கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: அக்டோபர் 3, 2026
நண்பன் AI செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், பின்வரும் விதிமுறைகளுக்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
1. சேவை விவரம்
நண்பன் AI என்பது ஒரு பிராந்திய AI உதவியாளர். இது மேம்பட்ட AI தொழில்நுட்பங்கள் (Google Gemini & OpenAI ChatGPT via Azure) மூலம் உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன், போன் வன்பொருள்களையும் (Flashlight [இலவசம்], Alarm/Timer/கட்டுப்பாடுகள் [பிரீமியம்/பவர்]) கட்டுப்படுத்தும்.
2. சந்தாக்கள் மற்றும் கம்ப்யூட் புள்ளிகள்
இந்தச் செயலி இலவச மற்றும் கட்டண அடிப்படையில் (Freemium) இயங்குகிறது.
இலவச பயன்பாடு: ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் 2,50,000 கம்ப்யூட் புள்ளிகள். விளம்பரங்கள் உண்டு.
மாதாந்திர பிரீமியம் (₹249): 7-நாள் இலவச சோதனை மற்றும் ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் 50,00,000 (50 லட்சம்) கம்ப்யூட் புள்ளிகள்.
வருடாந்திர பிரீமியம் (₹1,999): 30% தள்ளுபடி விலை. இதில் இலவச சோதனை கிடையாது.
நண்பன் பவர் (Elite Tier): மாதாந்திர பவர் (₹1,699) அல்லது வருடாந்திர பவர் (₹16,999). இதில் ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் 5,00,00,000 (5 கோடி) கம்ப்யூட் புள்ளிகள் (வாராந்திர வரம்பு 50 கோடி), திரைப்பட ஆக்க முறை (Nanban Filmmaker AI Video Mode), வெறித்தனம் முறை மற்றும் 2,500 பிரீமியம் வினாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
புதுப்பிப்பு: புள்ளிகள் ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகப் புதுப்பிக்கப்படும். "ஆழ்ந்த சிந்தனை" (Deep Think) போன்ற வசதிகளுக்குக் கூடுதல் புள்ளிகள் செலவாகும்.
வாராந்திர வரம்பு: இலவச பயனர்களுக்கு வாரம் 25 லட்சம் புள்ளிகளும், பிரீமியம் பயனர்களுக்கு 5 கோடி புள்ளிகளும், பவர் பயனர்களுக்கு 50 கோடி புள்ளிகளும் வழங்கப்படும்.
பணப் பரிவர்த்தனை: அனைத்தும் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாகவே நடைபெறும்.
3. AI புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் (AI Image & Video Generation)
உரிமை: நீங்கள் உருவாக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு நீங்களே உரிமையாளர்.
லோகோ (Watermark): உருவாக்கப்படும் அனைத்து படங்களிலும் வீடியோக்களிலும் 'நண்பன் AI' லோகோ இருக்கும். அதைத் தவறான நோக்கத்திற்காக நீக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.
4. தரவுப் பாதுகாப்பு (Privacy)
திரை பகுப்பாய்வு (Screen Context): நீங்கள் நண்பனை அழைக்கும்போது மட்டும் திரையில் உள்ள தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்படும். இவை எங்கும் சேமிக்கப்படுவதில்லை.
உள்ளூர் சேமிப்பு: உங்கள் அரட்டை வரலாறு உங்கள் போனில் மட்டுமே இருக்கும். எங்களிடம் கிளவுட் பேக்கப் (Cloud Backup) கிடையாது. ஆப்-ஐ டெலீட் செய்தால் அரட்டை வரலாறு அழிந்துவிடும். ஆனால், உங்களின் பதிவு செய்யப்பட்ட கணக்கு மற்றும் கிளவுட் தரவுகளை (Cloud Data) முழுமையாக அழிக்க, செயலியின் செட்டிங்ஸில் உள்ள 'கணக்கை நிரந்தரமாக நீக்கு' (Permanently Delete Account) என்ற வசதியைப் பயன்படுத்த வேண்டும்.
நேரடிப் பார்வை மற்றும் குரல் (Nanban Eyes): Nanban Eyes நேரலை உரையாடலில் பயன்படும் கேமரா மற்றும் மைக் தகவல்கள் நிகழ்நேரத்தில் மட்டுமே கையாளப்பட்டு உடனுக்குடன் அழிக்கப்படும்; எங்கும் சேமிக்கப்படாது. நேரலை உரைகள் உங்கள் தேர்வு செய்த மொழிக்கு ஏற்ப (தமிழ்/ஆங்கிலம்) தூய்மைப்படுத்தப்படும். மேலும், திரைப்பட இயக்குனர் முறையில் (Filmmaker Mode) உருவாகும் நேரலை உரைகள் அரட்டை வரலாற்றில் சேமிக்கப்படாது.
கோப்புகள்: நீங்கள் பதிவேற்றும் PDF அல்லது படங்கள் தற்காலிகமாக மட்டுமே பகுப்பாய்வு செய்யப்படும்.
5. பொறுப்புத் துறப்பு
தகவல் துல்லியம்: AI சில நேரங்களில் தவறான தகவல்களைத் தரலாம். இலவச பயன்பாட்டில் 2025-க்கு முந்தைய தகவல்களே இருக்கும்; 2026-ன் நேரடித் தகவல்களுக்கும் கூகுள் தேடலுக்கும் பிரீமியம்/பவர் மேம்படுத்தல் அவசியம். இது பொழுதுபோக்கிற்காக மட்டுமே.
ஆலோசனை அல்ல: மருத்துவ, நிதி அல்லது சட்ட ஆலோசனைகளுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்த வேண்டாம்.
மூன்றாம் தரப்பு சேவைகள்: வானிலை (OpenWeather), இடங்கள் (Google Places), கூகுள் புகைப்படத் தேடல் மற்றும் யூடியூப் (YouTube) தகவல்கள் மூன்றாம் தரப்பு சேவைகளைச் சார்ந்தவை; அவற்றின் துல்லியத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல. செயலியின் வழியே யூடியூப் சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், யூடியூப்பின் அதிகாரப்பூர்வ விதிமுறைகளுக்கும் (YouTube Terms of Service) நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
6. அனுமதிக்கப்பட்ட பயன்பாடு
AI-யைத் தவறாகப் பயன்படுத்துவது, வன்முறையைத் தூண்டும் படங்களை உருவாக்குவது அல்லது ஹேக்கிங் செய்ய முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கணக்கு முடக்கப்படும். 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
7. சட்ட நடைமுறை
இந்த விதிமுறைகள் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டவை. சட்ட சிக்கல்கள் எழுந்தால், அவை சென்னை, தமிழ்நாடு நீதிமன்றங்களுக்கு உட்பட்டவை.
8. தொடர்பு
kesharan88@gmail.com