திருநெல்வேலி போக்குவரத்துக்கழகமானது தமிழகத்தின் தென்கோடியில் அமைந்தள்ள 4 மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தனது சேவையை வழங்குகிறது. 4 மாவட்டங்களில் அமைந்துள்ள 30 TNSTC பணிமனைகள் மற்றும் 8 விரைவுப் போக்குவரத்துக்கழக பணிமனைகள் என மொத்தம் 38 பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் இந்த 4 மாவட்டங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
சேவைகள்:
மாநகர பேருந்து சேவைகள்
நகர்ப்புற பேருந்து சேவைகள்
உள்மாவட்ட பேருந்து சேவைகள்
வெளிமாவட்ட பேருந்து சேவைகள்
வெளிமாநில பேருந்து சேவைகள்
சுற்றுலா சிறப்பு சேவைகள்
விழாக்கால பேருந்து சேவைகள்
பள்ளி, கல்லூரி சிறப்பு பேருந்து சேவைகள்
மலைப் பிரதேச பேருந்து சேவை
வாடகை பேருந்து சேவை
வார இறுதி மற்றும் விடுமுறை நாள் சிறப்பு சேவைகள்
பதிவெண் சீர்கள்:
TN 72
TN 74
பேருந்து கூண்டுகட்டும் பிரிவு:
சமாதானபுரம்
ராணித்தோட்டம்
பேருந்து புதுப்பித்தல் பிரிவு:
தாமிரபரணி
ராணித்தோட்டம்
மண்டலங்கள்:
திருநெல்வேலி கோட்டம்
821 நகர்ப்புற சேவைகள்
840 புறநகர் சேவைகள்
1661 தினசரி சேவைகள்
1773 பேருந்துகள்
10,640 ஊழியர்கள்
2.4 லட்சம் மாணவர்கள் இலவச பயணம்
7.32 லட்சம் கி.மீ தினசரி இயக்கம்
14.44 லட்சம் தினசரி பயணிகள்
1972 - பேருந்துகள் அரசுடைமையாக்கக்கத்தின் போது பாண்டியன் போக்குவரத்துக் கழகம் உருவானது
1974 - நாகர்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது
1983 - நாகர்கோவிலில் நேசமணி போக்குவரத்துக்கழகம் தொடங்க கட்டபொம்மனின் தலைநகரம் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது
1997 - பாண்டியன், வீரன் சுந்தரலிங்கம், இராணி மங்கம்மாள் போக்குவரத்துக் கழகங்களுடன் கட்டபொம்மன் மற்றும் நேசமணி போக்குவரத்துக் கழகங்கள் இணைக்கப்பட்டு மதுரையை தலைமையிடமாகக் கொண்டு "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - மதுரை" உருவாக்கப்பட்டது
2004 - ஏற்கனவே இருந்த கட்டபொம்மன் மற்றும் நேசமணி போக்குவரத்துக் கழகங்கள் முறையே திருநெல்வேலி மண்டலம் மற்றும் நாகர்கோவில் மண்டலம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
2010 - மதுரை போக்குவரத்துக் கழகத்தில் இருந்து திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி" உருவாக்கப்பட்டது
2013 - தூத்துக்குடி மாவட்ட மக்களின் பயனுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருந்த திருநெல்வேலி மண்டலத்தின் 6 கிளைகள் பிரிக்கப்பட்டு புதிய தூத்துக்குடி மண்டலம் உருவானது
2015 - திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் புதிய கிளை தொடங்கப்பட்டது
2017 - தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் புதிய கிளை தொடங்கப்பட்டது.