Professor Kandia Kunaratnam Gold Medal for best oration in Science and Technology for School Students - 2026
பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப்பதக்கத்திற்கான விஞ்ஞானதொழில்நுட்ப பேச்சுப் போட்டி - 2026
Professor Kandia Kunaratnam Gold Medal for best oration in Science and Technology - 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மறைந்த பேராசிரியர் கந்தையா குணரட்ணத்தின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் முகமாக யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் பாடசாலை மாணவர்களுக்கிடையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிமூலமான சிறந்த பேச்சுக்கான தங்கப்பதக்கங்களை வழங்கவுள்ளது
இப்போட்டிக்கான நிபந்தனைகள்
· பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தரம் 10 - 13 ல் கல்விகற்க வேண்டும்.
· ஒரு பாடசாலையிலிருந்து தமிழ் மொழிமூலத்திற்கு ஒருவரும் ஆங்கிலமொழிமூலத்திற்கு ஒருவரும் பங்குபற்றலாம்.
· பேச்சுத் திறமையுடன் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் தகவல்களும் கருத்தில் கொள்ளப்படும்.
· முதல்சுற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 14.02.2026 அன்று நடைபெறும்.
· முதல்சுற்றுக்காக தரப்படும் அனைத்துத் தலைப்புக்களிலும் மாணவர் தங்களைத் தயார்செய்து வைத்திருத்தல் வேண்டும்.
· தலைப்புக்கள் 07.02.2026 ல் பதிவு செய்பவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
· இச்சுற்றில் நடுவர்களினால் கேட்கப்படும் தலைப்பில் 8 நிமிடம் பேச வேண்டும்.
· முதல்சுற்றில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிமூலத்தில் தனித்தனியே தெரிவுசெய்யப்படும் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் பங்கேற்பார்கள்.
· இறுதிச்சுற்றில் தலைப்பு உடனடியாக வழங்கப்பட்டு தயார் படுத்துவதற்கு 30 நிமிடங்களும் பேசுவதற்காக 10 நிமிடங்களும் வழங்கப்படும்.
· இறுதிச்சுற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 28.02.2026 அன்று நடைபெறும்.
· விண்ணப்பப் படிவங்கள் பாடசாலை அதிபர், பொறுப்பாசிரியரூடாக அனுப்புதல் வேண்டும்.
· விண்ணப்பப் படிவங்களை பின்வரும் இணைப்பினூடாக https://docs.google.com/forms/d/e/1FAIpQLSepkIayFPwmoMgIEW5YDKajiof5H26r7YyY6T877Uv0TLyuIQ/viewform அனுப்ப முடியும்.
· விண்ணப்ப முடிவு திகதி: 16.01.2026
தங்கப்பதக்கங்கள் விஞ்ஞான சங்கத்தால் நடாத்தப்படும் வருடாந்த அமர்வின்போது (May 2026) வழங்கப்படும்.
For more details:
Mrs. V. Jegapragash
General Secretary (2025/2026)
Jaffna Science Association
Email: thejsaorg.office@gmail.com
Mobile: 0776510099