இந்தியாவில் கோவிட் -19 தொற்றுநோய்

ஒரு பொது காப்பகத்தை உருவாக்குவோம்


பங்களிக்க வேண்டுகோள்:

கோவிட் -19 தொற்றுநோய் பரவி வரும் வேளையில், நாம் முன்பு இல்லாததைப் போன்ற உணர்ச்சிகளை அனுபவித்து வருகிறோம்.துக்கம், சோகம், கோபம், விரக்தி, உதவியற்ற தன்மை, பயம், பயம், நம்பிக்கை போன்ற உணர்ச்சிகளுடன் பற்றிப் பிடித்து போராடி வருகிறோம்.

இதுபோன்ற முன்னோடியில்லாத மற்றும் முன்னறிவிப்பு இல்லாத வேளையில், இந்தியா முழுவதிலுமிருக்கும் மக்கள் தங்கள் உணர்வுகளையும், கோவிட்-19 உடனான பயணத்தை ஆவணப்படுத்த - ஒரு பொது காப்பகத்தை உருவாக்க எங்களுக்கு உதவுமாறு நாங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த காப்பகம்- யாரும் தங்கள் அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் -பெயருடனும் (அ) பெயரில்லாதும் பகிர்ந்து கொள்ளும்படி பாதுகாப்பான இடமாக செயல்படும்.

இந்த அனுபவங்களை சேகரித்து, பராமரித்து, பாதுகாக்குவுதன் மூலம் இந்த காலங்களின் வரலாறுகள் எதிர்காலத்தில் மறக்கப்பட்டு அழிக்கப்படாது என்று நம்புகிறோம்.

நீங்கள் பங்களிக்கக்கூடிய வழிகள்:

ஆடியோ, வீடியோ, குறிப்புகள், ஸ்கெட்ச், புகைப்படம், கடிதங்கள் அல்லது பிற ஆவணங்கள், பொருள்கள், ... தொற்றுநோயைப் பற்றிய உங்கள் அனுபவத்தை குறிக்கும் எதையும

Frequently Asked Questions


ஏதேனும் தகுதி அளவுகோல்கள் உள்ளதா?

இல்லை


சமர்ப்பிப்பதற்கான தரநிலைகள் யாவை?

எதுவும் இல்லை


இது எனது சொந்த அனுபவமாக இருக்க வேண்டுமா?

ஆம்


நான் சுயவிவரங்கள் இல்லாது பங்களிப்பு செய்யலாமா?

செய்யலாம்

வேறொருவரின் கதை காப்பகப்படுத்தப்பட வேண்டுமென்றால் நான் என்ன செய்வது?

இந்த முன்முயற்சியைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களின் அனுபவத்தை பதிவு செய்ய / ஆவணப்படுத்த அவர்களுக்கு உதவுங்கள், அவர்களின் ஒப்புதலுடன் எங்களுக்கு அனுப்பவும்

காப்பகப்படுத்தப்பட வேண்டிய பொருட்களை நான் அனுப்பலாமா?

ஆம், ‘கோவிட் -19 தொற்று-இந்திய காப்பகம்’ என்ற தலைப்புடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.


நான் மின்னஞ்சல் வழியாக டிஜிட்டல் பொருட்களை அனுப்பலாமா?

இல்லை

சமர்ப்பித்த பிறகு மேல் ஏதேனும் தொடர்பு இருக்குமா?

சமர்ப்பிக்கப்பட்ட பொருட்கள் குறித்து மேலும் கேள்விகள் கேட்கப்படாது. இந்த காப்பகத்தை உருவாக்கும் செயல்முறை குறித்து நீங்கள் தொடர்ந்து தெரிந்து கொள்ள விரும்பினால், தயவுசெய்து ‘கோவிட் -19 தொற்று இந்திய காப்பகம்’ என்ற தலைப்பில் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

ஏன் ஒரு காப்பகத்தை உருவாக்க வேண்டும்?

ஒரு காப்பகம் என்பது பல்வேறு வரலாறுகளுக்குக் காரணமான பொருள்கள் மற்றும் கதைகளின் தொகுப்பைப் பாதுகாக்கும் ஒரு தளமாகும்.தொற்றுநோய்களின் போது நிகழ்நேரத்தில் நிகழ்ந்ததைப் புரிந்துகொள்வதற்காக, பின்னர் வரும் காலங்களில் இந்த சேகரிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கப்படுகின்றன.இந்த காப்பகம் உங்கள் அனுபவங்களின் ஒவ்வொரு சிறிய விவரங்களுக்கும் கவனம் செலுத்துகிறது, மேலும் உங்கள் சமர்ப்பிப்புகளின் தன்மையை அவற்றின் அசல் வடிவத்தில் தக்க வைத்துக் கொள்ளும்.

உங்கள் சமர்ப்பிப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டு உலகளாவிய வலை வழியாக மிகப் பெரிய பார்வையாளர்களுக்கு வழங்கப்படும்.

இந்த காப்பகம், பல்வேறு தொழில் வல்லுநர்களின் உதவியுடன் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சிந்தனையுடன் ஒழுங்கமைக்கப்பட்டு- இந்த தொற்றுநோய் உடனான தனிப்பட்ட மற்றும் கூட்டு அனுபவங்கள் பாதுகாக்கப்படுவதையும் நினைவுகூரப்படுவதையும் உறுதிசெய்யும் ஒரு இலவச அணுகல் தளமாக இருக்கும்.

நான் ஏன் காப்பகப்படுத்த வேண்டும்?

ஒரு கூட்டு நினைவகத்தை பாதுகாக்கும் மற்றும் பரப்பும் செயல்பாட்டில், ஒவ்வொரு குரலும் முக்கியமானது.இருப்பினும், எல்லா குரல்களும் பதிவு செய்யப்படுவதில்லை. இந்த தொற்றுநோய்களின் போது, ​​அதை மாற்ற விரும்புகிறோம்.

உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது- கடுமையான, அதிர்ச்சிகரமான, மகிழ்ச்சியான அல்லது நம்பிக்கையானதாக இருந்தாலும், அதை உங்களுக்குள் மட்டும் வைத்து கொள்ளாமல் உலகிற்கு வெளிக்கொணர்வதில் உங்களுக்கு சிறிய நிம்மதி கிடைக்கும் .

தொலைநோக்கி பார்க்கையில், இது ஆராய்ச்சியாளர்களுக்கும் சராசரி வாசகர்களுக்கும் இந்திய மக்களின் அன்றாட அனுபவங்களை ‘தெரிந்துகொள்வதற்கு’ ஒரு முக்கியமான ஆதாரமாக இருக்கும்.

இல்லையெனில், மக்களின் அன்றாட குரல்கள் அழிக்கப்படும் அதே வேளையில், அரசு மற்றும் அதன் நிறுவனங்களின் முன்னோக்கால் வரலாறு மட்டுப்படுத்தப்படும்

இது ஏன் முக்கியம்?

இந்த தொற்றுநோய்களின் போது நம் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளவோ ​​அல்லது வெளிப்படுத்தவோ நாம் அனைவரும் ஒரு இடத்தை நாடுகிறோம். உங்கள் அனுபவத்தை பார்க்கும் ஒருவர், தானும் உங்களை போல உணர்ந்த்தையும், அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது பொழுது, உங்கள் பதிவு செய்யப்பட்ட உணர்வு அவரை கட்டி தழுவும், நம்மை போல் ஒருவர் இருந்துள்ளார் என்ற உணர்வு அவருக்கு, தன் கதையும் கேட்கப்பட்டுள்ளது என்ற சிறிய மன நிறைவை தரும்.உங்களுடன் வித்தியாசமான அனுபவங்களைக் கொண்ட நபர்கள், தங்கள் பார்வையை விரிவுபடுத்துவதற்கும், நிலைமைகளை உணர்வதற்கும் இது உதவக்கூடும். இந்த காலங்களில் நீங்கள் வாழ்ந்ததால் உங்கள் கதைகள் முக்கியம்.

Terms of Contribution

  • Contributors are expected to share only personal accounts and objects which belong to them or from the public domain.

  • If you have recorded someone else's experience, you are requested to seek their consent before submitting it.

  • If you have identified other people in your experience, either use aliases or you must seek their permission.

  • Any material shared here should not infringe on another person's privacy or right to consent.

  • No ethical or copyright restrictions have been violated while creating/sharing the content.

  • Contributors are responsible for any legal implications of their action. The project facilitators will have to take down the material in case of any dispute and share the details of the contributor with concerned members/institutions.