1. வாழைச்சேனை - வரலாற்றுத் தகவல் (click here)
2. பிரதான முஸ்லிம் குடும்பங்களும் குடியேற்றமும்
பிரதான முஸ்லிம் குடும்பங்களும் குடியேற்றமும்
தற்போது குறிக்கப்பட்டுள்ள கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் தொன்மையாகவே முஸ்லிம்கள் வாழ்ந்த போதும் சுமார் 350 - 400 வருடங்களுக்குள்ளாகவே ஏனைய பிரதேசங்களிலிருந்து குடிபெயர்ந்து இப்பிரதேசங்களை நோக்கி நகர;ந்து வந்துள்ளனர் என்ற குறிப்புக்கள் கிடைக்கப் பெறுகின்றன. இதனை இன்று இப்பிரதேச மக்களிடத்தில் காணப்படும் குடும்பப் பெயர் கொண்டே காணக்கூடியதாகவுள்ளது.
அக்குறாணையார் குடும்பம்
அக்குறாணையார் குடும்பம் (சந்தியாற்றார் குடி) இவர்கள் அக்குரணையிலிருந்து கண்டி மன்னனால் இங்கு அனுப்பப்பட்டவர்கள். இவர்களது வருகை தொடர்பாக ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகின்றது.
நாவுல ஊடாக பிபிலை, கரவாகு பிரதேசங்களுக்கு பிரயாணம் செய்த கண்டிய வியாபாரக் கும்பலை இடைமறித்துத் கொலை, கொள்ளையில் ஈடுபட்ட சங்கரன் தலைமையிலான சுதேச வேடுவர் கொள்ளைக் கும்பலை அடக்குவதற்கு கண்டி மன்னன் மகுலியார் பிள்ளை விதானையின் மகன் முதலிப்பிள்ளை விதானை தலைமையில் ஒரு குழுவினரை அனுப்பிவைத்தான்.
இவர்கள் (சந்தியாற்றைக் கடந்து) அக்குறாணை எனும் பிரதேசத்தை அடைந்து கொள்ளைக் கும்பலை ஒழித்துத் அங்கேயே ஒரு குடியிருப்பையும் ஏற்படுத்தினர்.
கண்டி மாவட்டட் முஸ்லிம்கள் வரலாற்று நூல் குறிப்பிடுவது போன்று அக்குறாணையில் பலம் வாய்ந்த முஸ்லிம் படையணி கண்டிய அரசனால் குடியமர்த்தப்பட்டிருந்தது. எனவே இவர்களே இக்கலகக்காரர்களை அடக்க பொருத்தமானவர்கள் என கண்டிய அரசன் கருதியிருக்கக்கூடும். அக்குரணையைச் சேர்ந்தவர்கள் அக்குறாணையில் குடியமர்ந்;ததால் ஆரம்பத்தில் சின்ன அக்குறணை என்ற பெயரே சின்ன அக்குறாணை என மருவலாயிற்று.
பின்னர் இவர்கள் புணாணை, ஊர்முனைத்திடல் (தற்போதைய வாகனேரிக் குளப்பகுதி) போன்ற நீர்நிலைகளை நோக்கி நகரலாயினர். வனவிலங்குகளின் தொல்லையும், துறைமுக வசதியும் ஓட்டமாவடி துறை (தற்போதைய காகித நகர்ப் பகுதி)யை நோக்கி நகரச் செய்தது.
மீண்டும் அவர்கள் மாதுறு ஓயா கிளையாற்றைக் கடந்து வௌ;ளமாவடி துறையூடாக ஓடக்கரை (பதுறியா-மாஞ்சோலை-மீராவோடை), ஓட்டமாவடி பிரதேசங்களில் குடியேறியுள்ளனர்.
கொட்டியாரக் குடும்பம்
கல்குடாத் துறைக்கும் கொட்டியாரத் துறைக்கும் இடையேயான வர்த்தகத் தொடர்பு காரணமாக கொட்டியாரத்திலிருந்து முஸ்லிம்கள் கிண்ணியா ஊத்துப்பிட்டி வழியாக பனிச்சங்கேணி, காரமுனை பகுதிகளில் குடியேறி வாழ்ந்துள்ளனர். இத்தொடர்பை உறுதிப்படுத்துவதாகவே “மட்டக்களப்பு மான்மியம்” பாசிக்குடாவில் இருந்து ஏழு துறைதாண்டி கொட்டியாரம் சென்றதாக குறிப்பிடுகின்றது.
பனிச்சங்கேணியில் உள்ள “அவக்கர் குடா” “மீரானாத் தீவு” “ஆலிமுட ஊத்து” போன்ற இன்றும் கூட முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் உறுதிப் பத்திரங்களுடன் காணப்படுகின்றது.
காரமுனைப் பிரதேசத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முஸ்லிம்கள் குடியேறி வாழ்ந்துள்ளனர் என அறியக்கிடைக்கின்றது.
அண்மைக்காலம் வரையாக முஸ்லிம்கள் காரமுனை பள்ளிவாயலின் “ஸியாரத்தை” சுற்றியுள்ள காணியைத் துப்பரவு பண்ணி அதனை “கபுரடி வரவைகள்” என பெயர் சூட்டியழைத்தனர். இக்காணி மூலம் வரும் விளைச்சலை ‘கந்தூரி’ செலவுக்காக பயன்படுத்தினர்.
இங்கு காணப்படும் “ஸியாரம்” தொடர்பாக ஓர் ஆய்வு நிகழ்வு தொடர்புபடுகின்றது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஆய்வாளர் சஹாப்தீன் என்பவர் ஒரு வரலாற்று ஆய்வு தொடர்பாக இங்கு வந்தார்.
தமது மூதாதையர்கள் தொடர்பாக தமக்குக் கிடைத்த குறிப்பேட்டின் படி 300 ஆண்டுகளுக்கு முன் இலங்கை வந்த இஸ்லாமியப் போதகர்களில் இருவர் இலங்கையில் தங்கியதாகவும் அவர்களில் ஒருவர் “மட்டக்கொழும்பு” (மட்டக்களப்பு பழைய பெயர்) பகுதிக்கு வந்து மேற்குப் பகுதியை நோக்கிப் பயணித்ததாகவும் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன என்று கூறி கல்குடா கோறளையில் காணப்படும் அனைத்துத் ”ஸியார”ங்களையும் ஆராய்ந்த பின்னர், காரமுனைக்குச் சென்று அங்கு காணப்படும் ஸியாரங்களையும் அதனருகில் காணப்படும் நான்கு புளியமரங்களையும் ஆராய்ந்தார். அத்தோடு, இம்மரங்கள் சுமார் 250 - 300 வருடங்களுக்குட்பட்ட மரம் இது சிறு தடிகளாக நான்கு தூண்களுக்கு பதிலாக நாட்டப்பட்டுள்ளது. எனவே போதகர் தமது அந்திம வயதில் குடிசை செய்து நிரந்தரமாக தமது இருப்பிடத்தை அமைத்திருக்க வேண்டும். இந்நிலையில் அவருக்கு ஐம்பது வயதிலேயே அவர் நிரந்தர இருப்பிடத்தை அமைத்திருப்பார். எனவே இவை சுமார் 300 ஆண்டுகள் பழைமையைக் காட்டுகின்றது. எனவே எமது குறிப்பேட்டில் குறிப்பிட்டவர். இந்த மேலதிக ஆவணங்கள் இவர் சந்தித்து தகவல் பரிமாறிய மர்ஹூம் வை. அஹமத்திடத்தில் காணப்பட்டது. அவை பயங்கரவாதிகளால் வை. அஹமத (மாவட்ட் மேலதிக அரசாங்க அதிபர்) கொலை செய்யப்பட்டபோது அபகரித்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதே போன்று குப்பிளாவாடி, பனையடி முறிவு, குராத்தையடி உட்பட பல பிரதேசங்களிலும் கொட்டியாரத்திலிருந்து வந்தவர்கள் சேர்ந்து குடியிருப்புக்களை அமைத்தனர்.
சீக்கிரியாவருட்டுத் தத்தி
“சீக்கிரியாவருட்டுத் தத்தி” எனும் பேச்சுச் வழக்கு சீக்கிரிய குடும்பம் எனும் கருத்தைக் குறிக்கும். அதாவது நோச்சல் போடியார் என்பவர் தலைமையில் சீக்கிரியாவிலிருந்து ஓட்டமாவடி துறையூடாக இங்கு வந்து குடியேறியுள்ளனர். இவரே மீராவோடை ஜூம்ஆப் பள்ளிவாயல், ஓட்டமாவடி பள்ளிவாயல் ஆகியவற்றுக்கு தலா 18 ஏக்கர் காணி வழங்கியதாக குறிப்புகள் கிடைக்கின்றன.
இவை முஸ்லிம்கள் சீக்கிரியாவுடன் கொண்ருந்த தொடர்பைக் காட்டுகின்றது. இதனால்தான் ‘கந்தோர் வெளி’ (கதுரு வெல தற்போதைய மருவல்) என முஸ்லிம்கள் கதுருவெலயை அழைக்கலாயினர். ஏனெனில் அங்கு புராதன அரச அலுவலகம் (கந்தோர் ஒன்று இயந்கியதாலேயே இப்பெயர் பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது. இத்தொடர்பு காரணமாகவே புதூர் (பொலன்னறுவையில் உள்ளது) போன்ற இடங்களில் முஸ்லிம்கள் குடியேறலாயினர். இப்பரம்பரையினர் நெற் செய்கையில் சிறப்புற்றிருந்தனர். எனவேதான் நோச்சல் போடியார் என்பவருக்கு ‘பூமிபாலன்’ (பூமிபுத்ர) புகழ்நாமம் வௌ;ளையர்களால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பணிக்கர் குடும்பம்
பணிக்கர் என்போர் யானை கட்டி அதனை பயிற்றுவிப்போரைக் குறிக்கும். இவர்கள் கண்டியரசர்கள் காலத்தில் “ஹரிஸ்பத்து” கஹவத்தை பிரதேசத்தில் வசித்தனர். இவர்கள் மன்னார் மாவட்டட் முஸலிப் பிரதேசம், திருகோணமலை, இறக்காமம் ஆகிய பிரதேசங்களுடன் தொடர்புற்றிருந்ததோடு அப்பிரதேசங்களிலும் வசித்துவந்தனர் எனக் ”கண்டி மாவட்ட முஸ்லிம்கள் வரலாறு” எனும் நூல் குறிப்பிடுகின்றது. இந்த வகையில் இப்பிரதேசத்திலும் பன்னெடுங்காலமாக யானைகளைக் கொண்டு வந்து கட்டிவைத்து கண்டிய வியாபாரிகளுக்கு விற்றுப் பிழைப்பு நடத்திய பணிக்கர் குடும்பம் காணப்படுகின்றது.
வனவிலங்கு காப்புச் சட்டம் அமுலில் வரும் வரை இங்கு தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
இதை வைத்து நோக்கும் போது இறக்காமம், கண்டிப் பிரதேசங்களுடன் தொடர்புற்றிருந்ததால் இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என உறுதியாகக் கூறமுடியாதுள்ளது.
கரவாகுக் குடும்பம்
இவர்கள் கரவாகுக் குடும்பம் என்ற பேச்சுச் வழக்கினிலே அழைக்கப்படுகின்றனர். தற்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள கரவாகுப் பிரதேசமான சம்மாந்துறை, நிந்தவூர், சாய்ந்தமருது பிரதேசங்களிலிருந்து இடம் பெயர்ந்;து இப்பிரதேசத்தில் இருப்புக்களை அமைத்தவர்களே இப்பெயர் கொண்டு அழைக்கப்படலாயினர்.
இன்றும் பெருவெட்டை, தொப்பிக்கல் மலைச்சாரல், கழுதாவளை ஊடாக இவர்கள் பயணம் செய்த காட்டு வழிப்பாதைகள் காணப்படுகின்றன.
மீராவோடையில் ஜூம்ஆப் பிரசங்கம் நிகழ்த்திவிட்டு மாலைப் பொழுதில் குதிரை மூலம் நிந்தவூரை கதீப் வந்தடைந்ததாக சில வாய்மொழிக் கதைகள் குறிப்பிடுகின்றன. ஒகுது லெப்பை எனும் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்த மார்க்கப் பெரியார் மருதமுனையைச் சார்ந்தவர் என்பது இத்தொடர்பை மேலும் வலுப்படுத்துகிறது.
குளத்துப் போடியார் குடும்பம்
ஊர்முனைத்திடலில் வசித்த சுதேச வேடுவர்களில் (வாகனேரிக் குளம்) இஸ்லாத்தை தழுவி பின்னர் பள்ளத்திட்டி (பழைய ஹிஜ்ரா நகர் - தற்பொழுது பதுறியா நகர்) யை வந்தடைந்தவர்கள்.
இவர்கள் இஸ்லாத்தை ஏற்றதற்கு இந்தியாவில் இருந்து இப்பகுதிக்கு வந்து மார்க்கப் பிரச்சாரம் செய்த இஸ்லாமியப் பெரியார்களே காரணமாகும். இவர்கள் பற்றி ஒரு தகவலும் குறிப்பிடப்படுகின்றது.
இந்தியாவிலிருந்து சன்மார்க்கப் போதனைக்காக ஏழுபேர் கொண்ட குழு புணாணை, குடியிருப்பட்டை, வாகனேரி, மக்குழடி, குப்பளாந்தவணை, காரையடிப்பட்டி , உச்சோடக்கல் போன்ற இடங்களில் சென்று போதனை புரிந்தனர;. அவர்கள் மரணித்த பகுதிகளிலேயே அடக்கம் செய்யப்பட்டு ஷியாரம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகள் நீர் நிலைகள் அண்டிய பகுதியாகவுள்ளதால் குடியிருப்புக்களும் இப்பகுதிகளில் அமைக்கப்பட்டன.
காட்டு விதானையார் குடும்பம்
மஹ்மூத் லெவ்வை விதானை என்பவரின் குடும்பத்தைக் குறிக்கின்றது. இவர் வாகனேரிக் கண்ட மேற்பார்வையாளராக கடமைபுரிந்தார். இதனால் காட்டு விதானை என அழைக்கப்பட்டார். இவர் இப்பதவியை பெற ஒரு வரலாற்று நிகழ்வு காரணமாகியது. பிரிட்டிஸாரின் ஆட்சிக் காலப்பகுதியில் மட்டக்களப்பு ஆளுனராகவிருந்த ‘பிறைன்’ துறை (டீசயin) என்பவர் தனது மனைவியுடன் வாகனேரிக் குளத்திற்கு சென்றிருந்தார். தற்செயலாக இவரது மனைவி குளத்தில் வீழ்ந்து முழ்கலானார். அவ்விடத்தில் இருந்த மஹ்மூத் லெவ்வை குளத்தில் குதித்துத் ‘பிறைனின்’ மனைவியை காப்பாற்றினார். இதற்கு நன்றி செலுத்தும் முகமாக ‘பிறைன்’ மஹ்மூத் லெவ்வைக்கு வன்னியன் (தற்போதைய னுசுழு பதவி) பதவியுடன் விதானைப் பதவியை பரம்பரைக்கு உரித்தானதாக எழுதிக் கொடுத்தார். பின்னர் இவர் சுகயீனமுற்றபோது ‘வன்னியன் பதவி’ ஓட்டமாவடியைச் சேர்ந்த மர்ஹூம் புஹாரி விதானையின் தந்தைக்கு கிடைக்கக் கூடியதாகவிருந்தது.
ஆனால் விதானைப் பதவி வழிவந்த பதவியாகையால் மஹ்மூத் லெவ்வையின் மகள் அவ்வா உம்மாவுக்கு ஓரிரு நாட்கள் வழங்கப்பட்டபின் இவரது சகோதரர் மகனுக்கு இப்பதவி வழங்கப்பட்டது. இதனால் இவர் கூட வெட்டுற ‘காட்டு விதானையார்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பின்னர் ஏற்பட்ட சில அரசியல் போட்டியும் காழ்ப்புணர்வுகளும் வேறு ஒரு பரம்பரையினருக்கு இப்பதவி சொந்தமானதாக மாறியமைந்தது.
ஓடாவிக்குடி
இவர்கள் காத்தான்குடியிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள். இவர்கள் தச்சு வேலை, கொத்தன் வேலைகளில் சிறப்புற்றிருந்தனர். குண்டர் குடியோடு ஏற்பட்ட உறவுக் கலப்புக் காரணமாக வர்த்தகத்திலும் சிறப்புற்றிருந்தனர். “கல்லப்பா” என்பவரே இக்குடியின் ஸ்தாபகத் தலைமையாக கருதப்படுகின்றார். ஏனெனில் இவர் செங்கற்களைக் கொண்டே வாழைச்சேனையில் ‘போக்கு’ (நீரோட்டக் குழாய்) கட்டியுள்ளமை இவர்களது கட்டிடத் திறமையை வலுப்படுத்துத் கின்றது.
இவர்களது ‘சாவன்னா’ பரம்பரையினரே கிரான் குடியில் (தற்போதைய கிரான்) சேரடி முனை என்ற பகுதியில் குடியிருப்பை அமைத்திருந்தனர். இங்கு 1899 பங்குனி 7ம் திகதி முகம்மதியா பாடசாலை 19 பேருடன் இயங்கி வந்துள்ளதற்கான பதிவுகள் கிடைக்கின்றன. நில அளவையாளர் படத்தின் 3501ம் இலக்க 1892 தை 27ல் 29 ஏக்கர் நிலத்தில் பாடசாலை இயங்கியதாக உறுதிப்படுத்துகின்றது.
இவ்வாறு பல இடப் பெயர்களும் அதனோடு தொடர்பான புதூர்ப் போடியார், சின்னப்போடியார், பெரியபோடியார் போன்ற குடிப் பெயர்களும் இப்பிரதேசத்தில் இன்றுவரை நிலவி வருவதனைக் காணமுடிகின்றது.
ஓட்டமாவடி
ஓட்டமாவடி என்பது ஓட்டை மாவடியின் மருவலாகவே குறிக்கப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் அக்குறாணையில் குடியேறியவர்கள் மீண்டும் ஊர்முனைத்திடலை நோக்கி நகரலாயினர். இவர்களுடன் கொட்டியாரக் குடும்பங்களும் இணைந்து கொண்டனர். வனவிலங்குகளின் தொல்லை, போக்குவரத்து வசதி, வர்த்தகத் தொடர்பு போன்ற காரணங்களை இட்டு மெது மெதுவாக முஸ்லிம்கள் மக்குழடி, கும்பிளாந்தவணை, சாராவெளி, சூடுபத்தினசேனை வாயிலாக ஓட்டமாவடித் துறையை அண்மித்துத் வாழ்ந்தனர்.
இக்காலப்பகுதியில் வாழைச்சேனைத் துறையூடாக மாதுறு ஓயா கிளையாற்றின் ஊடே ஓட்டமாவடித் துறைக்கு வர்த்தகர்கள் தெப்பம் மூலம் வந்து பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் பல்வேறு பௌதீக காரணிகளின் காரணமாக ஆற்றைக் கடந்து வௌ;ளை மாவடித் துறையை (தற்போதைய ஓட்டமாவடி புளியடித்துறை) அடைந்து ஓட்டமாவடிப் பிரதேசத்தில் பரவி வாழ்ந்தனர். இதன் பின்னர் இத்துறை பிரபல்யமும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்தது.
எனவேதான் வௌ;ளை மாவடித் துறையில் பொருட்கள் கொண்டுவரல், கொண்டு செல்லலை கண்காணிக்க ஒரு சோதனைச் சாவடியும் நிறுவப்பட்டிருந்தது. அ. தம்பி சாய்வு என்பவர் பொறுப்பதிகாரிகளில் ஒருவராக கடமைபுரிந்துள்ளமையை அதற்கான ஆவணம் உறுதிப்படுத்துகின்றது. இவர் குப்புலாவாடி (குப்புளாக் கொடி) கற்பட்டி (வாகனேரி) கல்மடு (வாகனேரி) பனையடி முறிவு போன்ற பிரதேசங்களில் பரம்பரை ரீதியிலான நிலங்களை சொந்தமாக கொண்டிருந்ததனாலும் எழுத வாசிக்கத் தெரிந்தவர் என்பதனாலும் இப்பதவி வழங்கப்பட்டிருந்தது.
வௌ;ளை மாவடித் துறையையும் அதனை அண்டிய பகுதியையும் பிற்காலத்தில், ஓட்டமாவடி என மருவி அழைக்கலாயினர். வௌ;ளைமாவடித் துறையூடாகவே மலை நாட்டுக்கான போக்குவரத்துத் அமைந்திருந்ததனால் பொருட்கள் தரப்படுத்தும் இளைப்பாறு தளமாகவும் இப்பிரதேசம் அமைந்திருந்தது. இத்தொடர்பின் காரணமாக அக்குறாணையார் பரம்பரை, சீக்கிரிய நோச்சல் போடி பரம்பரை, கொட்டியாரப் பரம்பரை முதலியவற்றின் தொடர்பு இங்கு காணப்படுகின்றது.
அத்தோடு காத்தான்குடி வர்த்தக சமூகம் இப்பகுதியில் குடியமரலாயினர். இதே போன்று விதானைக் கண்டுப் போடியின் குடும்பங்களும் இங்கு தொன்மையான குடிகளில் ஒன்றாக திகழ்கின்றது. காத்தான்குடியைச் சேர்ந்த ”லங்கட” போடியார் குடும்பம், ஒகுது லெவ்வைப் பரம்பரை ஓட்டமாவடிப் பிரதேசத்தை சிந்தனைக் கலப்பற்ற தனியான பிரதேசமாகத் திகழ வழி அமைத்தது என்பது மறுப்பதற்கில்லை.
இப்பிரதேசத்தில் இஸ்மாயில் போடியாரின் தந்தைக்கு ”பூமி புத்ர” என்ற பட்டம் கண்டிய மன்னனால் வழங்கப்பட்டது இது சிறப்பாக நெற்செய்கையில் ஈடுபடுவோருக்கே வழங்கப்பட்ட பட்டமாகும். இதிலிருந்து பன்னெடுங்காலமாகவே முஸ்லிம்கள் ஓட்டமாவடிப் பிரதேசத்துக்கு வெளியே வசித்துத் வந்துள்ளனர் என்பதை நிரூபிப்பதாகவுள்ளது. இதே போன்று அ. தம்பி சாய்வு என்பவர் விட்டுச் சென்ற கிரேக்க நாணயமும் இப்பிரதேச மக்களின் தொன்மையையும், வர்த்தகத் தொடர்பையும் கோடிட்டுச் செல்கின்றன.
4. மீராவோடை குடியேற்றம்
மீராவோடை
மீராவோடைப் பிரதேசம் உருவாக முன்னரே பிரபல்யம் மிக்க தொன்மை நகரமாக பள்ளத்திட்டி - ஹிஜ்ரா நகர் (தற்போதைய பதுறியா நகர்) திகழ்ந்தது.
இப்பிரதேசத்தின் ஆரம்பக்குடிகளில் முக்கியமானவர்களாக குளத்துப் போடியார் குடும்பம், அக்குறாணையார் குடும்பம், முதலிப்பிள்ளையார் குடும்பம் போன்றன காணப்படுகின்றன.
பின்னர் ஓடையைக் கடந்து தற்போதைய மீராவோடை எனும் பகுதியில் குடியேறியுள்ளனர். இதற்கு ஆதாரமாக ஹிஜ்ரா நகரின் ஜூம்ஆப் பள்ளிவாயல் இடிபாடுகளும் கபுறடி வளவும் அண்மைக் காலம் வரை குடியிருப்பாரற்ற பிரதேசமாகவே இருந்துள்ளன.
அத்தோடு நூறு வருடங்களுக்கு முற்பட்ட அழகிய வேலைப்பாடு கொண்ட கல்வீடுகளும் இந்நகரின் புராதனத்தை விளக்கி நிற்கின்றன. மாதுரு ஓயா ஆற்றில் நீர்ப் பெருக்கு ஏற்படும்போது ”முறாக்கு மீன்கள்” ஓடையை நோக்கி வந்ததால் அவை ”முறாக்கு ஓடை” எனக் கூறப்பட்டு மீராவோடையாக மருவியதாக குறிப்பிடப்படுகின்றது.
ஆரம்ப காலங்களில் இவ்வோடை பாரிய ஆழம் கொண்டதாகக் காணப்பட்டது. ஓடையைக் கடப்பதற்கு பெரிய மரங்களை வெட்டி ஓடைக்கு குறுக்கேயிட்டு கடந்து சென்றுள்ளனர்.
தற்போதைய மீராவோடைப் பகுதியில் மேலும் பல குடிகள் இடப் பெயர்வைர் மேற்கொண்டு வந்தமர்ந்துள்ளனர். மீராலெவ்வை ஹாஜியார் குடும்பம் “பொண்டுவல்” சேனையில் இருந்து (இப்போது இந்த இடத்தில் கிறிஸ்துவ ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது) இங்கு வந்து குடியேறி வாழ்ந்துள்ளனர். அவரக் காடு மரைக்கார் குடும்பமும் பதுறியாவிலிருந்து இப்பகுதியில் இடம் பெயர்ந்து வாழ்ந்துள்ளனர். சின்னத்தம்பி போடியார் பரம்பரையும் செல்வாக்கு மிக்க குடும்பமாக திகழ்ந்ததோடு பரம்பரையாக அரச பதவிகளில் அமர்த்தப்பட்டனர். இவரது மகன் அலியார் போடியார் பொ.த (பொலிஸ் தலைவர் தற்போதைய விதானை பதவி) பதவி வகித்தார். இவரே முதலாவது மீராவோடைப் பகுதியின் விதானையாவார். இவர்களோடு இணைந்ததாக பரம்பரையாக தாமே பாடல்களை இயற்றிப் பாடுவதும் கோலாட்டம் முதலான பாரம்பரிய கலை அம்சங்களை பயிற்றுவித்தும் அண்ணாவியார் பரம்பரை காணப்பட்டது.
கொட்டியாரத்தோடு இப்பிரதேச மக்களும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை காணக்கிடைக்கின்றது. கொட்டியாரத்து ஆலிமு என்பவர் இப்பிரதேச மக்களின் மார்க்க விடயங்களில் கூடியளவு வழிகாட்டியாக திகழ்ந்துள்ளமையிலிருந்து இது தெளிவாகின்றது. இவற்றோடு பிறைந்துறைச்சேனை, காவத்தமுனை, மாஞ்சோலை போன்ற குடியிருப்புக்கள் பாரம்பரிய முஸ்லிம் காணிகளாகவிருந்த சேனை தோட்டப் பகுதிகளில் 1900களுக்கு பின்னரே குடியமர்த்தப்பட்டனர்.