星期六早上,我的英文老师和一位家长一同取出捆绑着树苗的塑料袋。我和他们用锄头将土壤推入树洞。之后,我们用锄头轻轻地把土壤压平。
最后,我用喷壶帮树浇水。我心中默默地祈求,希望它能长得好,从小树长成大树,生生不息地绿化这片土地。
参加活动后,虽然很累,但我却感到十分充实。通过这项活动,我学到了团队精神的重要性,并且认为与老师们一起种树真是个千载难逢的机会!
我希望之后我能持续为地球暖化尽一份力,如回收可回收的东西等。
黄梨琪 (6E; 6CL2)
மரத்தை நடுவோம், சமூகத்திற்குப் பங்களிப்போம்
ஜனவரி 15ஆம் தேதியன்று நன்யாங் சமூக மன்றத்தின் மரம் நடும் நாள் இடம்பெற்றது. அதில் வெஸ்ட் குரோவ் தொடக்கப்பள்ளியின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர். அதில் கலந்துகொண்ட ஒரு சிலரிடம் நாம் பேட்டி கண்டோம். அவர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றி.
“மரங்கள் உண்மையில் நமக்குப் பல வகைகளில் பயனளிக்கின்றன. அவை நம் சுற்றுச் சூழலை எழில்படுத்துவதோடு, கரியமில வாயுவை வளிமண்டலத்திலிருந்து நீக்குகின்றன. மேலும், மரத்தை நடுவதால் பல்லுயிர் பெருகுகின்றன; மண்ணரிப்பையும் தடுக்க முடிகிறது. ஒரு விதை சிறியதாகத் தோன்றினாலும் அதற்குள் ஒரு மரமே மறைந்திருக்கும்,” என்றார் பெற்றோர் தன்னார்வலர் திருவாட்டி பிலீஸ்.
ஆசிரியர்களுடன் பர்சின்
திருவாட்டி பிலீஸ் மரத்தை நடுகிறார்
“நம் நாட்டிற்கும் நமக்கும் பலன் தரக் கூடிய நற்செயலில் ஈடுபட்டிருந்ததால், அந்த நடவடிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பள்ளிக்கு வெளியே உள்ள புல்வெளியில் குழிகள் பல தோண்டப்பட்டு செடிகள் நட்டு வைக்கப்பட்டிருந்தன. அவற்றைச் சுற்றியிருந்த மண்ணை மண்வெட்டியின் உதவியோடு செடியைச் சுற்றி நிரப்பி மூடினோம். பிறகு, தண்ணீர் ஊற்றினோம். செடி நடுவதன் மூலம் இயற்கை வளங்களை என்னால் பாதுகாக்க முடிந்தது. இது போன்றே மற்றவர்களையும் மரம் நட நான் ஊக்குவிப்பேன்,” என்றான் பர்சீன், தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவன் மற்றும் சட்டாம்பிள்ளை.
“எனக்கு மரம் நடும் நடவடிக்கை மிகவும் பிடித்திருந்தது. இதை நான் என் நண்பர்களோடும் ஆசிரியரோடும் சேர்ந்து செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. சிங்கப்பூரின் பசுமையைக் காக்க நான் மேலும் பல மரங்களை நட ஆசைப்படுகிறேன்,” என்று லோஷ்ணவி, தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவி, கூறினாள். இவள் பள்ளியின் இயற்கை சங்கத்திலும் தீவரமாக செயலாற்றி வருகிறாள்.
ஆசிரியர்களுடன் லோஷ்ணவி
திரு. மா. கலைச்செல்வன், அவரது மகள் அக்ஷயாஞ்சலி
மற்றம்
ஆசிரியர், திருவாட்டி அணிசா
“நான் என் தந்தையுடன் சேர்ந்து மரத்தை நடும்போது அவரைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். அவர் சிறுவயதில் இதேபோல் மரங்களை நட்டு வைத்துள்ளார். மேலும், தேசிய சேவையிலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். நாட்டைப் பாதுகாப்பதில் இயற்கையின் பாதுகாப்பும் அடங்கும் என்பதை நான் அன்று உணர்ந்தேன்,” என்றாள் அக்ஷயாஞ்சலி, தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவி மற்றும் சட்டாம்பிள்ளை.
நாம் சுவாசிப்பதற்கும், நமக்கு நிழல் தரவும் மரங்கள் உதவும். ஆதலால், நம் சமுதாயம் மரங்களை அதிகமாக வெட்டாமல், நிறைய மரங்களை நட்டு வைக்கும் பணியில் ஈடுபடவேண்டும். அப்பொழுதுதான் குளிரான சுற்றுப்புறத்தோடு வாழ்வதற்கு நல்ல உலகமும் அமையும். ஆகவே, மரம் என் நண்பன் என்று நினைத்துக்கொண்டு நிறைய மரங்களை நட்டு வைக்கவேண்டும்,” என்று முன்னாள் பெற்றோர் தன்னார்வலர் குழுத்தலைவர், அக்ஷயாஞ்சலியின் தந்தை, திரு மா.கலைச்செல்வன் கூறினார்.
கருணாம்பரன் ஞானசேகரன் ஷர்லி, 6D
ஜெய் கணேஷ் பாலாஜி, 6F
一个风和日丽的星期六早上,我起得特早,迅速地换上校服就到学校去了。我感到十分兴奋,因为我和一些同学要和老师们一起在校外植树。
一走进学校,我就遇见了我的好朋友。我和她们七嘴八舌地讨论将要进行的活动。突然,有一位老师叫我们到广场去集合。老师要我们在植树前先暖身。大约十五分钟后,我们就出发了。
我们走了一会儿,就来到了校外的一片草地。一排排的小树像战士一样笔直地立在那儿。我和两位老师被分配到“一号”树的位置。听了委员会先生的讲解后,我们就拿起锄头开始植树。我心想:锄头好重啊!不过,我还是会把今天的任务做好。我看见爸爸用相机为我记录下我种树的过程,真开心!
种完树后,我们就走回学校。在食堂里,老师派出小点心给我们吃,好多同学都狼吞虎咽地吃了起来。活动了半个小时,我想大家都饿了吧!我也不例外!
回到家后,我虽然十分疲倦,但还是感到十分充实。如果有下次,我一定会再去!
洪慧如 (6F; 6CL2)
Acara Penanaman 1000 Pokok
Pada 15 Januari 2022, beberapa kakitangan dan pelajar Sekolah Rendah West Grove telah menyertai acara Menanam 1000 Pohon di Singapura.
Acara ini diadakan bagi menyahut cabaran Gerakan OneMillionTrees. Gerakan OneMillionTrees bertujuan untuk memulihkan alam semulajadi ke kota SInga melalui penanaman lebih daripada satu juta pohon di seluruh Singapura selama 10 tahun akan datang.
Acara Menanam 1000 Pohon yang dianjurkan oleh Kelab Masyarakat Nanyang diketuai oleh penasihat akar umbi Nanyang, Encik Ang Wei Neng.
Cikgu Shariffah Haiezian yang turut serta dalam acara ini berkata bahawa beliau berasa teruja menyertai acara.
“Saya tidak pernah sertai program seperti itu dan saya inginkan pengalaman yang baharu,” kongsi beliau.
Laporan ini disediakan oleh Cikgu Kartini Khairi yang juga menyertai acara tersebut.
Cikgu Kartini