Cultural Events
கலாசார நிகழ்வுகளின் பதிவு
கலாசார நிகழ்வுகளின் பதிவு
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட நூல்கள் மட்/மம/ ஓட்டமாவடி ஸாஹிறா வித்தியாலயம மட்/மம/ ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலை நூலகஙகளுக்கு இன்று 17.10.2022 வழங்கப்பட்டன.
கலாசார உத்தியோகத்தர் SAM நளீம், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி றபீக்கா அபுதாஹிர் ஆகியோர் நூல்களை வழங்கிவைத்தனர்.
இன்று 16.10.2022 மிக சிறப்பாக நடந்தேறிய கலை மன்றங்களின் இணைவு நிகழ்வு. இங்கு புத்தொளி செயற்பாட்டுக் குழுமத்தின் ஏற்பாட்டில் விண் ஒளி கலை மன்றம், ஹம்சத்வனி கலை மன்றம், பேத்தாழை விபுலானந்தா கலை இலக்கிய மன்றம், Fine Art கலை மன்றம், அஸ்ஸலாம் கலை மன்றம், மனிதம் பண்பாட்டுக் கலை மன்றம், அல் இக்ராஹ் கலை மன்றம், Vidiyal Lanka Art Club, Human for Hope Forum, யுனைடட் லங்கா கலை மன்றம் ஆகிய கலை மன்றங்களின் தலைவர், செயலாளர் உட்பட 22 அங்கத்தவர்கள் பங்கு பற்றியதுடன் ஒவ்வொருவரினதும் ஆற்றல்கள் திறமைகள் தொடர்பாகவும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் காத்திரமான கலந்துரையாடல்கள் சினேகபூர்வமாக இடம்பெற்றது.
கலாசார உத்தியோகத்தர்களான எம்.எச்.எம்.நியாஸ் அவர்களும் ஏ.எல்.பீர் முஹம்மது அவர்களும் வருகை தந்து ஆக்க பூர்வமான ஆலோசனைகளை வழங்கியமைக்காக அவர்களுக்கும் நன்றிகளைக் கூறிக் கொள்கின்றோம்.
கலை மன்றங்களுடனான சந்திப்பு 13.09.2022
நிகழ்வு தொடர்பான செய்திகளைப் பார்வையிட கீழுள்ள இணைப்புகளை கிளிக் செய்யவும் :
பிரதேச கலாசார விழா 2021, வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையினரின் பங்குபற்றுதலுடன், கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச செயலாளர் V தவராஜா அவர்களது தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு சரவணமுத்து நவநீதன்அவர்களும் கௌரவ அதிதிகளாக பிரதேச கலைஞர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்கீர்பைத் கலைஞரின் பாடலும் அரங்கேற்றப்பட்டதுடன் தேசிய கலையிலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
பிரதேச கலாசார விழா 2021
https://www.eastmirror.lk/2021/01/blog-post_19.html
பிரதேச கலாசார விழா 2020, கொவிட்-19 அச்சுறுத்தலின் காரணமாக வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையினரின் பங்குபற்றுதலுடன், கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், உதவிப் பிரதேச செயலாளர் AC அஹ்மட் அப்கர் அவர்களது தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் V. தவராஜா அவர்களும் கௌரவ அதிதிகளாக எழுத்தாளர் SLM ஹனிபா, ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் AUM அப்துல் காதர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் S. ஜெயசேகர், மேலதிக மாவட்டப் பதிவாளர் MI. மாஜிதீன், தலைமையக சமூர்த்தி முகாமையாளர் MIA. அஸீஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் தேசிய கலையிலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
கலைஞர் சல்மான் A வஹாப் அவர்கள் பாடி வெளியிட்டுவைத்த இறுவட்டொன்றும் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயததில் பிதேச செயலக கலாசாரப் பிரிவினால் நடத்தப்பட்ட அரபு எழுத்தணிப் பயிற்சிப் பட்டறையின் சில காட்சிகள்
கொரோ வைரஸ் பரவலின் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் வருமானமின்றி பாதிக்கப்பட்டிருந்த பிரதேச கலைஞர்களில் சிலருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.