About The Event

மாநாட்டு நோக்கங்கள்

15th World Tamil Teachers Conference 2024 June 1, 2, 3 


Co-hosted by

Canadian Tamil Sankam 

Padimurai Tamil Federation, 

World Tamil Teachers Organization

Active Brain Center

Department of Historical and Cultural Studies, University of Toronto Scarborough 

 

 

Tamil language is being taught in many countries around the world today. Since 1993, World Tamil Teachers Organization with its headquarters in Singapore has been continuously organizing this World Tamil Teachers Conference in various countries, in collaboration with the Tamil educational institutions in those countries.

 

Canadian Tamil Sankam has developed a new level-by-level Tamil teaching method which is easy, simple, and delightful. Many teachers around the world have been receiving training from Canadian Tamil Sankam in this method, and as a result, it has been proven very successful and more and more Tamil Schools from various countries are now requesting and started to follow this method. As a result, we have created an organization called Padimurai Tamil Federation which includes world-wide institutions who follow this method as members of this organization.

 

We are proud to say that this World Tamil Teachers Conference of Padimurai Tamil Federation, conducted by Canadian Tamil Sangam, would be the very first time of such to take place in Canada. World Tamil Teachers Organization will also join hands with us in executing this initiative. We are anticipating 500+ Tamil teachers to attend this conference, out of which, 300 of them will be attending from various countries, such as Australia, Singapore, Malaysia, Tamil Nadu, Mauritius, European countries, South Africa, etc.

 

We kindly request the support of all ardent supporters and well wishers of the Tamil Community in making this World Tamil Teachers Conference a success for the better development of Tamil Language and to pass it on to our future generations with ease.

15ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு 2024 யூன் 1, 2, 3.

கனடியத் தமிழ்ச்சங்கம்
படிமுறைத்தமிழ் ஒன்றியம்
உலகத் தமிழ் ஆசிரியர் பேரவை
Active Brain Center

Department of Historical and Cultural Studies, University of Toronto Scarborough

இணைந்து நடத்தும்


தமிழ்மொழி உலகிலுள்ள பல நாடுகளில் இன்று கற்பிக்கப்பட்டு வருகின்றது. சிங்கப்பூரைத் தலைமை

அலுவலகமாகக் கொண்ட உலகத் தமிழ் ஆசிரியர் பேரவை, 1993ஆம் ஆண்டுமுதல் பல்வேறு நாடுகளிலும்,

அந்நாடுகளில் உள்ள கல்வி நிலையங்களுடன் ஒன்றிணைந்து இம்மாநாட்டைத் தொடர்ந்து நடத்தி

வருகின்றது.

கனடியத் தமிழ்ச்சங்கமானது இலகு, எளிமை, இனிமை கொண்ட படிமுறைத் தமிழ் எனும் புதிய கற்பித்தல்

முறையை உருவாக்கி, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தலின் பயனாக - இன்று உலகின் பல்வேறு

நாடுகளும் இம்முறையை ஆவலுடன் பின்பற்றத் தொடங்கியுள்ளன. ஆதலால் உலகில் இக்கற்பித்தல்

முறையைப் பின்பற்றும் கல்விநிலையங்களை அங்கத்தவர்களாகக் கொண்ட படிமுறைத்தமிழ் ஒன்றியம்

எனும் அமைப்பை உருவாக்கி உள்ளோம்..

கனடாவில் முதன்முறையாக நடக்கவிருக்கும் இம்மாநாட்டை படிமுறைத்தமிழ் ஒன்றியம்

முன்னெடுக்கிறது. அதனோடு உலகத் தமிழாசிரியர் பேரவையும் இணைந்து செயற்படும். 500க்கு மேற்பட்ட

ஆசிரியர்கள் கலந்துகொள்ளும் இம்மாநாட்டில் அவுஸ்ரேலியா, சிங்கப்பூர், மலேசியா, தமிழ்நாடு,

மொறிசியஸ், ஐரோப்பிய நாடுகள், தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து 300க்கு மேற்பட்ட

ஆசிரியர்கள் பங்குபற்ற உள்ளார்கள்.

தமிழ்மொழி வளர்ச்சியிலும், அடுத்த தலைமுறையினரிலும் அக்கறையுள்ள சகலரும் இம்மாநாடு சிறப்பாக

அமைய ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டுமெனத் தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்.

இலக்கியப் பேச்சாளரும், நடிகருமான திரு. சிவக்குமார் அவர்களைச் சந்தித்து கனடாவில் நடக்கவிருக்கும் ஆசிரியர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தோம்.

Dr. E.J. sundae, MA. PhD. Head Tamil Dept. அவர்களை யும்  பேராசிரியர் பாரதி அவர்களையும் சந்தித்து அழைப்புக் கொடுக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர்சங்கத்தலைமைப் பணிமனையில் அதன் தலைவர் திரு. இரங்கநாதனைச் சந்தித்து கனடா ஆசிரியர் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தேன்.

Dr.A.Rajeswari, Head of Curriculum planning and Evaluation. Tamil Nadu Teachers  Education university. அவர்களை யும் சந்தித்து அழைப்பு கொடுக்கப்பட்டது

திராவிட இயக்கத் தமிழ்ப்பேரவைத் தலைவரும, தமிழீழ ஆதரவாளருமாகிய பேராசிரியர் சுபவீ. அவர்களுக்கு மாநாட்டுக்கான அழைப்பு க் கொடுக்கப்பட்டது

மொரிசியஸ். ஆசிரியர் மாநாட்டில்  அடுத்தமாநாடு கனடாவில் நடைபெறும் என்பதை உலகத் தமிழாசிரியர் சங்கத்தலைவர் திரு சாமிக்கண்ணு. திரு. இராசரத்தினம் என்போர. வெளியிட்டனர்

மலேசிய நாட்டின் தமிழ்க் கல்வி இயக்குனர்
திரு. செங்குட்டுவன் வரவேற்று ஆசிரியர் களுக்கான பட்டறையைத் தொடக்கி வைத்தார்

இவ்வாண்டிற்கான சிறந்த கல்விச்சேவையாளருகான தமிழக அரசின் விருது படிமுறைத்தமிழ் ஒன்றியத் தலைவர் திரு. பரமநாதனுக்கு வழங்கப்பட்டது

இம்மாநாட்டில் பங்குபற்றுவோர், கட்டுரைபடிப்போர், தொண்டராகப் பணியாற்றுவோர் சகலருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.