வானம் வசப்படும் மாணவர் அமைப்பின் மூன்றாவது சிறப்பு நிகழ்ச்சி இதுவே ஆகும். மறுநாள் வரவிருக்கும் மகளிர் தினத்தை எதிர்பார்த்து முந்தைய தினம் மார்ச் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தொடங்கும்போதே 100பேர் கூடியிருந்து கூகுள் மீட்டின் அவை நிறைந்தது.
வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரி, ரீட்டா வரவேற்புரையால் விழாவிற்கு வருகைப் புரிந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி லீமா கெட்ஸி அமலினி அவர்கள் மகளிர் தின சிறப்புரையை வழங்கினார்கள்.
"பெண்ணாய்ப் பிறந்தது பிழையா" என்னும் தலைப்பில் குரு நானக் கல்லூரியைச் சார்ந்த வர்ஷா கவிபாடினார்.
மாணவிகளாய் நாங்கள் என்னும் தலைப்பின் ஆசியா அப்துல்லா தனது சிற்றுரையைத் தொடங்கினார்.
சிற்றுரையின் முடிவில் அனைவரையும் புதுப்பிக்கும் விதமாக மீண்டும் ரீட்டா அவர்கள் மேடை ஏறி "நதியே நதியே" என்னும் பெண்ணியப் பாடலைப் பாடினார்கள். இதனால் அவையில் சிறிது நேரம் அமைதி சூழ்ந்தது.
விழாவில் அனைவரும் காத்திருந்த பகுதியான அறிவியல் தினம் அன்று நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியின் முடிவுகள் ரமேஷால் அறிவிக்கப்பட்டது.
தனது நன்றியுரையால் விக்னேஷ் நிகழ்வை நிறைவாக்கினார். நாட்டுப்பண் இசைக்கப்பட்டப்பின் கலைந்து சென்றோம்.
மாலை 6:10 மணி அளவில் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
நிகழ்ச்சி முழுவதையும் சரண்யா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சி முழுவதும் தமிழில் நடத்தப்பட்டது.