where.

---------------------

   This  particular  story  is  not  found  anywhere  even  in Bagavatham.  ( according  to  scholares  who  have  read  the  entire  Bagavatha Puraanaa.

----------------------

   Moreover,  the  translation  by  Sri.V.Govindan  gives a much  better  version , less  vulgar.

He  is a native  TELUGU  speaker  and a language  scholar

------------------------------

I  intend  giving  the gist  of  the  20  songs.  in exact  sequence  .

-----------------------------------------

    As  I  visualize  , the boy  Balakrishna  is  barely  3  years  old.

and  so  innocent  that  he  will  bring  handful  of  gems  to  purchase  jujube ( பேரீச்சம் பழம் pericham pazham) from a an  old lady  -street  vendor!

------------------------------------------

இது  மொழிபெயர்ப்பு  அல்ல.  ஓரளவு  ஸ்ரீ .வி.கோவிந்தன் அவர்களின் மொழிபெயர்ப்பை  சார்ந்திருந்தாலும்,   என்னுடைய சொந்த வார்தைகளில்  எழுதுகிறேன்.  பல  இடங்களில்  பாடலில் உள்ள  வரிகளை  தவிர்த்துள்ளேன்.   இது  ஒரு  கதை எனக் கருதிப் படியுங்கள்.

=======================================

 Sringaarinchukoni - Raga Surati

    ஆய்ச்சியர் குல குறும்புச்  சிறுமிகள்  யமுனை நதியில்  விளையாட, கூட்டமாக செல்கின்றனர்.  அவர்கள் போவதை பார்த்து, குழந்தை  கண்ணன் 'நானும்  கூட  வருகின்றேன். என்னையும்  அழைத்துச் செல்லுங்கள்   என்று  பிடிவாதம் செய்கிறான்.  'வேண்டாம் கண்ணா. . நாங்கள்  படகில்  ஏறி விளையாடப்போகிறோம்  .  நீ சிறு குழந்தை  அல்லவா.  நீ  இங்கேயே  விளையாடு. நாங்கள்  விரைவில்  வந்து  விடுகின்றோம்  என்று  கொஞ்சிக் கெஞ்சுகின்றனர். ஆனால்  கண்ணன்   மசிவதாக இல்லை. ' சரி வா .  பத்திரமாக  . சேட்டை  செய்யாமல் எங்களோடு வா '  என்று  அவனையும்  அந்த  சிறுமிகள்   கூட்டிச்செல்கின்றனர். . 

       கண்ணன் ,கண்டவரை  மயக்கும்  அழகான குழந்தை  .  ஒரு  பெண்  அவனுடைய  சுருள்  முடியை  கோதி  விடுகிறாள், இன்னொருத்தி  கண்ணனின் கன்னத்தில்  செல்லமாக முத்தமிடுகிறாள், இன்னொருத்தி  அவனது  பாதங்களில்  முகம் பதிக்கிறாள். இன்னொருத்தி   அவனது முடியில் பூச்சரம்  சூட்டுகிறாள். .இன்னொருத்தி  ' டே! கண்ணா!  என்னைக்  கல்யாணம் பண்ணி கொள்   என்கிறாள்.  இன்னொருத்தி,   கண்ணன் மீது  வாசனை திரவியம் தெளிக்கிறாள்.   இன்னொருத்தி, வேடிக்கையாக  கண் சிமிட்டி  அழைக்கிறாள்.  இன்னொரு  குறும்புக்காரி  'டே! நீதாண்டா  எனக்கு  சரியான  மாப்பிள்ளை'  என்கிறாள். இன்னொருத்தி,  அவனுக்கு  வெற்றிலை சுருள்  தருகிறாள். இன்னொருத்தி  கண்ணனை  நெஞ்சோடு  அனைத்து  மகிழ்கிறாள்,

இவ்வாறு  கேலியும் கூத்துமாக , அந்த ஆய்ச்சியர்  சிறுமிகள்  யமுனை  நதிக கரையை சேர்ந்து  அடைகின்றனர்.

--------------------------------------------------

Chudare Chelulara - Raga Pantuvarali

யமுனை  நதிதான்  எவ்வளவு  அழகு !

எங்கெங்கும் செந்தாமரை  மலர்கள், அவற்றில் ரீங்காரமிடும்  வண்டுக்கூட்டம். அங்கங்கே  வெள்ளைவெளேரென   என  மணல்  திட்டுகள், அழகாகப் பாயும் கருநீல நதி.! படித்துறை தான் , வைரம் போல   எவ்வளவு  அழகு!  அவற்றில் மோதி நெளியும் நீர்த் திவலைகள்!

ஆற்றில்    சொகுசாக நீந்திச் செல்லும்  அன்னங்கள். அவை  எழுப்பும்  குரலோசை. . எங்கெங்கும் மலர்க்கொடிகள்.  கூடவே  கனிமரங்கள்.  பச்சைக்கிளிகள் கூட்டம். குயில்களின்   கானம். இனிய பூங்காற்று

எங்கும்  இனிமை!

===================================

Adavaaramella -

 Raga Yadukula Kambhoji -

 "இவனை  எப்படி படகில் கூட்டிச் செல்வது? குழந்தை  பயப்படுவான்.

இவனைக் கரையில் விட்டுவிட்டு  நாம்  மட்டும்  படகினில்  செல்வோமா?

நவரத்ன  நகைகள்  அணிந்துள்ள ராஜகுமாரன்  இவன் .

]"போடி! அவனும் நம்மோடு  படகில்  வந்தால்தான்  விளையாட்டு  ரசிக்கும். "

"அம்மாடி!  ஏதாவது  நடந்துவிட்டால்  நமக்கு  ஆபத்து. ஊர்  பூராவும்  நம்மைத் தீட்டித் தீர்த்துவிடும். வேண்டாம். விபரீதம்.  அவன்  கரையிலே யே  இருக்கட்டும்."

என்று  இவ்வாறு  மாற்றி மாற்றி  அந்த ஆய்ச்சியர்  சிறுமிகள்  விவாதித்துக்கொண்டிருந்தனர்.

   குழந்தை  கண்ணனுக்கு  எரிச்சல்  வந்துவிட்டது.  'இப்படி பேசிக்கொண்டே  நேரத்தை  வீணடிக்கிறீர்களரே!  வந்த வேலையை பாருங்கள்.  படகை  ஆற்றில்  தள்ளி , பயணத்தைத் தொடங்குங்கள்  "என்கிறான்.

-------------------------------------------------------------

Emani Nera Nammu -

 Raga Saurashtram -

    வேண்டாம்  கண்ணா  ! நீ எங்களோடு  வரவேண்டாம். நாங்களே  படகை    தள்ளி  சற்று  நேரத்தில்  வந்துவிடுகிறோம்.  என்றனர்.

      குழந்தை  கண்ணன் அப்போது, '  என்  போன்ற  ஒரு  ஆண் பிள்ளை  உதவி  இல்லாமல்  பெண்களாகிய    நீங்களே  படகை  ஆற்றில்  தள்ள முடியுமா? முடியாது. !என்னை நம்புங்கள்."  என்கிறான்.

   அப்போது  அந்த சிறுமிகள் , கேலி  செய்கின்றனர். ' அடேங்கப்பா! இவன் ஒரு  பெரிய மனுஷன் ! இவன் உதவி  இல்லாமல்  நம்மால்  படகை தள்ள முடியாதாம்! இவனை  எப்படி நம்புவது!   பெரும்  கள்ளன்  இவன்.!  நீராடும் போது  நமது  ஆடைகளைத் திருடி  நம்மை  அழவைத்தவன். அண்ணி  போன்று  வேஷமிட்டு,  நமது  பாவாடையை  உருவியவன். நெற்றியில்  பொ ட் டு  வைக்கிறேன் என்று  சொல்லி  திடீரென்று  முத்தமிட்டவன். பிராமண ஸ்திரீகளுக்க்காக  ஸ்பெஷலாக  குழல் இசைத்தவன். 

இவனுடைய

 சேட்டைகளை  அவன் அம்மாவிடம்  சொல்லலாம்  என்று  சென்றால்  ஒன்றும் அறியாத அப்பாவிபோல  அன்னையின்  மடியில்  அமர்ந்துகொண்டவன்.

இந்திரனையே   வசமாக்கி மழை  பெய்ய வைத்தவன்.  இவன்  பேச்சை எப்படி  நம்புவது?

------------------------------------------------------------------

Ememo Teliyaka - Raga Sauraashtram -

 கண்ணனுக்கு  ரோஷம்  வந்துவிட்டது.  அவனுக்கு  சொல்லப்  பட்ட

கதைகளை   நினைத்துக் கொண்டு, தான்  தான்  அந்த  பராக்ரமசாலி   என்று   கதைக்கிறான் .

  "இதோ பாருங்கள்   இரக்கம் இல்லா பெண்களே!  என்னுடைய  பிரதாபம்  உங்களுக்கு  என்ன தெரியும்?  ஒன்றும்   தெரியாமல்  உளர வேண்டாம்!  அன்று ஆமை அவதாரம்  எடுத்து,மந்தார  மலையை  என் முதுகில்  சுமந்து  வேதங்கள் அனைத்தையும்  நான்தான் காப்பாற்றினேன்  தெரியுமா? முதலையின் வாயில்  அகப்பட்டுக்கொண்டு  கஜராஜன்  கதறியபோது,  கருட வாகனத்தில்  ஏறி    பறந்து வந்து அவனை  காப்பற்றியது யார்?

சமுத்ரத்துக்குள்  அஞ்சாமல்  பாய்ந்து  வேதங்களை  திரும்பக்கொண்டுவந்தது யார்? என்  குருவின் மகனை  அசுரனிடம் இருந்து  காப்பற்றியவன் யார்?  யமுனை  நதியில் , காளிங்க நடனம்  செய்து  , எலாரையும்   காப்பற்றியது  யார்?  என்னைப்  பற்றி  உங்களுக்கு  என்ன தெரியும். ?

------------------------

( TO  BE  CONTINUED)

-------------------------

19-12-2019

-------------

6)Odanu Jaripe - Raga Saranga

  ஒரு வழியாக , எல்லாச் சிறுமிகளும்  ஒன்று  சேர்ந்து  படகை நதிக்குள்  இறக்கி அதில்  ஏறிக்கொண்டனர் .  குழந்தை  கண்ணனனும் ,தன் பிஞ்சுக் கரங்களால் ஓடத்தை  தள்ளி   பாவனை செய்தான்.  சிறுமிகள்  அவனை  ஓடத்தில்  தூக்கி  அமர்த்தினார்கள்.   

   சிறுமிகளின்   படகோட்டி  விளையாட்டு  ஆனந்தமாக தொடங்கியது.   சிலர் யமுனாதேவியை பாடினார்கள், சிலர்  ஹரி நாமம் பாடினார்கள்,   அவர்கள் ஒடத் துடுப்பை  இயக்கும்போது,   அவர்களின் முத்து  மாலைகளும்  அதற்கு   ஏற்ப ஆடின.   சிலரது கூந்தல்  அலங்காரம் கலைந்து  காற்றில் பறந்து  கண்களை  மறைத்தது.  விளையாட்டு  உற்சாகத்தில், அவர்கள்  ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு  கூச்சல் இட்டார்கள். 

-----------------------------

7) Tanayande Premayanuchu - Raga Bhairavi

குழந்தை கண்ணன் அப்போது, ஒரு தோழிக்கு  மலர்  சூட்டிவிட்டான். இன்னொரு  சிறுமிக்கு  நெற்றியில் பொட்டு வைத்தான். ஜரிகைத் தலைப்பை பற்றி  இழுத்தான். இன்னொரு   பெண்ணிடம்  இனிமையாக மழலை  உரையாடினான். இன்னொரு பெண்ணின் மடியில்  தலை  வைத்து  படுத்துக் கொண்டான். இவ்வாறு  ஒவ்வொரு  சிறுமிக்கும்  கண்ணனுக்கு  தான் தான்  மிகவும்  பிடித்தம் என்ற பிரமை  தோன்றியது. 

லட்சுமி தேவியை விட நாம் அழகானவர்கள்  போலும்.கண்ணன் என்னிடம் இவ்வளவு  பிரியமாகப் பழக  நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும! இவ்வளவு  தோழிகள்  நடுவே   என்னை மட்டும்     அல்லவா கண்ணன் தேர்ந்தெடுத்து  விளையாடினான்!   இப்படி ஒவ்வொரு சிறுமியும் மதி மயங்கி,   மனம்   ,கிறங்கி கர்வம்  .கொண்டனர்.

----------------------------------------------------------

8)    E Nomu Nochitimo - Raga Punnagavarali  லட்சுமி தேவியை விட நாம்  அழகு போலும். பட்டாடை உடுத்தி   அழகான மாலைகள்  அணிந்து  அழகன் கண்ணனுடன்  விளையாட   நமக்கு இந்த பாக்கியம் எப்படிக் கிடைத்தது?    நாம் சொன்னதையெல்லாம்  கேட்டு  நம்மிடம்  பிரியமாக இருக்க கண்ணன்   அனுக்கிரஹம் செய்தது  அதிசயம்! நாம்  மிகவும்  கொடுத்து  வைத்தவர்கள், -----------------------------------------------------------

9)  Chalu Chalu Ni Yuktulu - Raga Saveri - அப்போது கண்ணன் அந்த சிறுமிகளை  மேற்கு  திசை நோக்கி  படகைச் செலுத்துங்கள்  என்கிறான்.  எதோ   சேட்டை செய்யப் போகிறான்  என்று  சிறுமிகள்  அவனிடம் முரண்டுகிறார்கள். உன் மனதில்  என்ன திட்டம்  வைத்திருக்கிறாய்? எங்களை  எப்படி  ஏமாற்றப் பார்க்கிறாய்? எங்களிடம்  உன் சூழ்ச்சி பலிக்காது.  என்று  அந்த   சிறுமிகள்  மறுத்து அஞ்சுகிறார்கள். 

-------------------------------------------------------------

10)