பார்வைதிறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை விடுதியிலேயே தங்கி படிக்கலாம். இந்த பள்ளியானது தமிழக அரசு முதலமைச்சர் அவர்களின் நேரடியான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு சிறப்பு பள்ளியாகும். 1975-76 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டு தொடர்ந்து பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கு மிக சிறப்பாக கல்வி வழங்கி வருகிறது. நம்பள்ளியில் படித்து இன்று பலர் அரசு துறைகளில் கல்லூரி பேராசிரியர்களாகவும், பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், ஆசிரியர்களாகவும், அரசு அலுவலர்களாகவும் இருக்கிறார்கள் மேலும் தனியார் துறைகளிலும் பணிபுரிகிறார்கள் என்பது நம் பள்ளிக்கு பெருமை,
சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பள்ளியில் பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கணினி மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு கணினி மூலமாகவே தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதனால் இவர்கள் கணினி சாந்த அறிவை பெறுகிறார்கள். தொடு உணர்வுடன் கூடிய பிரெய்லி எழுத்துக்கள் மற்றும் இம்மாணவர்களுக்கு ஏற்ற உபகரணங்கள் கொண்டு சிறப்பாக கவ்வி கற்றுத்தரப்படுகிறது.
இம்மாணவர்களுக்கென்றே உள்ள கிரிக்கெட், வாலிபால், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக கல்வி சுற்றுலா, ஆண்டுக்கு ஒருமுறை கவ்வி உதவித்தொகையாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூபாய் 2000, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ரூபாய் 6000 வழங்கப்பட்டு வருகிறது.
பிரெய்லி பாட புத்தகங்கள், சீருடைகள், கணித உபகரணங்கள், தங்கி படிக்க சத்தான உணவுடன் கூடிய விடுதி வசதிகள் அனைத்தும் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது. மாணவர்களின் நலன் பாதுகாக்க துணை விடுதிக்காப்பாளர், ஆயா, சமைலர் மற்றும் இரவு காவலர் போன்றோர் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள்.
பள்ளியில் படிக்கும் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு SSA செல்வமகள் திட்டம் என்ற அஞ்சலக சிறுசேமிப்பு கணக்கும், மற்ற வயது மாணவர்களுக்கு PPF பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்ற அஞ்சலக சிறுசேமிப்பு கணக்கும் தொடங்கி மாணவர்களின் எதிர்கால நிதி தேவைக்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அணைத்து பகுதியிலிருந்தும் இப்பள்ளியில் சேர்ந்து படிக்கலாம், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருச்சி திண்டுக்கல், கரூர் போன்ற மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் இப்பள்ளியில் சேந்து விடுதியில் தங்கி படிக்கலாம்.
உங்கள் அருகில் உள்ள 5 வயது முதல் 13 வயது வரை உள்ள பள்ளி பருவ மாணவர்கள் 40 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை கண்பார்வையில் குறைபாடு உடையவர்களாக இருந்தால் இவர்களுக்கான எதிர்கால கல்வி வளர்ச்சி மற்றும் கணினி தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி சிறப்பாக அமைய தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படும் இந்த அரசு சிறப்பு பள்ளியில். சேர்த்து பயன்பெற வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பார்வை குறைபாடுடைய மாணவர்களை பள்ளியில் சேர்க்க ப. வடிவேலன் தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்.
+91 9499933248, 04322 226452, +91 9840272383.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
M.L.A. அலுவலகம் அருகில்,
புதிய பேருந்து நிலையம்,
புதுக்கோட்டை 622 001.