உன்னதி
தொகுதி 4, பதிப்பு 1
ஜனவரி – மார்ச் 2022 – 4-வது காலாண்டு
தொகுதி 4, பதிப்பு 1
ஜனவரி – மார்ச் 2022 – 4-வது காலாண்டு
அன்பிற்குரிய சைதன்யா குழுவிற்கு,
2021-2022-ஆம் ஆண்டில் உங்கள் மதிப்பிடமுடியாத பங்களிப்பிற்கு முதலில் உங்கள் ஒவ்வொருவரையும் நான் வாழ்த்துகிறேன். கோவிட் இரண்டாவது அலையையும் மீறி நாம் சிறப்பாக செயல்பட்டு பிரிவில் 2600 கோடி இலக்கைத் தாண்டியுள்ளோம் மற்றும் புதிய LMS-க்கு மாறியுள்ளோம். கடந்த இரண்டு வருடங்களாக, நாம் ஒரு நிறுவனமாக நம்முடைய பலங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப சுறுசுறுப்பாக மாறியதை நிருபித்துள்ளோம். இந்த வருடம் குறுநிதி நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் உணரப்படுகின்றன என்பதில் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ள RBI-இன் புதிய வழிகாட்டுதலுடன் தொடங்குகிறது. புதிய நிலவரங்களுக்கு ஏற்ப மாறுவதற்கு நாம் ஏற்கனவே பணிபுரிந்து வருகிறோம்.
இப்பொழுது தொடங்கும் புதிய நிதி ஆண்டில் மாற்றங்களுக்கு எதிராக நாம் தொடர்ந்து சுறுசுறுப்புடன் செயல்படும் பொழுது நிறுவனத்தில் உள்ள நாம் ஒவ்வொருவருக்கும் இரண்டு விஷயங்கள் சவாலாக இருக்கும்-
1) ஒரு நல்ல மற்றும் உயர் செயல்திறன் கொண்ட குழுவை எவ்வாறு உருவாக்குவது,
2) நாம் என்ன செய்தாலும் அதில் உயர் செயல்முறை தரத்தை உறுதிப்படுத்துவது,
இந்த இரண்டும் இந்த வருடம் மட்டுமல்ல இனி வரும் வருடங்களிலும் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கும். நான் உங்கள் அனைவருக்கும் வருங்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன்!!
தீபக் ஜா
வணிகத் தலைவர்
இந்த காலாண்டில் சைதன்யாவுடன் 5 வருடங்களை பூர்த்தி செய்யும் பணியாளர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. குழுவின் உறுதிப்பாடு, முயற்சிகள் மற்றும் ஆர்வம் ஆகியவையே இந்த துறையில் வேகமான வளர்ச்சிக்குக் காரணம். நமது பணியாளர்களுடன் ஒரு நீண்ட கால மற்றும் ஆரோக்கியமான தொடர்புடன் இருக்க எதிர்நோக்குகிறோம்.
C3139 - சந்தோஷ் ராமச்சந்திர கவுடா
C2699 - சுனில் இலிகர்
C2553 - மல்லப்பா பலேட்
C2549 - உமாபதி C
C2498 - மாருதி ஃபகிரப்பா தனடாமனி
C2610 - சிவானந்த் சந்திரப்பா ஹுக்கேரி
C2591 பீரேஷ்
C2590 - சாகர்
C2442 - கமலாக்கர்
C2513 - ராஜீவ் ரஞ்சன்
C2508 - அடல் பீஹாரி
C2506 - சஞ்சீவ் குமார்
C2507 - நிரஞ்சன் குமார்
C2698 - சுனில் காம்ப்ளே
C2536 - விஜய் கல்லப்பா அம்மினபவி
C2420 - மது B P
C3384 - லோகேஷ் M
C2564 - அடிவெப்பா C சோபராட்
C2436 - துருகப்பா
C2428 - சன்னா கம்ப்லேப்பா
C2409 - சுந்தர்ராஜ் கிருஷ்ணமூர்த்தி
C2694 - ரௌஷன் ரன்வீர் சிங்
C2711 - மாதவ் ப்ரகாஷ்ராவ் ஹகாட்லே
C2520 - அவினாஷ் பகவத் அவாலே
C2469 - சுனில் ப்ரஹலாத் ஷிண்டே
C2377 - ப்ரதீபா பூஜாரி
சைதன்யா தொடர்ந்து பயிற்சி திட்டங்களுக்கு மதிப்பளித்து வருகிறது மேலும் ஒவ்வொரு காலாண்டிலும் அவற்றை மேம்படுத்துவதை நோக்கி பணிபுரிந்து வருகிறது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பகுதிகளை மையப்படுத்தி நடத்தப்பட்ட அடிப்படை தூண்டுதல் நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்த சில பார்வைகள் இதோ. மேலாளர்களின் முழுமையான மேம்பாட்டிற்காக தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சினெர்ஜி பயிற்சி இந்த பட்டியலில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.
தூண்டுதல் பயிற்சி – ஜெய்பூர், RJ
தூண்டுதல் பயிற்சி – மதுரை, TN
தூண்டுதல் பயிற்சி – ஜெய்பூர், RJ
சினெர்ஜி பயிற்சி – பெங்களூரு, HO
தூண்டுதல் பயிற்சி – ராய்கர், CG
தூண்டுதல் பயிற்சி – சதாரா, MH
நான் சஞ்சய் ஹெர்கல், பிராந்திய மேலாளர், ஷிவமொக்கா, கர்நாடகா. நான் சைதன்யாவில் கிளை மேலாளராக 2018-இல் சேர்ந்து லோகாபூர் கிளையில் 2 வருடங்கள் பணி அனுபவத்தைப் பெற்றேன். யூனிட் மேலாளராக பதவி உயர்வு பெற்றபிறகு, நான் 8 மாதங்களுக்கு பைல்ஹோங்கால் யூனிட்டில் நியமிக்கப்பட்டேன். இப்பொழுது பிராந்திய மேலாளராக சிவமோகாவில் பணிபுரியும் போது, நான் தொழில்ரீதியாக நிறைய வளர்ச்சியைப் பெற்றுள்ளேன். சைதன்யாவில், நாம் கற்றுக் கொள்வதற்கும் மற்றும் மேம்படுத்திக்கொள்வதற்கும் போதுமான அளவு வாய்ப்புகளை பெறுகிறோம்.
நமது குடும்பத்திற்கு ஆதரவளிக்கவும் மற்றும் அவர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்கும் நமது சொந்த ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு சென்று நமது பெரும்பாலான நேரத்தை கழிக்கிறோம். எனது குடும்பத்தாரின் நிலையான ஆதரவிற்கும் மற்றும் ஊக்குவிப்புக்கும் அவர்களைக் குறிப்பிட்டு பாராட்டுக் கடிதத்தைப் பெற்ற போது நானும் எனது குடும்பத்தாரும் மிகவும் மதிப்பாக உணர்ந்தோம். சைதன்யாவின் ஒரு அங்கமாக இருப்பதற்கு நான் அதிர்ஷ்டம் செய்ததாக உணர்கிறேன் மற்றும் நிறுவனத்தில் மேலும் வளரவேண்டும் என எண்ணுகிறேன்.
சஞ்சய் ஹெர்கல், பிராந்திய மேலாளர்
ஷிவமொக்கா, கர்நாடகா
என்னுடைய பெயர் கீதா ரஞ்சித் பாட்டீல் மற்றும் நான் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் மாவட்டம், முர்குட் வட்டம், சுருபலி கிராமத்தைச் சேர்ந்தவள். கடந்த 4 வருடங்களாக நான் சைதன்யாவின் வாடிக்கையாளராக உள்ளேன் மற்றும் இதுவரை 2 இலட்சம் வரை கடன் தொகையைப் பெற்றுள்ளேன். சைதன்யாவுடனான எனது பயணம் 2017-இல் தொடங்கியது, அதற்கு முன் எனது குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமாக இருந்தது. என்னுடைய முதல் கடனைக் கொண்டு, நான் ஒரு பசுமாட்டை வாங்கி கால்நடை வளர்ப்பை ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு நான் ஒரு பெட்டிக் கடையை ஆரம்பித்தேன். இப்பொழுது, 4 வருடங்களுக்குப் பிறகு, நான் 3 பசுமாடுகளை வைத்துள்ளேன் என்னுடைய பெட்டிக் கடையையும் விரிவுபடுத்தியுள்ளேன். என்னுடைய குடும்பத்தின் பொருளாதார நிலையும் பெருமளவில் முன்னேறியுள்ளது. என்னுடைய வாழக்கையில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றத்திற்காக சைதன்யாவின் சேவைகளுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
சமுதாய கட்டமைப்பு செயல்பாடுகளில் சைதன்யா தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்த காலாண்டில் CSR செயல்பாடுகள் நமது உள்ளூர் பாதுகாப்புப் படைகளுக்கு கோவிட் பாதுகாப்பு தொடர்பான சாதனங்கள் வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டது. நமது முன்கள பாதுகாப்பு போராளிகள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் 24*7 நமக்கு சேவை புரிந்தார்கள், அதற்கு ஒரு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு காவல் நிலையங்களுக்கு கோவிட் பாதுகாப்பு உபகரண கிட்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு கோவிட் பாதுகாப்பு கிட்டும் முகக்கவசங்கள், கிருமி நாசினி இயந்திரம், கை கிருமிநாசினி, கைகழுவும் திரவம் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. மொத்தமாக, உத்திரபிரதேசத்தில் 83 கிட்களும், ஜார்கண்ட்டில் 31-ம், மகாராஷ்டிராவில் 60-ம் வினியோகிக்கப்பட்டன.
சோலாப்பூர் – MH
அயோத்தியா – UP
மீரட் – RJ
கோலாப்பூர் – MH
கனிணி நிரல் உலகை கண்டறியுங்கள்
W3ஸ்கூல்-மூலம் Python, Java, HTML மற்றும் பல கனிணி நிரல் மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள்
நிபுணர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்
நீங்கள் காணொலி உள்ளடக்கத்தில் நீங்களாகவே கற்றுக் கொள்வதில் உங்களுக்கு அதிக ஆர்வமும், உங்களைப் போலவே ஒத்த சிந்தனை உள்ள நபர்களைக் கொண்ட குழுவுடன் இணைந்து கற்பதில் விருப்பம் கொண்டவர்களாகவோ இருந்தால் ஹப் ஸ்பாட் மற்றும் கேரியர் காண்டஸா நடத்தும் இணைய வகுப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும், டெட் டாக்ஸ், யூ ஆர் நாட் ஸோ ஸ்மார்ட் மற்றும் Google பாட்காஸ்ட்ஸ் போன்ற பாட்காஸ்ட்களையும் கவனிக்கவும்.
HubSpot Career, Contessa Ted talks, You Are Not So Smart, and Google Podcasts.
உங்களது திறனை மேம்படுத்துங்கள்
இலவச இணையவழி கற்றல் தளங்களைப் பயன்படுத்தி புதிய திறமைகளை கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய துறையில் நீங்கள் வளர உதவும் படிப்புகளை கோர்சேரா, Linkedin லேர்னிங் மற்றும் edX ஆகியவை வழங்குகின்றன.
Coursera, Linkedin Learning, and edX
Google மூலம் சான்றளிக்கப் பெறுங்கள்
மின்னணு முறையில் Google உடன் கற்பது செயல்முறை கற்றல் தொகுப்புகளுடன் வருவதால் வருங்காலத்திற்கான ஒரு திறனை நீங்கள் கற்க உதவுகிறது.
ஒரு பொழுதுபோக்கினை உருவாக்கிக் கொள்ளுங்கள்
ஒரு பொழுதுபோக்கினை உருவாக்கிக் கொண்டு உங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்கிக் கொள்வது எப்பொழுதும் ஒரு சிறந்த யோசனையாகும். கெட் க்ரோயிங், ட்யூவோலிங்கோ மற்றும் ஃப்யூச்சர் லேர்ன் போன்ற இணையதளங்கள் அதை செய்ய நமக்கு உதவுகின்றன.
உன்னதியின் இந்த பதிப்பைப் பற்றிய உங்கள் நோக்குகளை நாங்கள் அறிந்து கொள்ள உதவுங்கள். மேலும் அடுத்த பதிப்பில் நாங்கள் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்த உங்கள் யோசனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். communication@chaitanyaindia.in என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களுக்கு எழுதுங்கள்.
மேலும், எங்களை Facebook, Instagram, Linkedin & Twitter-இல் பின்தொடருங்கள்.