திருமூலரால் சிவபூமி என்று வர்ணிக்கப்பட்ட உயர் சைவ இலங்கைத் திருநாட்டின் வடபால் அமைந்த வடமாகணத்தின் வாசல் என அறியப்படும் வன்னி மாநகரின் தலைநகராக விளங்கும் வவுனியா மாவட்டத்தின் உக்குளாங்குளம் திவ்ய பதியிலே எழுந்தருளி அருள்பாலிக்கும் மீனாட்சி அம்பிகை சமேத சுந்தரேஸ்வர பெருமான் திருக்கோவில்.
இலங்கையில் உள்ள ஒரே ஒரு பஞ்சமுக சிவலிங்க அருவுருவத் திருமேனியிலே அப்பனும், பாண்டிவள நாட்டிலே அவதரித்து தமிழர்களுக்கு அரசியாக ஆட்சி செய்த மங்கையாக மீனாட்சி தேவியாக அம்மையும் அருள் கடாட்சம் செய்கின்ற திருத்தலம்.