Temple renovations ongoing

We are striving to bring the old temples - which need attention to bring to a state where they form the hub for the villagers to engage in spiritual activities.

The following projects are ongoing & under active consideration for being taken up.

  1. காவேரிபாக்கம் அருகில் வேலூர் மாவட்டம் புதுப்பட்டு என்ற கிராமத்தில் இருக்கும் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்திஸ்வரர் ஆலயம் சுவாமியின் கர்பக்ரஹம் கல்லினால் ஆன பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது .கருங்கல் எல்லாம் பிரித்து வைக்கப்பட்டு உள்ளது. ரூபாய் முன்று லட்சம் இருந்தால் திருப்பணி நிறைவுற்று குடமுழுக்கு விழா காண வாய்ப்பு அதிகமாகும்.
    1. அருள்மிகு கல்யாணசுந்தரி உடனுறைகல்யாணசுந்தரேச்வர சுவாமி திருக்கோயில் சுவாமிமலை .இங்கு சுவாமி அம்பாள் கர்பக்ரஹம்அர்த்தமண்டபம் சிதிலமான நிலையில் இருக்கிறது .பாலாலயம் நடைபெற்றும் தொடர்ந்து பணிகள் இல்லாமலே இருப்பது கவலை அளிக்கிறது. சுவாமிமலை நிர்வாகம் பொறுப்பில் உள்ள இவ்வாலயம் ருபாய் 4 லட்சம் இருந்தால் நம் எண்ணம் ஈடேறுவது உறுதி குருக்களின் பெயரும் சுவாமிநாதன்.
    2. அருள்மிகு பூலோகநாயகி உடனுறை அருள்மிகு பூலோகநாதர் ஆலயம்,தியாகசமுத்ரம் திருவையாறு சாலை சுவாமிமலை , முழுதும் சரிசெய்ய வேண்டிய நிலை!! .குறைந்தபட்சம் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் முதலீடு செய்தால் பணி முடிவுற்று குடமுழுக்கு பண்ணமுடியும்
    3. அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் ஆலயம்,பொன் மண் மேய்ந்த நல்லூர் (8th Km from Papanasam) முப்பது குடும்பங்களும் சுமார் இருநூறு மக்களுமே வசிக்கும் இவ்வூரில் சுவாமி மிகவும் சிதையுண்ட நிலையிலான் கட்டிடத்தில் துவங்கிய பணிகள் நின்றுபோன நிலையிலேயே இருப்பது வேதனைக்குரியது (உள்ளுர்வாசி திரு ரவிச்சந்திரன் 9443585916 ) சுமார் ஒரு லட்சம் ரூபாயில் திருப்பணியும் கும்பாபிஷேகமும் செய்து வைத்தல் புண்ணியமாகும் ஏற்கெனவே உள்ளூர் பண்டார வைத்து பிரதோஷம் மட்டும் பண்ணுகிறார்கள்.