ராகேஷ் மட்டர் கிருஷ்ணா
பிஸினஸ் எக்செலென்ஸ் தலைவர்
பெங்களூரு
ராகேஷ் மட்டர் கிருஷ்ணா
பிஸினஸ் எக்செலென்ஸ் தலைவர்
பெங்களூரு
நிர்வாகத்தின் செய்தி
அன்புள்ள குழு உறுப்பினர்களே,
சைதன்யா இந்தியாவில் எங்கள் பயணம் மீண்டெழும் தன்மை மற்றும் அர்ப்பணிப்புடன் இருந்தது. உங்களின் அசைக்கவியலாத அர்ப்பணிப்புதான் எங்களின் வெற்றிக்கு உந்துதலாக இருக்கிறது. இந்தியாவில் தலைசிறந்த MFI ஆக இருக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். எங்கள் கிளைகள் நாடு முழுவதும் பரவி வருவதால், நாங்கள் சேவை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, எங்கள் நிறுவன ஊழியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஒரு எதிர்காலத்தை நாங்கள் நம்புகிறோம்.
எங்கள் தயாரிப்புகளை மேலும் சிறப்பாக்குவதில் கவனம் செலுத்தி, எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்ய எங்கள் செயல்முறைகளைச் செம்மைப்படுத்துவதன் மூலம், மாற்றத்தின் ஒரு அற்புதமான கட்டத்தில் நாங்கள் நுழைகிறோம். எங்கள் இலக்கு என்பது எதிர்பார்ப்புகளை முழுமை செய்வது மட்டுமல்ல, அவற்றைத் தாண்டிச் செல்வதும், நுண்கடன் துறையில் குறிப்பிடத் தக்க அளவுகோல்களை அமைப்பதும் ஆகும்.
வரவிருக்கும் மாதங்களில், எங்கள் செயல்பாடுகளை மேம்படுத்துவதையும் புதுமையான தீர்வுகளை அறிமுகம் செய்வதையும் நோக்கமாகக் கொண்ட பல முக்கிய முயற்சிகளை நீங்கள் காண்பீர்கள். எங்களின் அணுகுமுறையானது, நாடு முழுவதும் உள்ள எங்களின் பல்வேறு வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிதித் தயாரிப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும். எங்கள் சலுகைகளை அவர்களின் தனித்துவமான மற்றும் மாறுபட்ட சவால்கள் மற்றும் இலக்குகளுடன் சீரமைப்பதன் மூலம், அவர்களின் நிதி நலனை மேம்படுத்துவதையும், எங்களுடனான அவர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை இனிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
மேலும், எங்கள் ஊழியர்களை மற்றும் பொதுவாக எங்கள் செயல்பாடுகளைச் சிறப்புடன் ஆதரிப்பதற்காக உள்ளகச் செயல்முறைகளை சிறப்பாக்குவதில் எங்கள் கவனம் இருக்கும். பணிப்பாய்வுகளை நெறிப்படுத்துதல், தகவல் தொடர்பு வழிகளை மேம்படுத்துதல், மேலும் திறமையான கருவிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவை இதில் அடங்கும். இந்த மேம்பாடுகளைச் செய்வதன் மூலம், மிகவும் பயனுள்ள மற்றும் துணை நிற்கும் பணிச்சூழலை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் முழுத்த்திறனுடன் சிறப்பாகச் செயல்படவும், எங்கள் மிஷனுக்கு மிகவும் திறன் மிகு வகையில் பங்களிக்கவும் அனுமதிக்கிறோம்.
உங்கள் கடின உழைப்பு மற்றும் நிபுணத்துவத்தின் அடித்தளத்தில் எங்கள் வெற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான மாற்றங்களை நாங்கள் மேற்கொள்கையில், நீங்கள் ஈடுபாட்டுடன் இருக்கவும், உங்கள் யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், வரவிருக்கும் வாய்ப்புகளை அரவணைக்கவும் உங்களை நான் ஊக்குவிக்கிறேன். ஒன்றாக, நாம் தொடர்ந்து நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவோம் மற்றும் குறிப்பிடத் தக்க மைல்கற்களை அடைவோம். எங்கள் பணிக்கான உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்கு நன்றி.
நம்பிக்கையே வெற்றிக்கு வழி,
அன்புடன்,
ராகேஷ்
நமது வரம்புகளைக் கண்டறிதல்
எட்டப்பட்ட மைல்கற்கள்!
"எங்கெல்லாம் ஒரு படிக்கல் இருக்கிறதோ அங்கே ஒரு மைல்கல்லும் இருக்கும்"
ஒரு நிறுவன அமைப்பாக, நமது ஒவ்வொரு அடியையும் போற்றத்தக்க மைல்கல்லாக மாற்ற நாம் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த காலாண்டில் நமது தனித்துவமான செயல்திறன் நமது கூட்டு முயற்சிகளுக்கு ஒரு சான்றாக இருக்கும்.
சைதன்யாவின் முழுமையான வளர்ச்சி முயற்சிகளின் பல்வண்ணக் காட்சிக்கள்
விரிவான கற்றல் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் தொடர்ச்சியான கற்றல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை உண்டாக்குவதற்கு சைதன்யா வலுவான முக்கியத்துவத்தை அளிக்கிறது. முழுமையான நல்வாழ்வின் முக்கியத்துவத்தை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே, எங்களின் அனைத்துப் பயிற்சித் திட்டங்களிலும் அர்ப்பணிப்புள்ள உடல் மற்றும் மன நல அமர்வுகள் அடங்கும்.
கடந்த காலாண்டின் சுவாரஸ்யமான சில காட்சிகள் பின்வருமாறு:
கிழக்கு மண்டலப் பயிற்சி மையம் - 6வது பேட்ச் பயிற்சி
தார்வாட், தென் கர்நாடகா CRES புத்துணர்வுப் பயிற்சி
கிழக்கு மண்டலப் பயிற்சி மையம் - 5வது பேட்ச் பயிற்சி
தென் கர்நாடகா 6வது பேட்ச் பயிற்சி
சுல்தான்பூர் 13வது பேட்ச் பயிற்சி
மத்திய UP கிளஸ்டர் 14வது பேட்ச் பயிற்சி
சுல்தான்பூர் 18வது பேட்ச் பயிற்சி
சுல்தான்பூர் பயிற்சி மையம்-தொகுதி 19வது பயிற்சி
சுல்தான்பூர் பயிற்சி மையம், மத்திய UP கிளஸ்டர் - 20வது குழுப் பயிற்சி
தமிழ்நாடு 13வது பேட்ச் பயிற்சி
உதய்பூர் BM புத்துணர்ச்சிப் பயிற்சி
பச்ராவன் யூனிட், அயோத்தி பகுதி CRE புத்துணர்ச்சிப் பயிற்சி
லால்கஞ்ஜ் & பவாய் யூனிட் ஆஜம்கர் மண்டலம் CRE புதுப்பித்தல் பயிற்சி
ஹர்ரையா யூனிட், பஸ்தி மண்டலம் - புத்துணர்ச்சிப் பயிற்சி
மஹாராஜ்கஞ்ச் & அம்பேத்கர் நகர் - CRE புதுப்பித்தல் பயிற்சி
கர்நாடகா-TOT
தமிழ்நாடு-12வது பேட்ச் பயிற்சி
குஜராத்-25வது பேட்ச் பயிற்சி
அஹமதாபாத் & பரூச் பகுதி - CRE புதுப்பித்தல் பயிற்சி
கோத்ரா & பரூச் மண்டலத்தில் முதல் முறை மேலாளர் பயிற்சி
வாராந்திர வினாடி வினாக்களில் தொடர்ச்சியாக சாதனை புரிபவர்கள்
(எங்கள் அமைப்பின் அனைத்து இந்தியக் கிளைகளிலிருந்தும்)
செயல்முறை மற்றும் கொள்கைகள் குறித்த வாராந்திர வினாடி வினா, பயிற்சியின் மூலம் ஒரு புதிய முயற்சியாக அறிமுகம் செய்யப் பட்டது. இது குழு மற்றும் நிறுவனத்திற்குள் அறிவை மேம்படுத்துவதற்கான ஒரு மூலக் கல்லாக மாறியுள்ளது. குறிப்பிடத் தக்க வகையில், மேற்கூறிய CREகள் இந்தக் காலாண்டின் (ஏப்ரல்-ஜூன்'24) வினாடி வினாக்கள் முழுவதிலும் முன்மாதிரியான நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளன, இது அவர்களின் ஆழமான புரிதலையும் பாடத்தில் அவர்கள் பெற்ற தேர்ச்சியையும் தொடர்ந்து வெளிப்படுத்துகிறது.
பயிற்சிக் குழு 5 செயல்முறை தொடர்பான கேள்விகளைப் பகிர்ந்து கொள்கிறது, இவை எங்கள் HRMS இயங்குதளம்- PeopleStrong இன் உதவியுடன் சம்பந்தப் பட்ட ஊழியர்களுக்கு ஒப்படைக்கப் படுகின்றன. கேள்விகள் முக்கியமாக CRE-க்கு அஸைன் செய்யப் பட்டிருப்பதால், பயிற்சிக் குழு இந்தக் கேள்விகளை 4 மொழிகளான ஹிந்தி, கன்னடம், தமிழ் மற்றும் ஒடியா மொழிகளில் அவர்களது வசதிக்காக மொழி பெயர்க்கிறது. கேள்விகள் பொதுவாக CRE இலிருந்து மண்டல மேலாளர் (RM) நிலைக்கு அஸைன் செய்யப்படும்.
தொடர்ந்து சாதனை புரிபவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! எங்களது அடுத்த இதழில் எங்கள் ஊழியர்களின் பெயர்கள் மேன்மேலும் குறிப்பிடப்படுவதை எதிர்பார்க்கிறோம்!
நீரஜ்
கர்னால், வடக்கு மண்டலம்
சுஜாதா பெஹெரா
தென்கனால். கிழக்கு மண்டலம்
விபின் ஸைனி
கர்னால், வடக்கு மண்டலம்
அர்ஜு பஞ்சால்
கர்னால், வடக்கு மண்டலம்
ஷுபம் குமார்
கர்னால், வடக்கு மண்டலம்
மதுசூதன் B
சித்ரதுர்கா, தென் மண்டலம்
ஓஸ்வால்
கர்னால், வடக்கு மண்டலம்
ரோஹித்
கர்னால், வடக்கு மண்டலம்
பிந்து குமார்
கர்னால், வடக்கு மண்டலம்
துஷார் ராணா
கர்னால், வடக்கு மண்டலம்
(நிதி திரட்டுதல் மற்றும் கருவூலப் பணிகள்)
சைதன்யாவில், கருவூலத் துறை, 12 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பிரத்யேகமான குழுவைக் கொண்டுள்ளது, அவர்களின் கூட்டு முயற்சிகள் நம் நிறுவனத்தின் நிதி ஸ்திரத் தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்கின்றன. திணைக்களமானது இரண்டு முக்கிய செங்குத்துத் துறைகளாகக் கட்டமைக்கப் பட்டுள்ளது: நிதி திரட்டுதல் மற்றும் ரெகுலர் கருவூல செயல்பாடுகள். பணப் புழக்கத்தை நிர்வகிப்பதற்கான முதன்மைப் பொறுப்பு கருவூலக் குழுவின் பணியின் மையத்தில் உள்ளது, நிதிக் கடமைகளை எதிர்கொள்ளப் போதுமான பணம் மற்றும் செயல்பாட்டு மூலதனத்தை நிறுவனம் எப்போதும் பராமரிப்பதை உறுதி செய்கிறது. இது விவேகம் மிக்க குறுகிய கால முதலீட்டு மேலாண்மை, பணப் புழக்க முன்கணிப்பு மற்றும் நிதி, முதலீடுகள் மற்றும் இடர் மேலாண்மை தொடர்பான வியூக ரீதியான முடிவெடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும், குழுவானது பெருநிறுவன நிதியத்தில் சிறந்து விளங்குகிறது, நுணுக்கமான நிதியியல் தரவுப் பகுப்பாய்வு மூலம் வளர்ச்சி மற்றும் லாபத்தை ஊக்குவித்தல் மற்றும் கடன் மற்றும் கடன் அல்லாத வழங்கல்களைத் திறம்பட நிர்வகித்தல் ஆகியவற்றின் மூலம் அறிவார்ந்த முடிவுகளை எடுக்கிறது.
கருவூலத் துறையானது கடன் சேவை, வங்கி செயல்பாடுகள், பங்குதாரர் மேலாண்மை மற்றும் இடர் தணிப்பு ஆகியவற்றிலும் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. அவை சரியான நேரத்தில் வட்டி மற்றும் அசலைத் திருப்பிச் செலுத்துதலை உறுதி செய்கின்றன, பயனுள்ள வங்கிச் செயல்பாடுகள் மூலம் பணப் புழக்கத்தை மேம்படுத்துகின்றன, மேலும் வங்கியாளர்கள், கடன் வழங்குவோர், தணிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுடன் வலுவான உறவுகளைப் பேணுகின்றன. பங்குதாரர் நிர்வாகத்தில் குழுவின் முயற்சிகள் சைதன்யாவின் செயல்பாட்டு வெற்றிக்கு மிகவும் முக்கியத் தேவைகளான நம்பிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மையை உருவாக்குகின்றன. நிதி அபாயங்களைக் கண்டறிந்து குறைப்பதன் மூலம், கருவூலத் துறையானது ஸ்திரத்தன்மை மற்றும் இலாபத் தன்மைக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்துகிறது. அவர்களின் ஆளுகை மற்றும் அறிக்கையிடல் நடைமுறைகள் எங்கள் நிதி ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் நிதிச் சேவைகளை வழங்குவதற்கான எங்கள் பணிககுத் துணை நிற்பதற்கும் கருவியாக உள்ளன.
நிதி திரட்டும் துறையில், குழுவானது நிறுவனத்தின் கடன் போர்ட்ஃபோலியோவை நிர்வகிக்கிறது, சாதகமான விதிமுறைகளைப் பெறுவதற்கும் ஒட்டுமொத்தக் கடன் செலவுகளைக் குறைப்பதற்கும் கடன் வாங்கும் வியூகங்களை முன்கூட்டியே அமைக்கிறது. செயல்பாட்டுத் தேவைகளுக்குப் போதுமான பணப் புழக்கத்தை உறுதி செய்து, சொத்துப்பரிமாற்றங்கள் மற்றும் இணை-கடன் நடவடிக்கைகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிதி திரட்டும் குழு பணப்புழக்க முன்கணிப்பு, கடன் மதிப்பீடுப் புதுப்பிப்புகள் மற்றும் பண இருப்பு மேம்படுத்தல் ஆகியவற்றையும் மேற்பார்வையிடுகிறது.
அறிக்கையிடல், உடன்படிக்கை கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணக்கமாய் இருத்தல் ஆகியவற்றில் அவர்களின் விடாமுயற்சி பிரமிக்கத்தக்க சாதனைகளை விளைவித்துள்ளது. 2023-24 நிதியாண்டில், அவர்கள் INR 5700 கோடிக்கு மேல் கடன்களைத் திரட்டுவதில் வெற்றி கண்டனர் மற்றும் சைதன்யாவின் வலுவான நிதிச்செயல்திறன் மற்றும் தரமான மேலாண்மை நடைமுறைகளைப் பிரதிபலிக்கும் வகையில், A/Stable இலிருந்து AA-/Stable க்கு CARE மற்றும் CRISIL ரேட்டிங்குகள் மூலம் இரண்டு-படி ஏற்றத்தை அடைய விடாமுயற்சியுடன் செயல்பட்டனர்.
சைதன்யாவுடன் 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் இணைந்து பணியாற்றுவோர்
எங்கள் ஊழியர்களே எங்கள் பலம், எங்கள் நிறுவனம் எங்கள் ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் உருவகமாகும். எங்களுடனான எங்கள் ஊழியர்கள் ஒவ்வொருவரையும் நாங்கள் மதிக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் 10 புகழ்பெற்ற ஆண்டுகளை நிறைவு செய்த எங்கள் அணியினரின் பெயர்கள் இங்கே உள்ளன.
C0458-சந்தோஷ் முனவல்லி
சைதன்யாவுடன் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் இணைந்து பணியாற்றுவோர்
C5286 - சோனு குமார்
C5426 - ஷ்யாம் கிருஷ்ண பரமஹன்ஸ்
C5440 - ரவீந்திர குமார்
C5191-துலார்லால் தாஸ்
C5459-தர்மேந்திர குமார்
C5354-லாலன் குமார் பாண்டே
C5347-லவுகேஷ் குமார் ரே
C5289-ஷைலேந்திர குமார் யாதவ்
C5291-பல்ராம் பாண்டே
C5294-தில்ஷாத் ராஸா
C5327 - ராஜண்ணா V
C5429 - KM வசந்த குமாரா
C5442 - ஹொன்னூரசாமி எஸ்
C5446 - பவித்ரா C
C5241 - சிவராஜ் சந்திரப்பா அனவேரி
C5243 - மஞ்சுநாத் திப்லப்பா லாமணி
C5408 - மஞ்சுநாத்
C5436 - சுஜாதா B
C5371 - மாரெப்பா
C5393 - கலீல் பாஷா
C5343 - அவினாஷ் H
C5364 - ஹனமந்தா சோமலிங்க மதார்
C5469 - பகவான் சஞ்சய் காக்டே
C5473 - டாங்கே ஷரத் சுதாகர்
C5319 - ரமீஜ்ராஜா பாபாலால் காஜி
C5502 - பங்கஜ் அங்குஷ் கெய்க்வாட்
C5509 - பிரவீன் ஸாஹெப்ராவ் துண்டலே
C5287 - மைனேஜர் சௌஹான்
C5356 - பிரத்யுமன் குமார் சிங்
வசீகரிக்கும் மற்றும் தவிர்க்க முடியாத நுண்ணறிவு
சைதன்யாவின் கண்ணோட்டம்
மஹானந்தா நீலேஷ் சௌதரி
உத்தரப் பிரதேசம்
பாரம்பரியங்களைப் புதுப்பித்தல்: மஹானந்தா சௌதரியின் கலைப் பயணம்
மஹானந்தா நீலேஷ் சௌதரி, ஒரு திறமையான சிற்பி, தனது புதுமையான அணுகுமுறையால் சிலை செய்யும் கலையை மாற்றியுள்ளார். கைவினைத் தொழிலில் பல தலைமுறை அனுபவமுள்ள குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட மஹானந்தா இந்த சிக்கலான கலைக்கு அவரது கணவரிடம் இருந்து அறிமுகமானது. அன்றிலிருந்து, வழக்கத்திற்குமாறான பொருட்களைப் பயன்படுத்தி, பழைய, தேவையற்ற மற்றும் புதுப்பிக்கப்பட்ட உலோகம், பித்தளை மற்றும் தாமிரக்கம்பிகளுக்குப் புது வாழ்வை சுவாசிப்பதன் மூலம் அவர் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.
அவரது தனித்துவமான முறையானது, கிடைக்கக் கூடிய உலோகம் அல்லது பித்தளைப்பொருட்களை உருக்குவதன் மூலம் தொடங்கும் ஒரு விரிவான செயல்முறையை உள்ளடக்கியது, இது ஒரு நாள் முழுவதும் எடுக்கும். பின்னர் திரவமாக்கப்பட்ட பொருள் அச்சுகளில் கவனமாக ஊற்றப்படுகிறது, இது சிலைகளுக்கு அடித்தளமாக செயல்படுகிறது. இந்த அச்சுகள் கவனமாக உலைகளில் வைக்கப் படுகின்றன, அங்கு அவை விட்டல் மற்றும் ருக்மணியின் சிக்கலான மற்றும் மரியாதை மிக்க வடிவங்களை அடைவதற்காக சூடேற்றப் படுகின்றன.
மஹானந்தாவின் பயணத்தில் சைதன்யாவின் துணை நிற்றல் முக்கியமான பங்கு வகித்துள்ளது. தேவையான ஆதாரங்கள் மற்றும் நிதி உதவிக்கான அணுகல் மூலம், அவர் சிறந்த கருவிகள் மற்றும் பொருட்களில் முதலீடு செய்ய முடிந்தது, இந்த ஆதரவு அவரது பணியின் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது. இது அவரது செயல்பாடுகளை விரிவு படுத்தவும், பரந்த அளவிலான பார்வையாளர்களைச் சென்றடையவும், கழிவுப் பொருட்களைக் குறிப்பிடத் தக்க கலைப் படைப்புகளாக மாற்றும் அவரது புதுமையான நடைமுறையைத் தொடரவும் உதவியது.
கழிவுப் பொருட்களைப் பயன்படுத்துவதில் மஹானந்தாவின் அர்ப்பணிப்பு, நீடித்து நிலைக்கும் தன்மை கொண்ட கலையின் சிறந்த நடைமுறைகளை எடுத்துக் காட்டுவது மட்டுமல்லாமல், ஒதுக்கப் பட்ட பொருட்களை பக்தி மற்றும் அழகியல் கொண்ட அற்புதமான படைப்புகளாக மாற்றுகிறது. அவரது கைவினைத்திறன், மறுபயன்பாட்டுப் பொருட்களுக்குள் இருக்கும் படைப்புத் திறனுக்கு ஒரு சான்றாக நிற்கிறது, அவரது சிலைகளை சாதாரண வழிபாட்டுப் பொருட்களாக மட்டுமல்லாமல், புதுமை மற்றும் சுற்றுச்சூழல் உணர்வின் அடையாளங்களாகவும் ஆக்குகிறது.
சைதன்யாவின் ஃபிட்னஸ் (உடற்தகுதி) ஆர்வலர்கள்
தீபாலி தத்தாத்ரேயா கூடூர்
IT - அதிகாரி
பெங்களூர்
தீபாலியின் விளையாட்டுப் பயணம்
தீபாலி விளையாட்டின் மேல் கொண்ட ஆர்வம் அவரது வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமாக இருந்து வருகிறது, அவரது துணை நிற்கும் குடும்பம் மற்றும் அவரது தந்தையின் ஊக்கம் அவர் மேல் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் கொண்ட குடும்பத்தில் வளர்ந்து, மத்திய ரயில்வேயில் பணி புரியும் தீபாலியின் தந்தை, தனது குழந்தைகளை விளையாட்டில் தீவிரமாகப் பங்கேற்க எப்போதும் தூண்டினார். இந்த ஆரம்ப கால ஊக்கம் தீபாலிக்கு விளையாட்டின் மேல் வாழ்நாள் முழுவதும் அன்பை ஏற்படுத்தியது.
தீபாலியின் விளையாட்டின் பயணம் கர்நாடகாவின் ஷஹாபாத்தில் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள அவரது பள்ளியில் தொடங்கியது. பள்ளியில் மாநில அளவில் கோ-கோ தொடங்கி பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். தற்காப்புக்கான அவரது அர்ப்பணிப்பு அவரை 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மூன்று ஆண்டுகள் கராத்தே கற்க வழி வகுத்தது. கராத்தே தவிர, அவர் 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் ரிலே ஓட்டத்தில் (100 மீட்டர்) பங்கேற்றார், மேலும் அவர் கைப்பந்து மற்றும் த்ரோபால் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.
2019 ஆம் ஆண்டில், தீபாலியின் கடின உழைப்பும், வாலிபால் மீதான அவரது அர்ப்பணிப்பும் பலனளித்தன, அவர் மாவட்ட அளவில் போட்டியிட்டு 2வது பரிசைப் பெற்றார். இந்த சாதனை அவரது விடாமுயற்சி மற்றும் விளையாட்டில் அவரது சிறந்த திறமைக்குச் சான்றாக உள்ளது.
விளையாட்டு என்பது உடல் செயல்பாடுகளை விடவும் அப்பாற்பட்டது என்று தீபாலி நம்புகிறார்; அது ஒரு வாழ்க்கை முறை. விளையாட்டுத் திறனானது, களைப்பில் இருந்து மீண்டெழும் தன்மை மற்றும் சிறந்து விளங்குவதற்கான நாட்டம் ஆகியவற்றில் விலை மதிப்பற்ற பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது என்பதை அவர் வலியுறுத்துகிறார். விளையாட்டுகளில் ஈடுபடுவது நற்குணத்தையும் ஆளுமையையும் உருவாக்க உதவுகிறது, மனம், உடல் மற்றும் ஆன்மாவிற்கு அற்புதமான நன்மைகளை வழங்குகிறது. தீபாலிக்கு, விளையாடுவது மன அழுத்தத்தைக் குறைக்கக் கூடிய ஒன்று. அது வாழ்க்கையின் பதட்டங்களை மறந்து விளையாட்டில் தன்னை மூழ்கடிக்க அனுமதிக்கிறது.
ஒரு விளையாட்டு ஆர்வலராக, தீபாலி தனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களை விளையாட்டில் ஈடுபடவும் அதன் மாற்றம் கொணரும் சக்தியை அனுபவித்துப் பார்க்கவும் ஊக்குவிக்கிறார். அவர் குறிப்பாகப் பெண்களை விளையாட்டில் ஈடுபடுத்துமாறு வலியுறுத்துகிறார்.
விளையாட்டுகளில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நேர்மறையாக இருக்க வேண்டும். தீபாலியின் கதை, விளையாட்டு எவ்வாறு ஒருவரின் வாழ்க்கையை வளப்படுத்துகிறது, தனிப்பட்ட வளர்ச்சியை மேம்படுத்துகிறது என்பதற்கு ஒரு ஒளி வீசும் உதாரணம் ஆகும். சைதன்யா இந்தியாவும் தனது அர்ப்பணிப்பையும், விளையாட்டின் உணர்வைத்தழுவி மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் தன்மையையும் கொண்டாடுகிறது.
ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்ற பெங்களூரு ரன்னர்ஸ் ஜாத்ரே 2024 இல் எங்கள் இனிமையான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்வானது இயங்கும் சமூகத்தின் துடிப்பான கொண்டாட்டமாக அமைந்தது, அனைத்துப் பருவத்தினரையும் ஒன்றிணைத்து விளையாட்டின் மீதான அவர்களின் ஆர்வத்தால் ஒன்றுபட்டது. இந்த ஆண்டு, இந்நிகழ்வு 3 கிமீ குழந்தைகள் ஓட்டத்தை அறிமுகப் படுத்தியது, மூன்று வயது முதல் எழுபத்து மூன்று வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வரை ஓட்டப் பந்தய வீரர்களைக் காட்சிப்படுத்தியது, அனைவரும் ஓடுபாதையில் பிரமிக்கத் தக்க உறுதியை வெளிப்படுத்தினர். 3 கி.மீ., 5 கி.மீ., மற்றும் 10கி.மீ ஓட்டங்களில் எங்கள் அணி பெருமையுடன் பங்கேற்றது.
உற்சாகமூட்டும் வார்ம்-அப்பயிற்சிகள் முதல் மனம் மயக்கும் கலாசார நிகழ்ச்சிகள் வரை உற்சாகமூட்டும் வார்ம்-அப்பயிற்சிகள் முதல் கம்சாலே மற்றும் செண்ட மேளம் போன்ற மனம் மயக்கும் கலாசார நிகழ்ச்சிகள் வரை, ஆற்றல் காட்டுத் தீ போல் பரவி, அனைவரையும் தொற்றிக் கொண்டது. ஆங்காங்கே செக்பாயிண்ட்களில் நின்றிருந்த ஆர்வமுள்ள தன்னார்வலர்களுக்கு நாங்கள் ஒரு சிறப்பு கூச்சலை வழங்குகிறோம், அவர்களின் உற்சாகம் ஓட்டப் பந்தய வீரர்களுக்குக் கூடுதல் ஊக்கத்தை அளித்தது. எங்கள் நிறுவனத்தில் ஆரோக்கியம் மற்றும் உடல் நலத்தை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சைதன்யத் தோழர்களுக்கும் பாராட்டுக்கள், எதிர்காலத்தில் இதுபோன்ற பல நிகழ்வுகளில் பங்கேற்போம் என்று நம்புவோம்!
எங்கள் டவுன் ஹால்களின் ஆழ்ந்த பார்வை: மனதைக் கவரும் ஒரு சந்திப்பு- ஆரம்பம் முதலே எங்கள் வாடிக்கையாளர்கள்/ குழு உறுப்பினர்கள் ஆக இருப்போரைக் கொண்டாடுகிறது
கடந்த காலாண்டில், நாயக்கனஹட்டி மற்றும் ஜகளூரில் இருந்து எங்கள் முதல் வாடிக்கையாளர்களை பெங்களூரில் உள்ள சிறப்பு டவுன்ஹால் சந்திப்புக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைந்தோம்.
சாதாரணமான பொருளாதாரப் பின்னணியில் இருந்து வரும் இந்தத் தனிநபர்கள், வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறி விட்டனர். பலர் சைதன்யாவிடமிருந்து அவர்களின் தொடக்கக் கடன்கள் மூலம் தையல் இயந்திரம் அல்லது ஆடுகளை வாங்கத் தொடங்கினர்.
இப்போது, 14 ஆண்டுகளுக்குப் பிறகு, பெரும்பாலானோர் தங்கள் சொந்த வீடுகளைக் கட்டியுள்ளனர் மற்றும் தங்கள் குழந்தைகளுக்குத் தரமான கல்வியை வழங்கியுள்ளனர். இந்தக் குழந்தைகளில் சிலர் பொறியாளர்களாகவும் மாறியுள்ளனர், நகரங்களில் செழித்துத் தங்கள் பெற்றோரின் ஆரம்ப காலக் கனவுகளை மிஞ்சுகிறார்கள். மேலும் எளிமையான தொடக்கத்திலிருந்து குறிப்பிடத் தக்க சாதனைகள் வரையிலான அவர்களின் பயணத்திற்கு சாட்சியாக இருப்பது, நாம் உருவாக்கிய நிதிச் சூழல் அமைப்புக்கு ஒரு சான்றாகும், இது அவர்களுக்குப் பெரும் கனவு காண உதவுகிறது. அவர்களின் வெற்றி உண்மையில் எங்கள் முக்கிய விழுமியங்களை உறுதிப் படுத்துகிறது. இந்த ஊக்கமளிக்கும் தொழில் முனைவோருடன் தரமான நேரத்தை செலவிடுவதில் எங்கள் தலைமை அலுவலக ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அந்த நாள் மறக்க முடியாத தருணங்களால் நிரம்பியது, சைதன்யா அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது. அவர்களின் இடைவிடாத ஆதரவிற்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டவர்களாக இருக்கிறோம் மற்றும் அவர்களின் பார்வைகளை முன்னேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.
பெங்களூர் தலைமையகத்தில் உள்ள எங்கள் ஜூன் மாத டவுன்ஹாலில், பீஹார் மற்றும் கர்நாடகாவிலிருந்து (ஒவ்வொருவரும் எங்களுடன் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடும்) அர்ப்பணிப்புள்ள அணியினருக்கு விருந்தளிக்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. அவர்களின் வருகை, விடாமுயற்சி மற்றும் முன்னேற்றத்திற்கான மனதைக் கவரும் ஒரு சான்றாக இருந்தது, அர்ப்பணிப்பு மற்றும் பின்னடைவின் கதைகளால் நிரம்பியுள்ளது, இது பிராந்தியத்தை அதன் தற்போதைய வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது.
எங்கள் தலைமை அலுவலகக் குழுவிற்கு, தொலைதூரத்தில் உள்ள சக ஊழியர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பாக இது அமைந்தது, அவர்களின் அனுபவங்கள் மற்றும் சவால்கள் பற்றிய மதிப்பு மிக்க நுண்ணறிவுகளைப் பெறுகிறது. பரிமாற்றம் செழுமைப்படுத்தியது, இரு தரப்பினரையும் ஊக்கப் படுத்தியது மற்றும் அவர்களின் அர்ப்பணிப்புக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்த்தது.
இந்த நகர அரங்குகள் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மேற்கொள்ளும் வியக்கத் தக்க பயணங்கள் மற்றும் எங்கள் முயற்சிகளின் கூட்டுத் தாக்கத்தை நினைவூட்டுகின்றன. எங்களின் நேசத்துக்குரிய நீண்ட கால சக ஊழியர்களுக்கு, அவர்களின் பல்லாண்டு கால சேவை, விசுவாசம் மற்றும் ஆர்வத்துக்கு நாங்கள் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் பங்களிப்புகள் எங்கள் அமைப்பை வடிவமைத்துள்ளன, எங்கள் பார்வையில் அசைக்க இயலாத நம்பிக்கையுடன் எங்களை முன்னோக்கிச் செலுத்துகின்றன.
மேலும் பல ஆண்டுகள் ஒன்றாக வெற்றி மற்றும் செழிப்பைக் கொண்டாட நாங்கள் விரும்புகிறோம்.
ஃபீல்ட் டவுன் ஹால் சிறப்பம்சங்கள்
எங்களின் சமீபத்திய மெய்நிகர் (virtual) ஃபீல்ட் டவுன் ஹாலில் கடந்த காலாண்டில் எங்கள் நிறுவன இலக்குகளை அடைவதற்கான எங்கள் கூட்டு முயற்சிகளை சீரமைக்கப் பல முக்கியமான தலைப்புகள் விவாதிக்கப்பட்டன. எங்கள் வணிகச் செயல்பாடுகள், குறிப்பிடத் தக்க நிறுவன மைல்கற்களின் சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி வியூகங்கள் பற்றிய அறிவிப்புகள் விவாதிக்கப்பட்டன.
சிறந்த திறமையாளர்களை நாங்கள் தொடர்ந்து ஈர்ப்பதையும் தக்க வைத்துக் கொள்வதையும் உறுதி செய்வதற்காக எங்கள் மனிதவளத் திட்டமிடல் பற்றிய விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. எங்கள் நிறுவனத்தின் பணி மீண்டும் வலியுறுத்தப்பட்டது, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை நிதி உள்ளடக்கத்துடன் மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது. கூடுதலாக, நாங்கள் மத்திய உதவி மையத்தை அறிமுகம் செய்தோம், இது அனைத்துக் கிளைகளிலும் துணை நிற்பதை மேம்படுத்துதல் மற்றும் தகவல் தொடர்புகளை நெறிப்படுத்துதலை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய முயற்சியாகும். இந்த அமர்வில் ஒரு நேரடிக் கலந்துரையாடல் கேள்வி - பதில் அமர்வையும் உள்ளடக்கியது, இதில் HOD’s மற்றும் ஆனந்த் ஸார் (JMD) PAN இந்தியா முழுவதும் உள்ள ஊழியர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர், ஒரு பகிரப் பட்ட புரிதலை வளர்த்து, முதன்மை அடைதல் மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கான எங்கள் அர்ப்பணிப்பை வலுப்படுத்தினர்.
நினைவில் கொள்ள வேண்டிய இரவு: HO இல் எங்கள் ஆண்டிறுதிக் கொண்டாட்டம்
மே 24, 2024 அன்று, எங்கள் பெங்களூர் நிறுவனம் மறக்க முடியாத ஆண்டிறுதிக் கொண்டாட்டத்தை நடத்தியது. இந்த நிகழ்வானது திறமை, பொழுதுபோக்கு மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றின் சரியான கலவையாக இருந்தது, இது அனைத்து HO சைதன்யா குடும்பத்தினருக்கும் நினைவில் கொள்ள வேண்டிய இரவாக அமைந்தது.
எங்கள் இணை நிர்வாக இயக்குநர் திரு.ஆனந்த் ராவ் அவர்களின் இதயத்தைத் தூண்டும் உரையுடன் மாலை தொடங்கியது. அவரது பேச்சில் ஆண்டு முழுவதும் அணியின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அவர் பாராட்டினார், எங்கள் கூட்டு சாதனைகள் மற்றும் எங்களை முன்னோக்கித்தள்ளும் உணர்வை எடுத்துக் காட்டுகிறது. கடந்த நிதியாண்டில் சிறந்து விளங்கிய ஊழியர்களுக்கும், சைதன்யாவுடன் ஐந்தாண்டுகளை நிறைவு செய்தவர்களுக்கும் பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த அங்கீகாரம் தனிப்பட்ட சாதனைகளை மட்டுமல்ல, எங்கள் அணியினரின் நீடித்த அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்தையும் கொண்டாடுகிறது.
அந்த இரவானது அனைவரையும் கவர்ந்த மெல்லிசை ட்யூன்களுடன் உயிர்ப்புடன் இருந்தது. லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் வெற்றியாளரின் மனம் மயக்கும் கரக நிகழ்ச்சி, நம் நாட்டின் வளமான கலாசாரப் பாரம்பரியத்தை வெளிப் படுத்திப் பார்வையாளர்களை மனம் மயங்கச் செய்தது. மாலைப் பொழுதை இனிதாக்கி, எங்கள் சொந்த மனிதவளக் குழு உறுப்பினர்கள் ஒரு தனித்துவமான மைம் செயலை வழங்கினர், இது கிராமப்புற இந்தியாவின் எண்ணற்ற வாழ்க்கையை சைதன்யா எவ்வாறு நல்ல முறையில் பாதிக்கிறது, அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குகிறது என்பதை அழகாகச் சித்தரித்தது. இந்த செயல்திறன் அனைத்து சைதன்யா குடும்பத்தினரிடமும் நீடித்த நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது, அற்புதமான படைப்பு வெளிப்பாடு மூலம் எங்கள் நோக்கம் மற்றும் விழுமியங்களை விளக்குகிறது.
இந்தத் தகவல்தொடர்பு வழிமுறைகளின் மூலம், உங்களுடன் தினசரி தொடர்பு கொள்ள விரும்புகிறோம். எங்கள் நிறுவனத்தில் காலாண்டுக்கு ஒருமுறை லேட்டஸ்ட் அப்டேட்ஸ் குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்துவதே எங்கள் நோக்கம். கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் குழுவானது @சைதன்யாவுடனான பயணத்தை எங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் சக ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
உங்கள் குழுவின் செயல்பாடுகளின் படங்கள், கள ஆய்வில் கண்ட சுவாரஸ்யமான விஷயங்கள், கதைகள், குறிப்பிடத்தக்க வாடிக்கையாளருடனான சந்திப்பு அல்லது நீங்கள் கண்ட சிந்தனையைத் தூண்டும் விஷயங்கள் குறித்த கட்டுரை போன்ற சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஏதேனும் உங்களிடம் இருந்தால், எங்களுக்கு communication@chaitanyaindia.in என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம். எதிர்காலத்தில் உங்களிடம் இருந்து கூடுதல் பங்களிப்புகளை பெற நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.