நான் புதுக்கோட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் ப. வடிவேலன் எழுதுகிறேன். தற்போதைய அரசு உயர் அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் துறை கல்லூரி விரிவுரையாளர்கள், முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் ,இளநிலை உதவியாளர்கள், அலுவலக வரவேற்பாளர்கள், அலுவலக உதவியாளர்கள், சொந்த வியாபாரம் செய்பவர்கள், இன்னும் பிற அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள் மற்றும் வேலைக்காக முயற்சி செய்துகொண்டிருப்பவர்கள் என்று பல பிரிவுகளில் உயர்ந்திருக்கும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நம் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்காகவும் பள்ளி சார்ந்த வளர்ச்சிக்காகவும் உங்கள் அனைவரையும் பள்ளியுடன் இணைந்து செயலாற்ற அன்புடன் அழைக்கிறேன். ஒவ்வொரு அரசு பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளிகளிலும் பல சவால்களை எதிர்கொண்டு மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறர்கள் அதேபோல புதுக்கோட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியிலும் பல சவால்களை எதிர்கொண்டுதான் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது போன்ற சவாலான செயல்பாடுகளுக்கும், பள்ளி சார்ந்த, மாணவர்கள் சார்ந்த, மாணவர்கள் திறன் சார்ந்த, வளர்ச்சிக்கும் உங்களுடைய ஒத்துழைப்பு பள்ளி நிர்வாகத்திற்கு தேவைப்படுகிறது ஆகையால், புதுக்கோட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியுடன் இணைந்து செயலாற்ற முன்னாள் மாணவர்களாகிய உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
மாணவர்கள் சேர்க்கைக்காக பார்வைத் திறன் குறைபாடு உடைய மாணவர்களை நேரில் சந்திக்க செல்வதும், அவர்களின் குடும்பத்துடன் பேசுவதும், பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதை தெரிவிப்பதும் ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டிருக்கிறது இந்த தொடர் நடவடிக்கைகளில் பார்வைத் திறன் குறைபாடு உடைய மாணவர்களின் பெற்றோர்களுக்கு நம் பள்ளியில் சேர்க்க பள்ளி பணியாளர்கள் தொலைபேசியின் மூலம் அழைப்பு விடுக்கும் பொழுது எதிரிகளாகவும், மாணவர்கள் சேர்க்கைக்காக பெற்றோர்களை நேரில் சந்திக்க செல்லும் பொழுது பிள்ளை பிடிக்க வந்துள்ளவர்கள் என்றும், மாணவர்கள் பெற்றோர்கள் மனதில் பள்ளி பணியாளர்கள் பலவாறு காட்சியளிக்கிறார்கள், நன்றாக பேசி சலுகைகளையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து பார்வையற்றோர் பள்ளியில் உங்கள் பிள்ளைகளை சேருங்கள் என்று சொல்லும்போது தனக்கு இப்படி பிள்ளை பிறந்துடுச்சே என்று சோகக்கடலின் மூழ்குகிறார்கள். எப்படி முயற்சித்தாலும் 80 சதவீதம் பெற்றோர்கள் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் சேர்க்க மறுக்கிறார்கள். இதுபோன்ற பெற்றோர்கள் மனதில் இப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டவோ, நம்பிக்கையை விதைக்கவோ உங்களைப்போன்ற முன்னாள் மாணவர்களால் முடியும் என்று நம்புகிறேன்.
பார்வைத் திறன் குறைபாடு உடைய மாணவர்களின் பெற்றோர்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த என் குரல் என்ற திட்டத்தின் கீழ் புகழ்பெற்ற பொது மக்களிடம் சிறப்பு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற வாசகங்களை அடக்கிய வீடியோக்களை பெற்று நம் பள்ளி சமூக வலைதளங்களில் அப்லோட் செய்து வருகிறோம் இந்த என் குரல் திட்டத்தில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து செயல்பட்டால், பார்வைக்குறைபாடு உடையவர்கள் சமூகத்தில் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் இந்த பள்ளியில் படித்தால் அவர்களில் பிள்ளைகளுக்கு வளர்ச்சி இருக்கும் வேலை வாய்ப்பு பெறவும் வாய்ப்பு இருக்கும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும் இதனால் பள்ளியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு பெற்று உயர்ந்திருக்கும் முன்னாள் மாணவர்கள் பார்வை குறைபாடு உடைய மாணவர்கள் இவர்களுக்காக இருக்கும் இந்த சிறப்பு பள்ளியில் சேர்ந்து கல்வி கற்பதினால் ஏற்படும் நன்மைகளையும், மாணவர்களின் வளர்ச்சிகளையும் எதிர்கால வேலை வாய்ப்பு பற்றியும் ஒரு நிமிடத்திற்குள்ளான வீடியோவாக தயார் செய்து எங்களுக்கு வழங்கினால் இதை YouTube-யில் அப்லோட் செய்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவதோடு, பார்வைத் திறன் குறைபாடு உடைய மாணவர்களின் பெற்றோர்களுக்கு நேரடியாக அனுப்பும் பொழுது அவர்களின் மனம் இலகுவாக மாற வாய்ப்பு இருக்கிறது இந்த மாற்றம் சிறப்பு பள்ளியின் மாணவர்கள் சேர்க்கையையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது ஆகையால், இந்த நடவடிக்கையை இந்த பள்ளி நிர்வாகம் எடுத்து செயல்படுத்தி வருகிறது.
இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள Alumni Registration Form ஒன்று உருவாக்கி உள்ளேன் இந்த படிவத்தை நீங்கள் நிரப்பி Submit செய்தால் உங்களுடைய தொடர்புகளும் எங்கள் பள்ளிக்கு கிடைக்கும்.
இந்த படிவத்தில் தொட்டு உள் நுழையும் பொழுது முன்னாள் மாணவர் பதிவு படிவத்தில் உங்களால் அனைத்து காலங்களையும் பூர்த்தி செய்ய இயலும் என்றான் Advance Details என்பதை தேர்வு செய்யலாம். Basic Details மட்டும் பூர்த்தி செய்ய இயலும் என்றால் Basic Details என்பதை தேர்வு செய்யலாம் விடுபட்ட தகவல்களை உங்களை அழைத்து நிரப்பிக் கொள்கிறோம். இந்த படிவம் நிரப்புதல் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 9499933248, 9840272383 என்ற கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் பேராதரவை எதிர்பார்த்து காத்திருக்கும்
ப. வடிவேலன், தலைமை ஆசிரியர்