Dhandapani Ponnurangam
Contesting for Treasurer
Contesting for Treasurer
வணக்கம்!
வளைகுடாப்பகுதி தமிழ் மன்ற தேர்தல் வேட்பாளராக சந்திப்பதில் மகிழ்ச்சி!
தமிழின் மீதிருந்த தாகத்தில் நான் இளைப்பாறிய இடமான தமிழ் மன்றத்தில், தன்னார்வலராய் ஆயுட்கால உறுப்பினராய் ஆற்றிய பணிகளில் சில:
2015ல் பேரவை விழாவில் தொடங்கி பின்வந்த துணைக்குழுக்களின் மூலமாகவும், தனிப்பட்ட முறையிலும் தன்னார்வலராய்த் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறேன்.
தன்னார்வலராய் பணிபுரிந்த மணித்துளிகளை பணியிடம் மூலம் நன்கொடையாக்கி தனி மனிதனாக $10,000க்கும் மேல் மன்றத்திற்கு உவந்தளித்திருக்கிறேன்.
“விழுதுகள்” இதழின் ஒருங்கிணைப்பாளராக புரவலர்கள் மூலம் மன்றத்திற்கு நன்கொடையாக வசூலித்தத் தொகை $12,000க்கும் மேல்.
கோவிட்-19 நிதித்திரட்டல் குழுவில் முன்னிலை வகித்து ஒரு இலட்சம் டாலர்கள் ($100,000) வரை மன்றத்திற்காக நிதித்திரட்டியுள்ளேன்.
பறையிசையிலும், கவிதை இயற்றுவதிலும் ஆர்வங்கொண்ட நான், FeTNAவிலும் தன்னார்வலராகப் பணியாற்றிவருகிறேன்.
மன்றத்தின் நிதி சார்ந்த முன்னெடுப்புகள் பலவற்றில் பணியாற்றிய நான், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் திறமை பெற்றிருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால்:
மன்ற உறுப்பினர்களுக்கும் “குழு காப்பீட்டுத் மற்றும் பயணியர் காப்பீட்டுத் திட்டம்” கொண்டுவருவேன்.
மன்றத்திற்கான நிதி முதலீட்டு திட்டங்களை பரிந்துரைத்து செயல்படுத்துவேன்.
கணக்கு வழக்குகளனைத்தையும் நேர்மையாகவும், முழு வெளிப்படைத்தன்மையோடும் உறுப்பினர் பார்வைக்கு உடனுக்குடன் சமர்ப்பிப்பேன்.
தமிழ் வளர்க்கும் இலக்கோடு ஓவியம், நாடகம், இசை, பரதம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்குவேன்.
காலத்தால் வீழாத தமிழைப் போல்,
கல்வியைப் போல், காதலைப் போல்,
அனைவருக்குமான தமிழ்ப் பணியை
ஆழிபோல் அளவின்றி புரிந்திட
தமிழ்க் கடவுள் முருகனை வணங்கி,
தமிழ்த் தாயின் பாதம் தொட்டு,
வேட்கையுடன் தமிழ்ப் பணிக்காய்
வேட்பாளனாய் வேண்டி நிற்கிறேன்.
அன்பைப் போல், அறத்தைப் போல்
ஆர்ப்பரித்தெழும் அலைகளைப் போல்
வாழ்த்துக்களுடன் வாக்குகளையும்
வாரி வழங்க வேண்டுகிறேன்.
தமிழ் மன்றத்தின் பொறுப்புகளை பதவிகளாகப் பாராமல், விருப்பு வெறுப்பின்றி, சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, அறம் தவறாமல், பாகுபாடின்றி அனைவருடனும் இணைந்து தொண்டாற்ற உங்களின் பொன்னான வாக்குகளைப் பொழிந்து வெற்றி பெற செய்யுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்!