இளம் நிருபர்
இளம் நிருபர்
"இளம் நிருபர்" திட்டம் மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இளம் நிருபர்களாகச் செயல்படுவதால் பல நன்மைகள் உண்டு.
மாணவர்கள் புதிய சிந்தனைகளையும் கண்ணோட்டங்களையும் கண்முன் கொண்டு வருவார்கள்.
மாணவர்கள் தங்கள் வயதிற்கு உட்பட்டவற்றைப் பற்றி எதார்த்தமாகப் பேசுவார்கள். இதில் முழுக்க முழுக்க அவர்களின் சிந்தனைப்போக்கும் மனநிலையும் வெளிப்படும்.
மாணவர்களை எதிர்கால வேலை வாய்ப்புக்குத் தயார் செய்யவும் அவர்களிடத்தில் செய்திகளையொட்டி ஆராய்ந்து கலந்துரையாடும் ஆர்வத்தைத் தூண்டவும் இத்திட்டம் உதவுகிறது.