தேங்கியே நீர் என்றும் தித்தித்ததில்லை.

அது குட்டையானாலும் சரி, கடலானாலும் சரி.

ஓடு.. அது நீரோடையோ ஆறோ பெருவெள்ளமோ,

ஆனால் ஓடிக்கொண்டேயிரு..

நாவல் புத்தகங்களும் , நாவல் பழங்களும்..... ,

மரத்திலும் , மரத்திலான காகிதத்திலும் ,

அழகுற படைக்கபெற்று ,

மரத்தடியிலும் , மரஅலமாரியிலும் ,

புழுதியும் , தூசும் படிந்து கிடக்கும் ,

அவற்றை , கையில் எடுத்து ,

மண் , தூசுகளை ஊதித்தள்ளி ,

புசித்தறிந்தாலன்றி ,

அதனுள் ஒளிந்திருக்கும் விதைகள் புலப்படாது .

அவ்விதைகள் ,

மண்ணில் மரங்களையும் , மனிதமனங்களில் நல்லெண்ணங்களையும் ,

உருவாக்கும் உந்துதல் உடையன !

அவற்றை உண்டு உணர்க!!!